இணைய வெளியினிலே...

அன்பை மலராகப் பயன்படுத்துங்கள்; ஆயுதமாக்காதீர்கள்!
இணைய வெளியினிலே...

முக நூலிலிருந்து....

என்னை அழித்தவர்களையும் கூட...
தாங்குகிறேன்...
படுக்கையாக
நாற்காலியாக
தொட்டிலாக
சவப்பெட்டியாக
இறுதிவரை வாழ்ந்து கொண்டிருக்கிறேன்...
இப்படிக்கு
மரம்.

- பூஜாஸ்ரீ தமிழச்சி


செய்திகளுக்குப் பயந்து
மேகத்தில் பதுங்கியது மாமழை...
சட்டென்று மாறுது
வானிலை.

- நடராஜன் சுந்தரபுத்தன்


படித்தேன்... ரசித்தேன்!

பலமானவனை...
பலவீனமானவன்
பலவீனமாக்கிவிட முடியும்,
பலவீனமானவனை...
பலமானவனால்
பலமானவனாக்க முடியாது!

- மானா பாஸ்கரன்

அன்பை மலராகப் பயன்படுத்துங்கள்; ஆயுதமாக்காதீர்கள்!

- ரவீந்திர பாரதி


சுட்டுரையிலிருந்து...


செல்போன் வந்த புதிதில்
அதிகமாக செல்போன்
உபயோகிப்பவர்களை
வேலையுள்ளவர்களாகவும்...
தற்பொழுது அதிகமாக
செல்போன் உபயோகிப்பவர்களை
வேலையில்லாதவர்களாகவும் யூகிக்க வைக்கிறது!

- பொன் குழந்தை

எனக்கொரு டவுட்டு...

அப்பாவின் சட்டைப்பையில்
பணம் இருக்குதோ, இல்லையோ,
போன் நம்பர் எழுதிய காகிதமும்
குட்டி டைரியும்
நிச்சயம் இருக்கும்...!!

- தாடிக்காரன்

விரும்பிய வாழ்வும் விரும்பிய சாவும்

எப்போதைக்கும் சாத்தியமில்லை என
தெள்ளந்தெளிவாய் உணர்ந்ததால்...
இந்த நொடியை
கொண்டாடித் தீர்க்கிறேன்.

- ஆதிரை

கதைகளில் கூட ...

பெண் மட்டுமே பேயாக வருகிறாள்?

- புன்னகை மன்னன்

வலைதளத்திலிருந்து...


எல்லோரும் 90+ மதிப்பெண்கள் வாங்கிவிட்டால், 70+ மற்றும் 40+களையெல்லாம் வாழவைப்பது யார்? என் மனைவியிடம் நான் தீர்மானமாகச் சொன்னது, எப்பவும் படி படி என்று சொல்லக்கூடாது, மதிப்பெண்கள் குறைந்துவிட்டால் ஜஸ்ட் ஓர் எச்சரிக்கை போதும், தண்டனை கூடாது என்பது.

மிக முக்கியமாக, காமிக்ஸ், குழந்தைகள் நூல்களைப் படிக்க வைப்பது. படிப்பது என்பது சுவாரஸ்யமானது என்பதை உணர இதுதான் வழி. உண்மையில் இந்த காமிக்ûஸப் படிக்கவே என் மகன் முகம் சுழிக்கிறான். இருந்தாலும் கட்டாயப்
படுத்தி வாரா வாரம் படிக்க வைக்கிறேன். அதுவும் மிகக் குறைவான நேரத்துக்கு மட்டுமே. மற்ற நேரம் முழுக்க அவன் விளையாடிகொண்டுதான் இருப்பான்.
விளையாடும் நேரத்தில் விளையாடும் வயதில் குழந்தைகளை விளையாட விடுங்கள். ஒருவன் ஐ ஏ எஸ் கனவைப் பெறுவதற்கு 5 வயது ஏற்றதல்ல.

எப்போதும் படித்துக் கொண்டே இருப்பதற்கு குழந்தைகள் சாவி முடுக்கி விடப்பட்ட குழந்தைகள் அல்ல. தமிழ் பேசுவது பாவமல்ல. ஆங்கிலம் தெரியாதது அவமானமல்ல. ஐயோ, எத்தனை எத்தனை கற்பிதங்கள் இந்தப் பெற்றோர்களுக்கு. நீங்கள் தோற்றுப் போனதை ஜீரணிக்க உங்கள் குழந்தைகளைப் பந்தயம் வைக்காதீர்கள். எங்காவது சென்று இதையெல்லாம் சொல்லி கத்த வேண்டும் போல் உள்ளது.

http://www.haranprasanna.in

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com