புதையல்

வாழ்க்கையைப் பற்றிப் பெரும்பாலான மக்கள் தீவிரமாகச் சிந்திப்பதில்லை. எந்தவொரு விஷயத்தை எடுத்துக் கொண்டாலும், ஓர் ஆட்டு மந்தைத்தனம் அவர்களிடையே நிலவுகிறது.
புதையல்

வாழ்க்கையைப் பற்றிப் பெரும்பாலான மக்கள் தீவிரமாகச் சிந்திப்பதில்லை. எந்தவொரு விஷயத்தை எடுத்துக் கொண்டாலும், ஓர் ஆட்டு மந்தைத்தனம் அவர்களிடையே நிலவுகிறது. பெரும்பாலோனோர் எதைச் செய்கின்றனரோ, அதையே அவர்களும் செய்ய முற்படுகின்றனர். கணினிப் பொறியியல் பட்டப்படிப்புப் படித்தால் நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும் என்பதால், எல்லாப் பெற்றோரும் தங்கள் குழந்தைகளைப் பொறியியல் படிப்பை நோக்கி உந்தித் தள்ளுகின்றனர். அதேபோல, பெருநிறுவன ஏணியில் கீழ்மட்டத்தில் இருப்பவர்கள், ஏற்கெனவே உச்சியைச் சென்றடைந்தவர்களை ஏறிட்டுப் பார்த்துவிட்டு, தாங்களும் அவர்களோடு சேர்ந்து கொள்ளக் கடினமாக உழைக்கின்றனர். வேலைக்குச் செல்கின்ற பெண்களுக்குக் கிடைக்கின்ற அனுகூலங்களை மட்டும் பார்த்துவிட்டு, மற்ற பெண்களும் வேலைக்குச் செல்ல ஆர்வம் கொள்கின்றனர். எங்கு பார்த்தாலும் இப்படி ஓர் ஆட்டுமந்தைத்தனம் நிலவுகிறது.
ஒரு வெற்றிகரமான தொழில் வாழ்க்கையை உருவாக்கிக் கொள்ள முற்படுவதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால் வெறும் பணமும் புகழும் மட்டுமே வாழ்க்கையாகிவிடாது. நீங்கள் எந்தவொரு தீர்மானத்தை எடுக்கும்போதும், அதில் இருக்கும் சாதகங்களை மட்டுமே பார்ப்பது சரியான தீர்மானத்தை மேற்கொள்ள உங்களுக்கு உதவாது. அதிலிருக்கும் பாதகங்கûளையும் நீங்கள் அலசி ஆராய வேண்டும். பிறகு அவ்விரண்டையும் சீர்தூக்கிப் பார்த்து, உங்கள் குடும்பத்திற்கு எது சரிப்பட்டு வரும் என்ற ஒரு முடிவை நீங்கள் எடுக்க வேண்டும்.
நாகலட்சுமி சண்முகம் எழுதிய "மாயாஜாலமான மணவாழ்க்கை - மறந்து போன ரகசியங்கள்' என்ற நூலிலிருந்து....

 நாகலட்சுமி சண்முகம்  எழுதிய  "மாயாஜாலமான மணவாழ்க்கை -
மறந்து போன ரகசியங்கள்'  என்ற நூலிலிருந்து....

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com