வாங்க இங்கிலீஷ் பேசலாம் 112

கணேஷ், புரொபஸர், மீனாட்சி ஆகியோர் கிரிக்கெட் வழி ஆங்கிலத்தில் பிரசித்தமான சொற்றொடர்களை அலசுகிறார்கள்.
வாங்க இங்கிலீஷ் பேசலாம் 112

கணேஷ், புரொபஸர், மீனாட்சி ஆகியோர் கிரிக்கெட் வழி ஆங்கிலத்தில் பிரசித்தமான சொற்றொடர்களை அலசுகிறார்கள்.
கணேஷ்: சார்... மீனாட்சி மேடம் உங்களை நச்சரிச்சு சதி பண்ணி தனிக்குடித்தனம் போக ஒத்துக்க வச்சாங்க. நீங்களும் உங்க அம்மா கிட்டே இது பற்றி கேட்டு வாங்கிக் கட்டினீங்க. அப்புறம் என்னாச்சு?
புரொபஸர்:  என்ன நடந்திருக்குமுன்னு நினைக்கிறே?
கணேஷ்:  நீங்க புது வீடு பார்த்திருப்பீங்க…
புரொபஸர்: ஆமா. நானும் எங்க அம்மாவும் பேசிக்காம ஆச்சு. அவங்க என் காத்தடிக்கிற திசையிலே வர மாட்டாங்க. ஒரு கப் தண்ணி வேணுமுன்னாலும் மீனு கிட்ட தான் கேட்கணும். சரி தனி குடித்தனம் போக வேண்டியதான்னு நானும் முடிவு பண்ணி மும்முரமா வேலைகளைக் கவனித்தேன். அப்போ தான் I was hit for a six.
கணேஷ்: நீங்க இந்த கலவரம் நடுவில கிரிக்கெட் ஆட வேற போனீங்களா?
புரொபஸர்: Hit for a six என்றால் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாவதென்று பொருள். 
கணேஷ்: ஏன்...  என்னாச்சு?
புரொபஸர்:  புது வீட்டுக்கு முன் தொகை கொடுத்து விட்டு வந்தால் மாமியாரும் மருமகளும் கைகோர்த்துக் கொண்டு ரொம்ப ஸ்நேகமாய் நிக்கிறாங்க. “நாங்க இனி பிரியவே மாட்டோம். புதுக்குடித்தனம் எல்லாம் முடியாது. இந்த வயசான காலத்தில உங்க அம்மாவை எப்படித் தனியா விட்டு வரச் சொல்றீங்க? கல் நெஞ்சக்காரான்னு” சொல்லி she bowled a googly at me.
கணேஷ்: கூக்ளி என்றால் உள்ளே திரும்பி வரும் பந்து தானே?
புரொபஸர்: ஆமா. பந்து வழக்கம் போல் வெளியே போகும் என நினைத்து ஆடினால் அது தன் பாட்டுக்கு உள்ளே திரும்பி சடேரென வருகிறது. மாமியாரோட கூட்டு சேர்ந்து she bowled a googly. And I was bowled over.
மீனாட்சி: Bye the bye professor, bowled over என்பதை பாஸிட்டிவான சந்தர்ப்பங்களுக்குத் தான் பயன்படுத்தணும். I was bowled over when I had the good fortune to listen to Hariharan sing in a live concert. அதாவது மெய்மறந்து ஆச்சரியத்தில் திளைப்பது.
கணேஷ்: ஆனாலும் நீங்க அப்படி கூக்ளி போட்டிருக்கக் கூடாது மேடம்.
மீனாட்சி: அது பெண்களோட மனசு. உனக்கும் உன் புரொபஸருக்கும் புரியாது. எங்களுக்கு லாஜிக் முக்கியமில்ல. அன்பும் அரவணைப்பும் தான் முக்கியம். 
புரொபஸர்: We men prefer to play a straight bat. அதாவது நாங்கள் எதையும் விதிகளை மீறாமல் அறவழிப்பட்டு தான் செய்வோம். 
மீனாட்சி: That is so boring. We love a cross-batted slog. 
புரொபஸர்: But women always want to get on the front foot?
மீனாட்சி: Which means?
புரொபஸர்: They want to take control of a situation. எதையும் முழுக்க தங்கள் கண்ட்ரோலில் கொண்டு வரணும் என்கிற முனைப்பு. 
மீனாட்சி: Better that playing on your backfoot.
கணேஷ்: அப்படியும் ஒரு சொல்வழக்கு இருக்குதா?
மீனாட்சி: பின்னே... it means ரொம்ப சிரமமான சூழலில் தத்தளிக்கிறது.
கணேஷ்: ஆனாலும் மேடம் நீங்க கடைசியில உங்க மாமியார் பக்கம் சேர்ந்து சேம் சைட் கோல் போட்டிருக்கக் கூடாது.
மீனாட்சி: அதெல்லாம் ஒரு ஜாலிடா. அதுக்கு பேர் சேம் சைட் கோல் இல்ல.
கணேஷ்: பின்னே?
மீனாட்சி: அதுக்குன்னே ஒரு கிரிக்கெட் idiom இருக்குது. Batting for the other side. 
கணேஷ்: கிரிக்கெட்டில் சொந்த அணிக்காக மட்டும் தானே ஒருத்தர் ஆட முடியும்?
மீனாட்சி: நீ சூதாட்டம் கேள்விப்பட்டதில்ல? ஒருத்தர் பணம் வாங்கிக் கொண்டு தன் அணி தோற்பதற்காக மோசமாய் பேட்டிங் பண்ணுவார். அப்போது he bats for the other side.
கணேஷ்: நீங்க ஏன் அதை செஞ்சீங்க?
மீனாட்சி: I didn't want to shortchange my mother- in- law. She is too nice a woman.
கணேஷ்: அதென்ன shortchange?
மீனாட்சி: சரியான சில்லறை கொடுக்காம ஏமாத்தறது. அதே போல் ஒருவரை ஏமாற்றமடைய வைப்பது. I didn't want to shortchange her by snatching away her son. அதனால் அவங்க பக்கம் சேர்ந்திட்டேன். அதுனால கடைசி வரை அவங்க என் மேல உயிரையே வச்சிருக்கும்படியா ஆயிடுச்சு. அது தான் அன்போட மகத்துவம்!
(இனியும் பேசுவோம்) 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com