கண்டதும் கேட்டதும் 21 - பி.லெனின்

இளங்கோவன்,  திருவாரூர் தாஸ், ஏ.எல்.நாராயணன், மு. கருணாநிதி,  அண்ணாதுரை,  அரங்கண்ணல்,  சொர்ணம்,  கே.எஸ். கோபாலகிருஷ்ணன்,  ஸ்ரீதர்,  டி. பிரகாஷ் ராவ், டி.ஆர். ரகுநாத், ராஜா சாண்டோ
கண்டதும் கேட்டதும் 21 - பி.லெனின்

கதை  வசன கர்த்தாக்கள், இயக்குநர்கள், ஒலிப்பதிவாளர்கள் மற்றும் கவிஞர்கள்:
    இளங்கோவன்,  திருவாரூர் தாஸ், ஏ.எல்.நாராயணன், மு. கருணாநிதி,  அண்ணாதுரை,  அரங்கண்ணல்,  சொர்ணம்,  கே.எஸ். கோபாலகிருஷ்ணன்,  ஸ்ரீதர்,  டி. பிரகாஷ் ராவ், டி.ஆர். ரகுநாத், ராஜா சாண்டோ, ராஜா சந்திரசேகர், எல்லீஸ் ஆர். டங்கன், பி.ஆர். பந்தலு, ஏ.பி. நாகராஜன்,  புட்டண்ணா கனகல்,  ஹெச்.எம்.ரெட்டி, ஆதி நாராயணராவ், வேதாந்த ராகவையா ("மணாளனே மங்கையின் பாக்கியம்' படத்தில் மியூசிக் டைரக்ஷன் செய்தவர்; அது பல மொழிகளில் மொழி மாற்றம் செய்து பல வாரங்கள் வெற்றி நடை போட்டது)  டைரக்டர் வி. சாந்தாராம் ( நம் நாடு, சந்திர சேனா  அல்லது மயில் வாகனம்) மியூசிக் எஸ்.  வெங்கடேசன், ஜி. இராமநாதன், சி.என். பாண்டுரங்கன் (சில்பி),  டி.  ஸ்ரீலிங்கப்பா, சி.ஆர். சுப்பாராமன், கே.வி. மஹாதேவன், டி.ஆர். பாப்பா, ஆர். சுதர்ஸன், விஸ்வநாதன்,  ராமமூர்த்தி,  
சி. சலபதிராவ் மாஸ்டர் வேணு, ஒய்.டி.  பார்த்தசாரதி, எஸ். தட்சிணாமூர்த்தி, ப. தட்சணாமூர்த்தி,  எஸ். ராஜேஸ்வர ராவ்,  வேதாச்சலம் என்ற வேதா, கிருஷ்ணன் பஞ்சு, பீம்சிங், டி.ஆர். சுந்தரம் (மார்டன் தியேட்டர்ஸ், சேலம்),  எஸ்.எஸ். வாசன், ஏவி. மெய்யப்பன், டபிள்யூ.ஆர்.  சுப்பாராவ், ஜோசப் தளியத், எஸ்.வி. வெங்கட் நாயர், எஸ்.கே. ராமு (நாடோடி நண்பன்), வின்சென்ட்,  டி.ஆர். சுந்தரம் (அபூர்வ சகோதரர்கள்) , ஒய்.வி. ராவ், பி.எஸ். ரங்கா (Bhai Bakes),  ஆர். பிரகாஷ்  (மூன்று  பெண்கள்), ஏ.எஸ்.ஏ. சாமி,  எஸ். பாலசந்தர், கே. பாலசந்தர், எம்.வி. ராமன்  (கொஞ்சும் சலங்கை, பட்டணத்தில் பூதம்) கொத்தமங்கலம் சுப்பு,  கே. சோமு (சம்பூர்ண ராமாயணம்)  சி.எச். ராவ், கே. விஸ்வநாதன், என்.எஸ். கிருஷ்ணன், விட்டலாச்சார்யா  (ஸ்பீல் பெர்க்குக்கு முன்பாக மாயா ஜால் கதைகளை எடுத்தவர்;ஆனால் அவரை என்னப்பா விட்டலாச்சார்யா போல கதையில புருடா விடறியே என்று பரிகசிக்கப்பட்டவர்), ப. நீலகண்டன், ஏ. சுப்பாராவ், தாதாமிராஸி, எல்.வி. பிரசாத், கே.எஸ். பிரகாஷ்ராவ், ஏ. காசிலிங்கம், முருகதாஸ்,  (ஏ.ஆர். முருகதாஸ் அல்ல)   சி.எச். நாராயணமூர்த்தி, கவி.க.மு. ஷெரீப்,  டி.ஆர். ராமண்ணா, ஆர். புல்லையா, கே.ராம்நாத்,  எம்.பி.  சீனிவாசன்,  எஸ்.எம்.  சுப்பையா நாயுடு,  சி.எஸ். ஜெயராமன், கண்டசாலா,  டி.வி. ராஜி,  பி. கோவிந்த  ராஜுலு நாயுடு, (கள்வனின் காதலி) பத்மநாப சாஸ்திரி, எம்.வி. ராமன், இளங்கோவன், லட்சுமணதாசு,  சக்தி, கிருஷ்ணசாமி,  எஸ்.டி.  சுந்தரம், விந்தன், எம்.எஸ். சோலைமலை, கண்ணதாசன்,  டி.ஆர்.ஆர். (ஏவிஎம்மின் தாசில்தார் என்ற படம்) ஜி.கே.நாதன், கர்ணன் (Western Classic)  ஆர்.ஆர். சந்திரன், எம்.எம். சேகர், ரவிகாந்த் நிகாய்ச், மஸ்தான், விட்டல் ராவ், ஜித்தன் பானர்ஜி, கே. தம்பு, மாருதி ராவ், சுந்தர் ராவ்  நட்கர்னி  (மராட்டிக்காரர்)  (ஹரிதாஸ், மகாதேவி படத்தின் டைரக்டர்)  (அதில் ஹரிதாஸ் மூன்று வருடம் தொடர்ந்து ஓடியது) 
  "இதெல்லாம் ஏன் சார் சொல்லிகிட்டு இருக்கீங்க? இவங்களை எல்லாம் யார் ஞாபகம் வைச்சுக்க போறாங்க?  இதெல்லாம் செவிடன் காதுல ஊதுன சங்குதான். "பாறையை மண்டையால முட்டினா பாறை உடையாது. மண்டை உடைந்து ரத்தம்தான்  வரும்' என்று சில பேர் கூறுவது என் காதில் விழுகிறது.
  செவிடன் காதில் இப்பொழுது ஹியர் போன் வைத்தால் காது நிச்சயம் கேட்கும். தலையில் தலை கவசம் வைத்துக்கொண்டு இடித்தால் ரத்தம் வராது.
 ஊதுவதை ஊதிக்கொண்டே  இருப்பேன்.
இடிப்பதை இடித்துக் கொண்டே இருப்பேன்.
நான் எனது இசைப் பேராசிரியர் சம்பந்தமூர்த்தி ஆச்சாரியரைப் பற்றி கூறப் புகும் முன் அவரது தந்தையாரைப் பற்றி சில பதிவுகளை எழுத ஆசைப்படுகிறேன்.
  அவர் கிருபானந்த வாரியார் சுவாமிகளால்  "திருநாவுடையார்'   என்ற பட்டம் பெற்றவர். அதோடுகூட வாரியார் சுவாமிகளின் திருநாவால்  "ஆச்சாரியார் போல இனி யாரும் பாடப் போவதுமில்லை. அவரின் சங்கீத ஞானத்துடன் பிறக்கப் போவதுமில்லை' என்று புகழப்பட்டவர்தான் எனது இசை ஆசானின் தந்தையரான  திருநாவுடையார் டி.எம். அப்பாதுரை ஆச்சாரியார் ஆகும்.
  அவர் அந்தக் காலத்தில் தேவாரம், திருப்புகழ் எனும் தமிழினை தூக்கிப் பிடித்த சங்கீத குணம் கொண்ட பாடல்களை அவருக்கே உரிய வகையில் பாடுவதில் வல்லவர். மிகப் பெரிதான சாது போன்ற வாழ்க்கை வாழ்ந்தவர்.
 அவருக்கு மகனாகப் பிறந்து தனது சொந்த விவரங்களை வைத்தே 18 இசை நூல்களை எழுதிப் புகழ் பெற்றவர்தான் எனது இசை ஆசான் வேலூர் இசைப் பேராசிரியர் டி.ஏ.  சம்பந்தமூர்த்தி ஆச்சாரியார் ஆவர்.
ஆச்சாரியார் அவர்கள் எனது தந்தை டைரக்டர் பீம்சிங் அவர்களுக்கும், டைரக்டர்கள் கிருஷ்ணன் பஞ்சு அவர்களுக்கும் மிகவும் நெருக்கமானவர் என்பதால் எனக்கு சங்கீதம் கற்றுத் தர ஒப்புக்கொண்டு எனது வீட்டிற்கு வருவார்.
 அவரது தந்தையோ மிகவும் சாது போன்ற வாழ்வு வாழ்ந்து வந்தவரென்றால் எனது குருவோ சங்கீதத்தில் முரடர். உணவு விஷயத்திலும் அசைவப் பிரியர். எங்களது வீட்டிற்கு எனக்கு இசைப் பயிற்சி அளிக்க வரும் சமயமெல்லாம் எனது அம்மா அவருக்கு என்ன என்ன வகையெல்லாம் பிடிக்குமோ அதையெல்லாம் செய்து கொடுத்து மகிழ்வார். அதில் அவருக்கு ஆட்டின் ஈரல் மிகவும் பிடித்தமான உணவு. அதனை எனது அம்மாவும் தவறாமல் செய்து வைத்து விடுவார். நானோ எனது 14-ஆவது வயதிலேயே அசைவத்தைத் துறந்து சைவத்தில் நுழைந்துவிட்டவன். நானும் அவருடன் அமர்ந்து எனக்கான காய்கறி உணவு வகைகளைச் சுவைத்து மகிழ்வேன்.
  எனது ஆசான் நன்றாகச் சாப்பிட்டவுடன் ஒரு மணி நேரம் எனது வீட்டிலேயே படுத்து நிம்மதியாகத் தூங்கி விடுவார்.

டி.ஏ. சம்பந்தமூர்த்தி ஆச்சாரியார் அவர்கள் தமிழிசை நிகழ்ச்சிகளை மிக அதிகமாகப் பாடி புதுமையும் புரட்சியும் செய்தவர். இவர் மிகப் பெரிதாக மதிக்கும் காலம் சென்ற மதுரை மாரியப்ப சுவாமிகளும் தமிழிசையையே உயிர் மூச்சாக, நோக்கமாக, கொள்கைரீதியாக இருந்து வாழ்ந்து மறைந்தவர்.
 இசையரசு தண்டபாணி தேசிகர் அவர்கள் தமிழிசையிலே அவரது எண்ணமும் நோக்கமும் இருந்தாலும்கூட ஒருசமயம் ரேடியோ சங்கீத சம்மேளனத்தில் தெலுங்கு க்ருதி "சங்கீத ஞானமு' ,
தன்யாசி ராகத்தில் பாடியதை நான் கேட்டுள்ளேன். இது எப்படி கொள்கை ரீதியாகும்?
  ஆச்சாரியார் அவர்கள்  பல தமிழிசை நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டு இருந்தாலும், சினிமாவிலும் தனது இசை அரங்கேற்றத்தை பல அறிஞர்கள் பாராட்டும்படி நடத்தி இருந்தாலும் பணத்தை ஒரு குறிக்கோளாக நினைக்காதவர் என்பது பலர் அறிந்த விஷயம்.
இதற்கு உதாரணம்:
 "கொஞ்சும் சலங்கை' திரைப்படத்தில் புகழ்பெற்ற பாடலான,  "சிங்கார வேலனே தேவா'  எனும் பாடலின் மெட்டுக்கு உரிமையாளர் எனது ஆசான் டி.ஏ.  சம்பந்தமூர்த்தி ஆச்சாரியார்  ஆகும். இந்தப் படத்தில் நாதஸ்வரம் வாசித்த இசைக் கலைஞர் காருகுறிச்சி அருணாசலம் அவர்களுக்குப் படம் வருவதற்கு முன்பே, "மந்திரமாவது நீறு' என்னும் தேவாரப் பாடலுக்கு மெட்டு அமைத்துக் கொடுக்க அந்த ராகத்தையே  "கொஞ்சும் சலங்கை'  திரைப்படத்தில் மெட்டமைத்து எஸ். ஜானகி பாடிய,  "சிங்கார வேலனே தேவா' என்ற பாடல் ஆகும். இப்பாடல் அப்படத்தின் வெற்றிக்கு மிகவும் உறுதுணையாக இருந்தது. இன்றும்கூட எங்கேனும் தூரத்தில் நாதஸ்வர ஓசை கேட்டால் இப்பாடல் எனக்கு நினைவுக்கு வந்து மகிழ்விக்கும்.
 மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தரமாவது நீறு துதிக்கப்படுவது நீறு
தந்திரமாவது நீறு சமயத்திலுள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திருவாலவாயான் திருநீறே.
வேதத்தில் உள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு
போதந் தருவது நீறு புன்மை தவிர்ப்பது நீறு
ஓதத் தருவது நீறு உண்மையிலுள்ளது நீறு
சீதப் புனல் வயல் சூழ்ந்த திருவாலவாயான் திருநீறே.
நாதஸ்வரம் காருகுறிச்சி அருணாசலம் அவர்களின் குருநாதர் நாதஸ்வர இமயம் திருவாவடுதுறை டி.என். இராஜரத்தினம் பிள்ளை ஆகும்.
   மேற்படி பாடலின் ராகத்திற்குச் சொந்தக்காரர் எனது ஆசான் சம்பந்த மூர்த்தி ஆச்சாரியார் என்று அப்படத்தின் கம்பெனியாருக்குத் தெரிந்தவுடன் அந்தக் காலத்திலேயே ரூ. 5,000 கொடுக்க வந்தாலும், ஆச்சாரியார் "பணம் வேண்டாம், என் ராகம் என்று சொன்னால் போதும்'' என்று கூறி பணம் வாங்க மறுத்துவிட்டார் அந்த மாமனிதர். 
(தொடரும்)

வாட்ஸ் ஆப்:  அனுப்பிய தகவலை 7 நிமிடங்களில் டெலிட் செய்யலாம் வாட்ஸ் ஆப்பில் தகவல் பரிமாற்றம் அசூர வேகத்தில் நடைபெறுகிறது. ஆனால், ஒரு தகவலை ஒருவருக்கோ, குழுவுக்கோ தவறாக  அனுப்பி விட்டால் அதை திரும்பப் பெறவோ, அழிக்கவோ இயலாது என்பது ஒரு பெரிய குறையாக இருந்தது. இந்தக் குறையைப் போக்க வேண்டும் என்று உலகம் முழுவதும் கோரிக்கை எழுந்தது.
 பயன்பாட்டாளர்களின் இந்த நீண்ட நாள் கோரிக்கையை  வாட்ஸ் ஆப் நிறைவேற்றியுள்ளது.
தவறுதலாக ஒருவருக்கு தகவலோ, செய்தியையோ, புகைப்படத்தையோ, தொலைபேசி எண்களையோ  அனுப்பிவிட்டால் 7 நிமிடங்களுக்குள் அந்தத் தகவலை அழித்துவிடலாம். இதற்கு சம்பந்தப்பட்ட இருவரும் தங்களது மொபைல் போனில்  வாட்ஸ் ஆப்பை அப்டேட் செய்திருக்க வேண்டும்.
இந்த புதிய சேவையின்படி, ஒரு தகவலை தவறாக மற்றவர்களுக்கு அனுப்பி விட்டால், அந்த நபரின் வாட்ஸ் ஆப்பிற்குள் சென்று அந்தத் தகவலை மீண்டும் செலக்ட் செய்து டெலிட் பொத்தனை அழுத்த வேண்டும்.
அப்போது, "டெலிட் ஃபார் மீ' என்றும் "டெலிட் பார் எவ்ரிஓன்' என்று காண்பிக்கும்.
அதில், "டெலிட் ஃபார் எவ்ரிஓன்' என்பதை அழுத்திவிட்டால், தகவல் அனுப்பியவரின் வாட்ஸ் ஆப்பில் இருந்தும், அந்தத் தகவலைப் பெற்றவர் வாட்ஸ் ஆப்பில் இருந்தும், சம்பந்தப்பட்ட தகவல் அழிந்துவிடும்.  "டெலிட் ஃபார் மீ' என்று அழுத்தினால் அந்தத் தகவல் அனுப்பியவரின் வாட்ஸ் ஆப்பில் இருந்து மட்டும் அழியும்.
ஆனால், இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது, அனுப்பியவரின் வாட்ஸ் ஆப்பில் "யு டெலிடெட் திஸ் மெசேஜ்' என்றும், பெற்றவரின் வாட்ஸ் ஆப்பில் "திஸ் மெசேஜ் வாஸ் டெலிடெட்' என்றும் காண்பிக்கும்.
மேலும், தவறுதலாக அனுப்பப்பட்ட புகைப்படத்தை ஒருவர் டவுன்லோடு செய்து பார்த்து இருந்தாலும் கூட "டெலிட் பார் எவ்ரிஓன்' என்று அழுத்தினால்போதும், அவரது தொலைபேசியில் வாட்ஸ் ஆப் புகைப்படம் சேமிப்பில் இருந்தே அந்தப் படம் நீக்கப்பட்டுவிடும். இந்த புதிய வசதி வின்டோஸ், ஐஓஎஸ் போன்களிலும் பயன்படுத்தலாம். தொழில்நுட்ப வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளியே கிடையாது என்பதையே இது  காண்பிக்கிறது. 
- அ.சர்ஃப்ராஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com