இணைய வெளியினிலே...

மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பாட நூலில் மழைநீர் சேகரிப்போம் என்று ஒரு பாடம் இருந்தது.
இணைய வெளியினிலே...

முக நூலிலிருந்து....

நைட்ரஸ் ஆக்ûஸடுக்குப் பிறகு... 
மனிதனை தனியாகச் சிரிக்க வைக்கத்
தெரிந்த இன்னொரு பொருள்... 
மொபைல்

விரும்பிக் கொண்டே வெறுப்பதும், 
வெறுத்துக் கொண்டே விரும்புவதும் 
தவிர்க்க முடியாதவை...
மனித வாழ்வில்.


- மணிகண்டன் ராஜேந்திரன்

ஒவ்வொருவரும் ஒவ்வொரு பலூன்தான்...
உடையும் நேரம்தான் கூடுதல்... குறைச்சல்...

- நா.வே.அருள்


நீச்சல் தெரியாதவனுக்குக் கூட நீந்தி உயிர் தப்பிக்க கற்றுக் கொடுக்கிறது
மழைவெள்ளம்.


மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பாட நூலில் மழைநீர் சேகரிப்போம் என்று ஒரு பாடம் இருந்தது.

- பிரபு

சுட்டுரையிலிருந்து...


தோல்வியே  
நீ என் ஆசான்... 
என்னையே நான்- 
உன்னை வைத்துதான் 
அளவிட்டேன்.

- சாய் ப்ரசாந்த்

மழையின் காரணமாக விடுமுறை  அளிக்கப்பட்டது, பள்ளிகளுக்கும்...
வீட்டில் இருக்கும் மின்விசிறிக்கும்....

- தமிழச்சி

நாம் இருக்கும் இடத்தை செல்போனில் பொய்யாகச் சொல்வதற்கு
சாவு "விசில்' அடித்து விடுகிறார் கண்டக்டர்...
""சாந்தி தியேட்டர் எல்லாம் இறங்கு''

- காளையன்


வலைதளத்திலிருந்து...

மும்முரமாக வேலையில் முழுகி முத்தெடுத்துக் கொண்டிருக்கும்போது செல்ஃபோன் சிணுங்கும். அல்லது முக்கியமான ஆபீஸ் மீட்டிங்கில் அனல் பறக்க விவாதித்துக் கொண்டிருக்கும்போது சத்தமில்லாமல் அலைபேசி அலைபாய்ந்து துடிக்கும். யாரோ அவசரமாகத் தொலை பேச அழைக்கிறார்கள். டென்ஷனோடு ஃபோனை எடுத்து, "ஹலோ' சொன்னால் ஒரு பெண்குரல் வணக்கம் சொல்லும். ""சார், ஏபிசிடி பேங்கிலிருந்து பேசறோம். பிளாட்டினம் கிரடிட் கார்ட் எந்த வித சார்ஜும் இல்லாமல் கொடுக்கறோம். நீங்களும் வாங்கிக்குங்களேன்''.
எனக்குத் தெரிந்து பலபேர் இப்படியான ஒரு செல்போன் அழைப்பு எதிர்பார்க்காத சூழ்நிலையில் வந்தபோது எதிர்கொண்ட விதத்தை இங்கே எழுத முடியாது. கார் ஜன்னல் வழியாகக் கையை நீட்டி உள்ளே தொட்டுப் பிச்சைக்காகக் கையேந்துகிற பெண்ணைத் திட்டுகிற கனவான்களின் மொழி, அதைவிட மேன்மைப்பட்டதாக இருக்கும். 
இந்த அவமானத்தை எப்படியோ விழுங்கி விட்டு எதிர்முனையில் இருந்து சகஜமாக அடுத்த விசாரிப்பு - ""கிரடிட் கார்ட் வேணாம்னா போகுது சார். கார் லோன், வீடு கட்ட லோன், ஹோம் தியேட்டர் வாங்க சுலப தவணையில் வங்கிக் கடன். வாங்கிக்குங்களேன் சார்''. இந்தப் பக்கம் அதற்குள் தொலைபேசி மேஜை மேல் விட்டெறியப்படாமல் இருந்தால் இன்னொரு அசிங்கமான திட்டு எழுந்து சூழலை அசுத்தப்படுத்தும். செத்து விடலாமா என்று வாழ்க்கையின் எல்லைக்குப் போகவைக்கும் சுடுசொற்கள். ஆனால் எதிர்முனைப் பெண் அடுத்து வேறு யாரோ முகம் தெரியாத இன்னொருவருக்கு செல் வணக்கம் சொல்லத் தயாராகியிருப்பாள்.
http://www.eramurukan.in 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com