வாழ்க்கைத் தொழிற்கல்வி பட்டப் படிப்புகள்! எங்கே? எங்கே?

தமிழ்நாட்டில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் அலங்காரத் தொழில்நுட்பம் (Fashion Technology),
வாழ்க்கைத் தொழிற்கல்வி பட்டப் படிப்புகள்! எங்கே? எங்கே?

தமிழ்நாட்டில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் அலங்காரத் தொழில்நுட்பம் (Fashion Technology), மென்பொருள் வளர்ச்சி (Software Development), சிதம்பரம், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மருத்துவமனைக் கருவியியல் மற்றும் மேலாண்மை (Hospital Instrumentation and Management), உணவாக்கத் தொழில்நுட்பம் மற்றும் உணவக மேலாண்மை (Catering Technology and Hotel Management), கோயம்புத்தூர், பாரதியார் பல்கலைக்கழகத்தில் வணிகச் செயல்முறை மற்றும் தரவுப் பகுப்பாய்வியல் (Business Process and Data Analytics), பல்லூடகம் மற்றும் அசைவூட்டம் (Multimedia and Animation), சென்னை கிறித்தவக் (தன்னாட்சி) கல்லூரியில் சில்லறை வணிக மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பம் (Retail Management and IT), விருந்தோம்பல் மற்றும் சுற்றுலா (Hospitality and Tourism), கோயம்புத்தூர் பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லூரியில் விருந்தோம்பல் மேலாண்மை (Hospitality Management), உணவு தயாரிக்கும் முறைத் தொழில்நுட்பம் (Food Processing Technology), கோயம்புத்தூர், பி.எஸ்.ஜி.ஆர்.கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் அழகியல் சிகிச்சை மற்றும் கலைநயம் (Beauty Therapy and Aesthetics), வளர்ச்சி மற்றும் அமைப்பு நிர்வாகம் (Development and System Administration), ஆடை வடிவமைப்பு (Garment Designing), திருச்சிராப்பள்ளி, புனித ஜோசப் மகளிர் கல்லூரியில் மென்பொருள் வளர்ச்சி மற்றும் அமைப்பு நிர்வாகம் (Software Development and System Administration), காட்சித் தொடர்பியல் தொழில்நுட்பம் (Visual Communication Technology), கோயம்புத்தூர் அவினாசிலிங்கம் மனையியல் பல்கலைக்கழகத்தில் மருத்துவக் கருவித் தொழில்நுட்பம் (Medical Equipment Technology), உணவுத் தயாரிப்பு மற்றும் பொறியியல் (Food Processing and Engineering), பண்ணைக் கருவி இயக்கம் மற்றும் பராமரிப்பு (Farm Equipment Operation and Maintenance), திண்டுக்கல், காந்திகிராமம் கிராமியப் பல்கலைக்கழகத்தில் காலணி மற்றும் துணைக்கருவிகள் வடிவமைப்பு (Footwear and Accessories Design), பால் உற்பத்தி மற்றும் தொழில்நுட்பம் (Dairy Production and Technology) எனும் தொழிற்பிரிவுகளில் வாழ்க்கைத் தொழில் இளநிலைப் பட்டப்படிப்புகள் (Bachelor of Vocation) தொடங்கப்பட்டிருக்கின்றன. இந்த ஆண்டு முதல், தமிழ்நாட்டிலிருக்கும் மேலும் சில பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் புதிய தலைப்புகளிலான இளநிலை வாழ்க்கைத் தொழிற்பட்டப் படிப்புகள் தொடங்கவிருக்கின்றன. இது போல், தமிழ்நாட்டிலிருக்கும் பல்வேறு கல்லூரிகளிலும் வாழ்க்கைத் தொழிற் பட்டயப் படிப்புகள், சான்றிதழ் படிப்புகளும் தொடங்கப்பட்டிருக்கின்றன.

-மு. சுப்பிரமணி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com