வேலை... வேலை... வேலை...

சைன்டிஃபிக் அஸிஸ்ட்டெண்ட் (பிரிவுகள்:  ஹெல்த் பிசிக்ஸ், வேதியியல், எலெக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், இன்ஸ்ட்ரூமெண்டேஷன்)
வேலை... வேலை... வேலை...

கல்பாக்கம் அணு மின் நிலையத்தில் வேலை

பணி: சைன்டிஃபிக் அஸிஸ்ட்டெண்ட் (பிரிவுகள்:  ஹெல்த் பிசிக்ஸ், வேதியியல், எலெக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், இன்ஸ்ட்ரூமெண்டேஷன்)
மொத்த காலியிடங்கள்: 14
கல்வித்தகுதி: ஹெல்த் பிசிக்ஸ், வேதியியல் துறைகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் 60 சதவீத மதிப்பெண்களுடன் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். எலெக்ட்ரிகல், மெக்கானிக்கல், இண்ட்ஸ்ரூ மென்டேஷன் துறைகளில் விண்ணப்பிப்பவர்கள்  60 சதவீத மதிப்பெண்களுடன் சம்பந்தப்பட்ட பிரிவில் டிப்ளமோ  படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18-30 வயதுக்குள் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் விலக்குகள் உண்டு.
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.bhavini.nic.in  என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். 
மேலும் விவரங்களுக்கு:  http://www.bhavini.nic.in/writereaddata/Careers/45.pdf  என்ற இணையதளத்தைப் பாருங்கள்.
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 24-11-2017. 

சிவிஆர்டி நிறுவனத்தில் தொழிற்பயிற்சி

பணி:  ஆட்டோ எலெக்ட்ரிஷியன் , கார்பெண்டர், கம்ப் யூட்டர் ஆப்பரேட்டர் & ப்ரோக்கிராமிங் அசிஸ்டெண்ட், டிராஃப்ட்ஸ்மேன் (மெக்கானிக்கல்), எலெட்ரிஷியன்-, பிட்டர் , மெஷினிஸ்ட், மோட்டார் வெஹிக்கல்  மெக்கா னிக் , டர்னர் , வெல்டர் (கேஸ் & எலெக்ட்ரிக்) .
மொத்த காலியிடங்கள்: 146
கல்வித் தகுதி: தேசிய தொழிற்பயிற்சி கவுன்சில் மூலம் அங்கீகரிக்கப்பட்ட ஐ.டி.ஐ. கல்வி நிறுவனத்தில் சம்பந்தப்பட்டதுறையில்  சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 
விண்ணப்பிக்கும் முறை: https://rac.gov.in/cgibin/2017/advt_cvrde_apprentice/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். 
விண்ணப்பக்  கட்டணம்: ரூ.30 ஆன்லைன் மூலம் செலுத்தலாம். எஸ்.சி. எஸ்.டி. பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை. 
மேலும் விவரங்களுக்கு: https://rac.gov.in/cgibin/2017/advt_cvrde_apprentice/public/pdf/advt_cvrde_apprentice.pdf?5910cf27514a6d62a08b6b36d4b3b36d=1 என்ற இணையதளத்தைப் பாருங்கள்.
விண்ணப்பிக்க கடைசித் தேதி:  26-11-2017.


தேசிய சட்டப்பணிகள் ஆணையத்தில் வேலை

பணி:  சுருக்கெழுத்தாளர்கள்  
காலியிடங்கள்: 21 (புதுதில்லி - 5, ஆமதாபாத் - 4, சென்னை - 2, கொல்கத்தா - 2, மும்பை - 8)
கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி, ஆங்கில சுருக்கெழுத்தில் தேர்ச்சி (English Shorthand 100 wpm)
மாத சம்பளம்: ரூ.45,000.
விண்ணப்பிக்கும் முறை: http://nclt.gov.in/vacancies. என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: Shri.Anil Kumar, 
Under Secretary to Govt. of India,
National Company Law Tribunal,
Room No.614, Block No. 3, C.G.O. Complex,
Lodhi Road, New Delhi } 110 003.

மேலும் விவரங்களுக்கு:  http://nclt.gov.in/orders/Engagement%20of%20stenographers%20purely%20on%20contractual%20assignment%20in%20the %20NationalCompany % 20Law% 20Tribunal.pdf  என்ற இணையதளத்தைப் பாருங்கள்.
விண்ணப்பங்கள் சென்று சேர  கடைசித் தேதி: 27-11-2017.


அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை

பணி: மருந்தாளுநர் மற்றும் லேப் டெக்னிஷியன் 
கல்வித்தகுதி: மருந்தாளுநர் பணிக்கு குறைந்தபட்சம் டி.பார்ம் படித்திருக்க வேண்டும். தமிழ்நாடு பார்மசி கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும். அடிப்படைக் கணினி அறிவு மற்றும் இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம். லேப் டெக்னீஷியன் பணிக்கு மெடிக்கல் லேப் டெக்னீஷியன் பிரிவில் டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும். 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 
விண்ணப்பிக்கும் முறை: www.annauniv.edu   என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்பத்தைப் 
பதிவிறக்கம் செய்து,  பூர்த்தி செய்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.  மேலும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஸ்கேன் செய்து ட்ங்ஹப்ற்ட்ஸ்ரீங்ய்ற்ழ்ங்ஹன்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீர்ம். என்ற இ மெயில் முகவரிக்கும் அனுப்பி வைக்க வேண்டும். 
முகவரி: The Director, Health Centre, Anna University, Chennai - 25 
மேலும் விவரங்களுக்கு: https://www.annauniv.edu/pdf/Healthcentre.pdf  என்ற இணையதளத்தைப் பாருங்கள்.
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 30-11-2017.


இந்திய கப்பற்படையில் தொழிற் பயிற்சி

பணி:   எலெக்ட்ரிஷியன், எலெக்ட்ரோ பிளேட்டர் , எலெக்ட்ரானிக்ஸ் மெக்கானிக் , பிட்டர்,   இன்ஸ்ட்ரூமெண்ட் மெக்கானிக் , மெஷினிஸ்ட், மெக்கானிக் மெஷின் டூல் மெயின்டனன்ஸ் (எம்எம்டிஎம்) , பெயிண்டர் , பேட்டர்ன் மேக்கர், ஆர் அண்டு ஏ.சி. மெக்கானிக், வெல்டர் (கேஸ், எலெக்ட்ரிக் , கார்பெண்டர்,  ஃபெளண்ட்ரிமேன் , ஃபார்கர் & ஹூட் ட்ரீட்டர் (எஃப்ஹெச்டி), மெக்கானிக் (டீசல்), ஷீட் மெட்டல் வொர்க்கர் , பைப் பிட்டர்
மொத்த காலியிடங்கள்: 274
கல்வித்  தகுதி: பத்தாம் வகுப்பு / எஸ்.எஸ்.எல்.சி / மெட்ரிக் தேர்வுகளில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்கள் மற்றும் சம்பந்தப்பட்ட ஐ.டி.ஐ. படிப்பில் 65 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.indiannavy.nic.in/node/977  என்ற இணையதளத்தின் மூலமாக விண்ணப்பதாரர்களின் விவரங்களைப் பதிவு செய்து, விண்ணப்பத்தை அனுப்பி வைக்கவும். பின்னர், விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யவும். மேலும், விளம்பரத்தின் Annexure - I  இல் வைக்கப்பட்டுள்ள ஹால் டிக்கெட்டை இரண்டு முறை பிரிண்ட் எடுத்து அவற்றில் சமீபத்தில் எடுக்கப்பட்ட 2 பாஸ்போர்ட் புகைப்படங்களை இணைத்து, அவற்றையும் 
பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பம்,  அய்ய்ங்ஷ்ன்ழ்ங் - ஐ இல் பாகம் - ஐஐஐ இல் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான ஆவணங்களையும் இணைத்து, ஸ்பீட் போஸ்ட் மூலம் 12-12-2017க்குள் விசாகபட்டினத்துக்கு அனுப்பி வைக்கவும்.
முகவரி: The Officer-In-Charge (For Apprenticeship), Naval Dockyard Apprentices  School, VM Naval Base S.O., P.O., Visakhapatnam - 530 014, Andhra Pradesh.
மேலும் விவரங்களுக்கு: https://www.indiannavy.nic.in/sites/default/files/Attachment_1.pdf என்ற இணையதளத்தைப் பாருங்கள்.
விண்ணப்பிக்க கடைசித் தேதி: ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க 05-12-2017. படிவங்களைப் பூர்த்தி செய்து அனுப்ப 12-12-2017.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com