ஒரு புதிய வேலை வாய்ப்பு!

ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் செய்ய பயிற்சி பெற்றவர்களுக்கு வேலை மற்றும் தொழில் வாய்ப்புகள் காத்திருக்கின்றன.
ஒரு புதிய வேலை வாய்ப்பு!

ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் செய்ய பயிற்சி பெற்றவர்களுக்கு வேலை மற்றும் தொழில் வாய்ப்புகள் காத்திருக்கின்றன.  மத்திய அரசு  ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரியை  நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ளது. ஜிஎஸ்டி வரி அமலாக்கத்தினால் தொழில் முனைவோர் மற்றும் வியாபாரிகளுக்கு கூடுதல் பணிப் பளு ஏற்பட்டுள்ளது.  ஏனெனில் இச்சட்டத்தின் கீழ் விற்பனை செய்வதற்கும், கொள்முதல் செய்வதற்கும் வழங்கப்படும் பில்லை ஆன்லைன் மூலம் மாதந்தோறும் தாக்கல் செய்வதில் பல்வேறு நடைமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
அதனால் தொழில் முனைவோர், வியாபாரிகள் மட்டுமல்லாது, கணக்காளர்கள், கணக்கு தணிக்கையாளர்கள் என பல தரப்பினருக்கும் கூடுதல் பணிப்பளு ஏற்பட்டுள்ளது.  இதன் காரணமாக ஜிஎஸ்டி கணக்குகளைத்  தாக்கல் செய்வதற்கு காலதாமதம் ஏற்படுகிறது.  அதோடு மட்டுமல்லாமல், கணக்குகளை தாக்கல் செய்யும் போது நெட்வொர்க் பிரச்னை காரணமாக கணக்குகளை தாக்கல் செய்ய முடியாமலும் போகின்றது. 
இத்தகைய சூழ்நிலையில் ஜிஎஸ்டி கணக்குகளை ஆன்லைனில் தாக்கல் செய்வதற்கான பணியைச் செய்ய கூடுதல் ஆட்கள் தேவைப்படும் நிலை உருவாகியுள்ளது.  அதனால் ஜிஎஸ்டி குறித்த பயிற்சி பெற்றவர்கள் தேவைப்படுகின்றனர்.   அவ்வாறு பயிற்சி பெற்றவர்கள், கணக்காளர்கள், கணக்கு தணிக்கையாளர்களிடம் வேலை வாய்ப்பு பெற்று வருவாய் ஈட்டலாம்.

அதே சமயத்தில் தாங்களே ஜிஎஸ்டி கணக்குகளை தாக்கல் செய்யும் சுய தொழிலை தனிப்பட்ட முறையில் தொடங்கி தொழில் முனைவோர், வியாபாரிகள், கணக்காளர்கள், கணக்கு தணிக்கையாளர்களிடமிருந்து அவுட் சோர்சிங் முறையில் கணக்கு விவரங்களைப் பெற்று கணக்குகளை ஜிஎஸ்டி இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் தாக்கல் செய்து கொடுத்து வருவாய் ஈட்டுவதற்கு அதிக வாய்ப்புகள் காத்திருக்கின்றன. 
எனவே பல்வேறு அமைப்புகளால் நடத்தப்படும் ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் குறித்த பயிற்சியைப் பெற்றுக் கொள்ளலாம்.  ஜிஎஸ்டி இணையதளத்தில் கூட கணக்கு தாக்கல் செய்வதற்கான வழிமுறைகள் விரிவாக விளக்கப்பட்டுள்ளன.    ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் செய்வதற்கான பயிற்சிகள் குறித்து இணைய தளங்கள் மூலமும் தெரிந்து  கொள்ளலாம்.  ஆன்லைனிலும் ஜிஎஸ்டி குறித்த பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. 
மேலும் விவரங்களுக்கு:
1.    https://cleartax.in/s/gst-training
2.    https://www.apnacourse.com/course/goods-and-service-tax-gst
3.    https://www.vskills.in/certification/accounting-banking-and-finance/gst-professional
4.    http://www.cbec.gov.in/htdocs-cbec/gst/gst-training
5.    https://www.gstcentre.in/gst_centre.php
6.    https://www.gstcentre.in/
7.    http://gst.ictacademy.in/
8.    https://www.gstprofessionals.com/training-course/
9.    https://yourstory.com/read/ea14195480-gst-certification-course
10.    http://www.aiatindia.com/gst-training-in-india
11.    https://www.learngstindia.com/
12.    https://www.agamedu.in/2017/07/06/gst-coaching-classes-training-institutes-academies/
- எம்.அருண்குமார்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com