ஆசிரியர்களின் குழந்தைகளுக்கு உதவித் தொகை!

ஆசிரியர்களின் குழந்தைகளுக்கு படிப்பு உதவித் தொகையினை வழங்கி வரும் மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை, அதை பெற விரும்புவர்கள் டிசம்பர் மாதம் 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கும்படி அறிவித்துள்ளது. 
ஆசிரியர்களின் குழந்தைகளுக்கு உதவித் தொகை!

ஆசிரியர்களின் குழந்தைகளுக்கு படிப்பு உதவித் தொகையினை வழங்கி வரும் மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை, அதை பெற விரும்புவர்கள் டிசம்பர் மாதம் 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கும்படி அறிவித்துள்ளது. 
தமிழ்நாட்டைப் பொருத்தவரை நவ.30க்குள் இது தொடர்பான விண்ணப்பங்களை பள்ளிக்கல்வி இயக்ககத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் எனவும், அதன் பின் அந்த தகவல்கள் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை செயலருக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
ஆசிரியர் நலநிதி தேசிய நிறுவனத்திலிருந்து தொழிற்கல்வி பயிலும் ஆசிரியர்களின் மகன், மகள்களுக்கு 2015}2016 ஆம் கல்வியாண்டிற்கான படிப்புதவித் தொகை வழங்கும் வகையில் அது குறித்த விவரங்களை டிச.31 ஆம் தேதிக்குள் புதுடில்லி மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறைக்கு அனுப்பி வைக்க மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை தெரிவித்துள்ளது.
எனவே, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள் தொழிற்கல்வி கற்கும் தங்களது குழந்தைகளின் விவரங்களை உரிய விண்ணப்பத்தில் நிரப்பி அத்துடன் வங்கி கணக்கையும் இணைத்து நவ.30 ஆம் தேதிக்குள் பள்ளிக் கல்வி இயக்ககத்துக்கு அனுப்பி வைக்கலாம். 
முகவரி: 
பள்ளிக் கல்வி இயக்குநர், பள்ளிக் கல்வி இயக்ககம், டிபிஐ வளாகம், சென்னை- 600 006

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com