வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 114

புரொபஸரின் வீட்டில் மீனாட்சி, கணேஷ், புரொபஸர் ஆகியோர் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 114

புரொபஸரின் வீட்டில் மீனாட்சி, கணேஷ், புரொபஸர் ஆகியோர் பேசிக் கொண்டிருக்கிறார்கள். கிளி Captain Flint ஓர் இலக்கிய பத்திரிகையில் புளுவேல் பற்றி ஒரு கட்டுரையைக் காண்கிறது. அதன் தலைப்பு "செத்து விளையாடும் குழந்தைகள்'. Captain Flint அத்தலைப்பு பிழையானது என்கிறது. செத்த பின் எப்படி விளையாட முடியும் எனக் கேட்கிறது. மீனாட்சி "செத்து' என்பது ஒரு adjunct என்கிறார். They play by dying  என ஆங்கிலத்தில் இதை மொழியாக்குகிறார். By dying எனும் phrase ஓர் உபரித் தகவலை வழங்குகிறது. எப்படி விளையாடினார்கள் என்பது பற்றிய தகவல். ஆனால் இத்தகவல் இன்றியும் இவ்வாக்கியம் பொருள் தருமாகையால் இந்த phrase ஒரு adjunct. இந்த விளக்கத்தைத் தொடர்ந்து Captain Flintக்கு வேறு சில ஐயங்கள் எழுகின்றன.
Captain Flint: ஆனால் அந்த தலைப்பில் ‘செத்து' கடைசியில் வரவில்லையே? முதலில் அல்லவா வருகிறது. இல்லாவிடில் எனக்கு இவ்வளவு குழப்பம் நேர்ந்திராதே.
மீனாட்சி: அவர்கள் விளையாடினார்கள் செத்து என எழுதினால் ஏதோ ஜாக்ஸன் துரை தமிழ் பேசினது போல இருக்கும். அதனாலே அவர்கள் செத்து விளையாடினார்கள் என சொல்கிறோம். ஆனால் தமிழிலும் இது ஹக்த்ன்ய்ஸ்ரீற் தான். கூடுதல் தகவல். முக்கியமாக இங்கு ஒரு ஹக்ஸ்ங்ழ்க்ஷ மறைவாக வருகிறது. ஆஹ். தமிழில் சாவு என்பதில் "த்து' சேர்ந்து "செத்து' ஆகிறது. அந்த "த்து' தான் "ஆங்கிலத்தில் க்ஷஹ்'.
Captain Flint: They played by dying N¬Vô? They died by playing சரியா?
மீனாட்சி: முதலில் மரணத்தை விளையாட்டாக கொள்ளும் குழந்தைகள் வருகிறார்கள். இரண்டாவதில் விளையாட்டின் விளைவாக இறந்த குழந்தைகள் வருகிறார்கள். முதலாவதில் குழந்தைகளின் இலக்கு மரணம். இரண்டாவதில் விளையாட்டு மட்டும் தான் இலக்கு. எதேச்சையாக விளையாட்டின் போது மரணம் நிகழ்கிறது. சரி, இப்போது புளூவேல் விளையாட்டுக்கு வா. அதில் மரணத்துக்காக விளையாடுகிறார்களா? அல்லது விளையாட்டின் போது மரிக்கிறார்களா?
Captain Flint: முதலாவது தான் நடக்கிறது.
மீனாட்சி: ஆம்... சரி. அப்படி எனில் Children play by dying. சுருக்கி children play dying. எது adjunct என நாம் தீர்மானிப்பதைப் பொறுத்து ஒரு சொற்றொடரின் அர்த்தமே மாறுகிறது பார்த்தாயா?
கணேஷ்: ஆமா. எனக்கு இப்போது தான் கிராமரில் ஆர்வம் ஏற்படுகிறது மேடம். முன்பு அது அலுப்பான விசயமுன்னு கருதினேன்.
மீனாட்சி (போனைப் பார்த்தவாறே): குட் (சட்டென முகம் மலர்ந்து) my package has arrived. (எழுந்து ஜன்னல் பக்கமாய் நின்று பார்க்கிறார்.)
புரொபஸர்: என்ன ஓர் உற்சாகம் பாரேன். வரதென்னமோ ஹேர் ஆயிலும் சீப்பும். அதை நானே கடையில இருந்து வாங்கிட்டு வந்திருப்பேனே?
மீனாட்சி: ஆமா. ஆனால் நீங்க வாங்கித் தந்தா இப்பிடி வெயிட் பண்ணி பேக்கேஜ் கையில் வரப்போ கிடைக்கிற திரில் இருக்குமா? சொல்லுங்க.
மீனாட்சிக்கு போன் அடிக்கிறது: ஹலோ ஆமா. பாபா கோயிலுக்கு முன்னால் ஒரு அபார்ட்மெண்ட் இருக்கே, இல்ல இல்ல அந்த சின்ன கட்டிடம் இல்ல. இது 16 story building. அதான். அங்க மூணாவது மாடி. Come to the third floor. வாங்க... வாங்க.
கணேஷ்: சார் அதென்ன ஸ்டோரி? ஸ்டோரின்னா கதையில்ல?
புரொபஸர்: மாடி. Floorன்னு சொல்வோமே அதைத் தான் story என்றும் சொல்வாங்க.
கணேஷ்: ஓ... அப்படீன்னா ஏன் அவங்க story, floor  ரெண்டையும் பயன்படுத்தினாங்க?
புரொபஸர்: நல்ல கேள்விடா. Story என்பதை ஒரு கட்டிடத்தின் உயரத்தைச் சுட்ட மட்டுமே பயன்படுத்துவோம். உதாரணமாய் LIC has 15 floors. It is a 15-storeyed building. ஒரு காலத்தில் சென்னையின் ஆக உயரமான கட்டிடமாக LIC இருந்தது. இப்போ எங்க அபார்ட்மெண்டே 16 மாடிகள்.
கணேஷ்: இப்போ சென்னையோட ஆக உயரமான கட்டிடம் எது சார்?
புரொபஸர்: House of Hiranandini - 40 மாடிகள். சரி இன்னொரு முக்கியமான விசயம்: நான் பத்தாவது மாடியில் இருக்கேன் எனச் சொல்ல story என்பதை பயன்படுத்தக் கூடாது. தனி மாடியைக் குறிப்பிட floor தான் சரி. ஆனால் உயரத்தைக் குறிக்க மட்டுமே story பயன்படுத்தனும். புரியுதா?
கணேஷ்: ஆமா சார். அதனால தான் மேடம் come to the third storyன்னு சொல்லலையா?... ஓ...
புரொபஸர்: ஆமா
கணேஷ்: சார் ஆனால் story என்றால் கதை தானே?அது எப்படி மாடி எனும் அர்த்தம் பெற்றது?
(இனியும் பேசுவோம்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com