வேலை...வேலை...வேலை...

சென்னை ஐஐடி-இல் வேலை, தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தில் வேலை, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை
வேலை...வேலை...வேலை...

சென்னை ஐஐடி-இல் வேலை
பணி: புராஜெக்ட் டெக்னிஷியன்
காலியிடங்கள்: 2
தகுதி: சிவில், எலெக்ரிகல் மற்றும் எலெக்ட்ரானிக் இன்ஜினியரிங், கம்ப்யூட்டர் சயின்ஸ், தகவல் தொழில்நுட்பம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றில் 60 சதவீத மதிப்பெண்களுடன் டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும்.
பணி: புராஜெக்ட் அசோசியேட்
காலியிடங்கள்: 3
தகுதி: பிஈ / பி.டெக் சிவில் இன்ஜினியரிங் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பதாரர்கள் தங்களைப் பற்றிய சுயவிவரக் குறிப்புகளோடு, உரிய ஆவணங்களை இணைத்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். சென்னை ஐஐடியில் ஏற்கெனவே ஏதாவது ஒரு புராஜெக்டில் பணியாற்றிக் கொண்டிருப்பவர்கள், தங்களது திட்ட ஒருங்கிணைப்பாளர் மூலம் விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டும். 
முகவரி:Dr.S.Nallayarasu, Project Co-ordinator, Department of Ocean Engineering, Indian Institute of Technology Madras, Chennai - 600 036. E-Mail: nallay@iitm.ac.in
மேலும் விவரங்களுக்கு:https://www.iitm.ac.in/sites/default/files/notices/icsr.pr_.ann_.23.2017.pdf என்ற இணையதளத்தைப் பாருங்கள்.
விண்ணப்பம் சென்று சேர கடைசித் தேதி: 30-11-2017.

தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தில் வேலை
பணி: மீன் உணவு ஆலை ஆப்ரேட்டர் 
தகுதி: மெக்கானிக்கல்/ புரொடக்ஷன்/ மெட்டீரியல் இன்ஜினியரிங் பிரிவில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும்
சம்பளம்: மாதம் ரூ.20,000
பணி: மீன் உணவு ஆலை உதவியாளர் 
தகுதி: 8-ஆம் வகுப்பு தேர்ச்சி (ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். எலக்ட்ரிகல், பிளம்பிங் வேலை தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்)
சம்பளம்: ரூ.12,000
வயது வரம்பு: 30-வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்.சி.எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகள் விலக்கு உண்டு.
விண்ணப்பிக்கும் முறை: இந்தத் தற்காலிகப் பணிகளுக்கு தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள், தங்களது சுயவிவரக் குறிப்புகளுடன் உரிய ஆவணங்களையும் இணைத்து கீழ்க்காணும் முகவரிக்கு தபால் மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.
முகவரி: தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகம், நீர்வாழ் உயிரிவளர்ப்பு தொழில்நுட்பம், பயிற்சி மற்றும் தொழில் செய்முறை மைய இயக்குநரகம், கிழக்கு கடற்கரை சாலை-முட்டுக்காடு, காஞ்சிபுரம் மாவட்டம் -6031122
மேலும் விவரங்களுக்கு: http://tnfu.ac.in/app/webroot/img/documents/NADP-feed-Advt-Tamil.pdf என்ற இணையதளத்தைப் பாருங்கள்.
விண்ணப்பம் சென்று சேர கடைசித் தேதி: 30-11-2017.

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை
பணி: உதவி மேலாளர் (தகவல் தொழில்நுட்பம்)
காலியிடங்கள்: 4 (ஒரு இடம் மாற்றுத் திறனாளிகளுக்கு)
தகுதி: பி.ஈ. / பி.டெக் (கணினி அறிவியல்/தகவல் தொழில்நுட்பம்) அல்லது ஏதேனும் ஒரு பொறியியல் பிரிவில் பி.ஈ./பி.டெக் பட்டம் மற்றும் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி/ இன்ஃபர்மேஷன் சிஸ்டத்தில் எம்பிஏ (அல்லது) கணினி அப்ளிகேஷன் படிப்புகளில் அட்வான்ஸ்/ முதுகலை டிப்ளமோ (அல்லது) எம்.எஸ்.சி கம்ப்யூட்டர் சயின்ஸ்/இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி/மல்டிமீடியா மற்றும் ஓராண்டு அனுபவம் அல்லது எம்சிஏ/கணிதத்தை ஒரு பாடமாக எடுத்து பிஎஸ்சி பட்டம் மற்றும் இரண்டாண்டு அனுபவம் அல்லது பி.எஸ்.சி கம்ப்யூட்டர் சயின்ஸ்/இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி/மல்டிமீடியா/பிசிஏ மற்றும் மூன்றாண்டு அனுபவம்.
வயது வரம்பு: 35 வயதுக்குள் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் விலக்குகள் உண்டு.
விண்ணப்பிக்கும் முறை: www.nhai.org என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். தேவையான சான்றிதழ்கள், புகைப்படம் ஆகியவற்றைப் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
தேர்வு முறை: பட்டப் படிப்பு மற்றும் GATE தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் விவரங்களுக்கு: ttp://www.nhai.org/Doc/11sep17/advertisement.pdf என்ற இணையதளத்தைப் பாருங்கள்.
கடைசித் தேதி: 30-11-2017.

திருச்சி சுங்கத்துறை இயக்குநரகத்தில் வேலை
பணி: Engineer-mate
காலியிடம்: 1
வயது வரம்பு: 18 வயதிலிருந்து 30 வயதுக்குள் இருக்க வேண்டும். 
தகுதி: மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிப்பில் தேர்ச்சி மற்றும் கடற்படை/ கடலோரப் பாதுகாப்புப் படையில் குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Skipper-mate
காலியிடம்: 1
வயது வரம்பு: 18 வயதிலிருந்து 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தகுதி: 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 5 ஆண்டுகள் கடல் அனுபவம் மற்றும் கடல் பாதுகாப்பு, தீயணைப்பு, முதலுதவி சான்றிதழ் படிப்பு படித்திருக்க வேண்டும்.
பணி: Seeman
காலியிடங்கள்: 10
வயது வரம்பு: 18 வயதிலிருந்து 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி, மூன்றாண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Greaser
காலியிடங்கள்: 3
வயது வரம்பு: 18 வயதிலிருந்து 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி, மூன்றாண்டுகள் பணி அனுபவம் மற்றும் மீன் பிடி படகின் இன்ஜின் டிரைவர் பயிற்சிக்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 
பணி: Launch Mechanic
காலியிடம்: 1
வயது வரம்பு: 18 வயதிலிருந்து 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தகுதி: 8ஆம் வகுப்புச் சான்றிதழ், 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: கொடுக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பப் படிவத்தைப் பார்த்து, விண்ணப்பம் தயாரித்து பூர்த்தி செய்ய வேண்டும். தேவையான சான்றிதழ்களின் நகல்கள், புகைப்படம் ஆகியவற்றை இணைக்க வேண்டும். சாதாரண தபாலில் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும். 
முகவரி: THE JOINT COMMISSIONER OF CUSTOMS (P&V),     O/o THE COMMISSIONER OF CUSTOMS (PREVENTIVE)  NO.l, WILIAMS ROAD, CANTONMENT,     TIRUCHIRAPPALLT- 62000I (TAMILNADU) 
மேலும் விவரங்களுக்கு: http://customstrichy.gov.in/PDF/Recruitment%20notification.PDF என்ற இணையதளத்தைப் பாருங்கள்.
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 01-12-2017. 

அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வேலை
பணி: SKILLED/LAB ASSISTANT 
தகுதி: எஸ்எஸ்எல்சி தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். ஐடிஐ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். (பிரிவுகள்: Machinist, Survey, Electrician, Fitter, Automobile,Turner, Mechanical MV) 
மொத்த காலியிடங்கள்: 10
வயது வரம்பு: 36 வயதுக்குள் இருக்க வேண்டும். 
விண்ணப்பிக்கும் முறை: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை தேவையான சான்றிதழ்களின் நகல்களோடு கீழ்க்காணும் முகவரிக்குப் பதிவு அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும். 
முகவரி: முதல்வர், அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி, தொழுவூர், வலங்கைமான்- 612804, திருவாரூர் மாவட்டம்.
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 4.12.17
தொகுப்பு: பிரவீண் குமார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com