விண்ணைத் தொடும் வேலை வாய்ப்புகள்!

இந்திய பயணிகள் விமானப் போக்குவரத்துத் துறை தற்போது மிக வேகமாக வளர்ந்து வருகிறது. ரூ. 1600 கோடி மதிப்பில் உலகில் 9-வது பெரிய விமானப் போக்குவரத்துச் சந்தையாக உள்ள
விண்ணைத் தொடும் வேலை வாய்ப்புகள்!

இந்திய பயணிகள் விமானப் போக்குவரத்துத் துறை தற்போது மிக வேகமாக வளர்ந்து வருகிறது. ரூ. 1600 கோடி மதிப்பில் உலகில் 9-வது பெரிய விமானப் போக்குவரத்துச் சந்தையாக உள்ள இது, வரும் 2020-இல் உலகின் 3-வது பெரிய சந்தையாகவும், 2030-இல் உலகின் முதல் மிகப் பெரிய சந்தையாகவும் உருவெடுக்கும் வகையில் முன்னேறி வருகிறது.

விமானப் போக்குவரத்துத்துறை குறைந்த கட்டணத்தில் பயணிகள் மற்றும் சரக்குப் போக்குவரத்து, நவீன விமான முனையங்கள்,  உள்நாட்டுப் போக்குவரத்து, மண்டலங்கள் இணைப்பு மற்றும் அதிநவீன தகவல் தொழில்நுட்பங்கள் ஆகியவற்றை அறிமுகப்படுத்தி வருகிறது. வருங்காலத்தில் இந்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை உலகின் முதல் மிகப்பெரிய சந்தையாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு துறை வளர்ச்சியடையும் போது, அதற்கேற்ப அதில் வேலைவாய்ப்புகள் தோன்றுவதும் இயல்பாக நடைபெறக் கூடியது. அந்தவகையில், இந்திய விமானப் போக்குவரத்துத் துறை வேலைவாய்ப்பு மிக்க துறையாக உருவெடுத்துள்ளது.

இதையொட்டி, இந்தியாவின் முன்னணி நிறுவனங்களான Frankfinn Institute of Airhostess Training, Aptech Aviation and the Hospitality Academy, The Jet Airways Training Academy, IIFLY Institute for Aviation போன்றவற்றில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இவை தில்லி, மும்பை, பெங்களூரு ஆகியவற்றைத் தலைமையிடங்களாகக் கொண்டு செயல்பட்டாலும், இவற்றில் சிலவற்றின் கிளைகள் சென்னை, கோயம்புத்தூர் போன்ற இடங்களிலும் இருக்கின்றன.

விமானப் போக்குவரத்துத்துறை தொடர்பாக, BBA - Airport Management, B.Sc., Aviation, Diploma in  Airport Management, Group Staff and Cabin Crew Training,  Aviation Hospitality, Airfare and Ticketing Management உள்ளிட்ட கோர்ஸ்கள் உள்ளன. 

இதில், BBA,  B.Sc., ஆகிய கோர்ஸ்கள் 3 ஆண்டுகளைக் கொண்டது. இதில் சேர கணிதம், இயற்பியல் பாடங்களுடன் பிளஸ் - 2-வில் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

Airport Manager, Administrator, Staff Manager,Air Traffic control, Safety Management and Technical Ground Operators போன்ற பதவிகளில் வேலை கிடைக்கும். MBA, M.Sc., PG Diploma போன்ற உயர்கல்வி வாய்ப்புகள் உள்ளன. சராசரி தொடக்கநிலை ஊதியம் ஆண்டுக்கு ரூ. 3-6 லட்சமாக இருக்கும்.

டிப்ளமா கோர்ஸ்கள் பெரும்பாலும் 6 மாதங்கள் முதல் ஓராண்டு கொண்டதாக இருக்கும். இவற்றில் Group Staff and Cabin Crew Training கோர்ஸ் முக்கியமானது. இதில் Airhostess, Steward on Flights போன்ற பணிகளுக்கு பயிற்சி அளிக்கப்படும். டிப்ளமோ கோர்ஸ் அனைத்துக்கும் பிளஸ் 2 தான் அடிப்படை தகுதி. என்றாலும், ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்து டிப்ளமோ படித்தால், உயர்கல்வி, ஊதிய உயர்வு போன்றவற்றுக்கு எளிதாக இருக்கும். டிப்ளமோ முடித்தவர்கள் தாங்கள் படித்த டிப்ளமோவுக்கு ஏற்ப HtT Airport Manager, Assistant Manager, Corgo Department Manager, Air Hostess, Steward, Front end office Operator, Cabin Crew, Ground Staff Office Operator  போன்ற பணிகளில் சேரலாம். தொடக்க நிலை ஊதியமாக ஆண்டுக்கு ரூ. 2 லட்சம் முதல் 4 லட்சம் வரை கிடைக்கும். 

சென்னையில் வேல்ஸ் பல்கலைக்கழகம், பாரத் பல்கலைக்கழகம், ஹிந்துஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மற்றும் சயின்ஸ் ஆகியவற்றில் B.Sc.- Aviation கோர்ஸ் உள்ளது. ஆண்டு கட்டணம் ரூ. 35 ஆயிரம் முதல் 45 ஆயிரம் வரை இருக்கலாம். மேலும் Annai Indira Air Hostess Training Academy-Nagercoil, Quaid-e-Millath Govt. college for women- Chennai, Air Carnivel Aviation Academy-Coimbatore, Airwings International Academy-Trichy, Akbar Academy-Chennai ஆகிய இடங்களிலும் விமானப் போக்குவரத்துத் துறை தொடர்பான கோர்ஸ்கள் உள்ளன.

முன்னணி நிறுவனங்களில் ஏவியேசன் கோர்ஸ் முடித்தவர்களை நம் நாட்டு விமான நிறுவனங்கள் மட்டுமல்லாமல், சர்வதேச அளவில் விமானங்களை இயக்க வரும் வெளிநாட்டு நிறுவனங்களும் தேடிவந்து பணிவாய்ப்பை வழங்குகின்றன. புதிய நிறுவனங்கள் மட்டுமல்லாமல், ஏற்கெனவே சந்தையில் உள்ள Indigo, The Go Air, The Singapore Airlines  உள்ளிட்ட சர்வதேச  விமான நிறுவனங்கள், இந்திய முன்னணி நிறுவனங்களில் பயிலும் திறமையான பட்டதாரிகளை வேலையில் அமர்த்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.
  - இரா.மகாதேவன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com