சுற்றுச்சூழல் மாசு கட்டுப்பாடு... பயிற்சி பெற்றவர்களுக்கு வேலை வாய்ப்பு!

சுற்றுச்சூழல் பயிற்சி நிறுவனம் நடத்தும் பயிற்சி பெற்றவர்களுக்கு உடனடியாக வேலை வாய்ப்பு காத்திருக்கின்றது.
சுற்றுச்சூழல் மாசு கட்டுப்பாடு... பயிற்சி பெற்றவர்களுக்கு வேலை வாய்ப்பு!

சுற்றுச்சூழல் பயிற்சி நிறுவனம் நடத்தும் பயிற்சி பெற்றவர்களுக்கு உடனடியாக வேலை வாய்ப்பு காத்திருக்கின்றது.
தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் அபாயகரமான கழிவுகளால் சுற்றுச்சூழலில் மாசு ஏற்படுகிறது. திடக் கழிவுகள், திரவக் கழிவுகள், புகை, ஒலி ஆகியவற்றால் மாசு ஏற்படுவதை தடுக்க மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கண்காணித்து வருகிறது. மாசு ஏற்படுத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
சுற்றுச்சூழலில் மாசு ஏற்படுத்துபவர்கள் மீது தன்னார்வ தொண்டர்கள், சமூக ஆர்வலர்கள், அமைப்புகள் சார்பாக நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்படுகின்றன. அதனால் இத்தகைய சூழ்நிலையில் சுற்றுச்சூழலில் மாசு ஏற்படுவதை தடுப்பதற்கான வழிமுறைகளைச் சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகள் மேற்கொண்டு வருகின்றன. அந்த பணியில் சுற்றுச்சூழலில் மாசு ஏற்படுவதைத் தடுப்பதற்கான பயிற்சிகளைப் பெற்றவர்களை தொழிற்சாலை நிர்வாகம் பணியில் அமர்த்துகிறது.
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் கீழ் இயங்கும் சுற்றுச்சூழல் பயிற்சி நிறுவனம் அது சம்பந்தமான பல்வேறு பயிற்சிகளை ஆண்டு முழுவதும் நடத்தி வருகிறது. இப்பயிற்சி பெறுபவர்கள் தொழிற்சாலைகளில் உடனடியாக வேலைவாய்ப்பு பெறுகின்றனர்.
சுற்றுச்சூழல் பயிற்சி நிறுவனம் நடத்தும் பயிற்சிகள் :

Air Pollution-I (Ambient Air Quality Monitoring Techniques and Modeling)
Air Pollution - II (Air Pollution Prevention and Control in Industries)
Energy Conservation in Industries
Environmental Concern in Tanning Industry - Waste Minimization Options
Environmental Concerns: Sugar Industries
Environmental Impact Assessment Techniques
Environmental Management in Industries
Environmental Statement
General Aspects of Field Inspection and Compliance Control for Industries
Hazardous Waste Management in Industries
Bio MEDICAL Waste Management
Industrial Waste Water Treatment and Re use
Integrated Environmental Management for Govt. Organizations
Municipal Solid Waste Management
Occupational Health and Safety
Operation and Management of Environmental Testing Laboratories
Risk Assessment Techniques
Waste Water Treatment Process and Control
Operation and Maintenance of Sewage Treatment Plant
GIS and its application in Environmental Engineering

மேலும் தகவல்களுக்கு:

Environmental Training Institute
Tamil Nadu Pollution Control Board
III Floor, 76, Mount Salai , Guindy
Chennai - 600 032.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com