வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 113

ரொபஸர், மீனாட்சி, கணேஷ், Captain Flint ஆகியோர் புரொபஸரின் வீட்டில் இருந்து அரட்டை அடிக்கிறார்கள். Captain Flint பத்திரிகைகளின் ஸ்டேண்டில் இருந்து ஒரு மாத இதழை வாயில் கவ்வி எடுத்து வந்து புரட்டுகிறது.
வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 113

ரொபஸர், மீனாட்சி, கணேஷ், Captain Flint ஆகியோர் புரொபஸரின் வீட்டில் இருந்து அரட்டை அடிக்கிறார்கள். Captain Flint பத்திரிகைகளின் ஸ்டேண்டில் இருந்து ஒரு மாத இதழை வாயில் கவ்வி எடுத்து வந்து புரட்டுகிறது.

Captain Flint: அப்பப்ப்பா... ஒரே மாசத்தில் எவ்வளவு பிரச்னைகள் நம் மக்களை வாட்டுகிறது.
மீனாட்சி: என்ன படிக்கிறே? விகடனா?
Captain Flint: சேச்சே... நான் அந்த மாதிரி படிக்கிற ரசனை கொண்டவளா? இது ஒரு இலக்கிய பத்திரிகை. இது பேரு உ...உ...ரி...
மீனாட்சி: பேரே சரியா வாயில நுழையல. நீ எங்க ரசனையைத் திட்டறே. You are such a literary snob. 

கணேஷ்: அதென்ன literary 
snob?
மீனாட்சி: இலக்கிய நூல்களை ஒரு பந்தாவுக்காக மட்டும் படிப்பவர்; ஒரு புத்தகம் பிரபலம் ஆனாலே அதனை ஒதுக்கி வைப்பவர்; ஒரு புத்தகம் ஜாலியாக இருந்தால் அது மட்டமான ரசனை கொண்டது என நினைப்பவர்; புரியாமல் இருப்பதே ஒரு புத்தகத்தின் சிறப்பு என நினைப்பவர். இப்படியானவர் தான் ஒரு literary snob.  
Captain Flint:  Oh my od! Thanks!  நான் நல்லவேளை literary snob இல்ல.
மீனாட்சி: ஏன்?
Captain Flint:  இந்த பத்திரிகையில் புளூ வேல் பத்தி ஒரு கட்டுரை இருக்குது. படித்தால் புரியுது. ஐயோ அப்படீன்னா இது இலக்கிய பத்திரிகை இல்லையா?
மீனாட்சி: பார்த்தியா you prove to be a snob. சரி போகட்டும், யார் எழுதினது?
Captain Flint: ஷான் கருப்பசாமி என்பவர் எழுதியிருக்கிறார். கட்டுரையின் தலைப்பு: செத்து விளையாடும் குழந்தைகள்
மீனாட்சி: ம்ம்ம்...
Captain Flint:  ஆனா ஒண்ணு... தலைப்பே தப்பா இருக்கே?
மீனாட்சி: என்ன தப்பு?
Captain Flint:  செத்து விளையாடும் குழந்தைகள்னு இருக்கு
மீனாட்சி: ஆமா
Captain Flint:  செத்த பிறகு எப்படி விளையாட முடியும்?
மீனாட்சி: எனக்கு சரியா புரியுதே? உனக்கு ஏன் குழம்புது...
Captain Flint:  அப்படி இல்ல. விளையாடி சாகும் குழந்தைகள்னு இருக்கணும். அப்போ குழப்பமே இராது.
மீனாட்சி: சரி தான். ஆனால் அதோட அர்த்தம் அப்போது விளையாட்டின் போது சாகும் குழந்தைகள்னு ஆயிடுமே. இதோட பொருளே சாவை நோக்கிய விளையாட்டு என்பதல்லவா?
Captain Flint:  ம்ஹும்... இது சரி வராது போலிருக்கே. என்ன தான் சொல்ல வரீங்க?
மீனாட்சி: ஒரிஜினல் தலைப்பே சரியா வருது.
Captain Flint:  ஆனால் "செத்து' என சாவு முதலில் வரது எனக்கு அபத்தமா படுதே...
மீனாட்சி: இந்த பிரச்னைக்கு ஒரே தீர்வு தான். இதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க வேண்டும்.
Captain Flint:  எப்படி?
மீனாட்சி: Children Who Play Dying.
Captain Flint : இல்லீங்க Children Who Die Playing என்று இருக்கணும்.
மீனாட்சி: திரும்பவும் தப்பு பண்றே. விளையாட்டின் போது சாகவில்லை. சாவே இவ்விளையாட்டின் இலக்கு. அதனால் உன் தலைப்பு தப்பு.
Captain Flint :  எனக்கு புரியல
மீனாட்சி: விளக்குறேன் கேளு. Children Who Play Dying என்பதை Children Who Play by Dying என விரிக்கலாம். Children Who Die Playing என்பதை Children Who Die by Playing  என விரித்தெடுக்கலாம்.
Captain Flint : சரி
மீனாட்சி: இங்கே by dying அல்லது by playing என்பது adjunct.
Captain Flint :  Adjunct என்றால்?
மீனாட்சி: ஒரு சொல் அல்லது சொற் தொகுப்பு. அது ஒரு வாக்கியத்தில் ஒரு கூடுதல் தகவலைத் தரும் வண்ணம் தரப்பட்டிருக்கும். ஆனால் அத்தகவல் அத்தியாவசியம் அல்ல. He spoke by holding a mike  என்பதில் by holding a mike  என்பது adjunct. அது அவன் எப்படி பேசினான் எனும் கூடுதல் தகவலைத் தருகிறது. ஆனால் அவன் பேசினான் என்று வெறுமனே சொன்னாலும் அவ்வாக்கியம் நிறைவு பெறும். He spoke. ஒகே?
Captain Flint :  ஒகே
மீனாட்சி: அதனால் by holding இங்கே ஒரு adjunct. அதே போல by playing / by dying கூட adjunct.
Captain Flint : சரி
மீனாட்சி: இப்போது தமிழ் வாக்கியத்துக்கு வருவோம். அவர்கள் விளையாடினார்கள், செத்து. இங்கு "செத்து' என்பது எப்படி விளையாடினார்கள் என்பதற்கான கூடுதல் தகவல். அதாவது ஹக்த்ன்ய்ஸ்ரீற்.
(இனியும் பேசுவோம்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com