இணைய வெளியினிலே...

அதிகமான ஆட்டோவில்  எழுதப்பட்டுள்ளது. ஆனால்,
இணைய வெளியினிலே...


முக நூலிலிருந்து....

அதிகமான ஆட்டோவில்
 எழுதப்பட்டுள்ளது.
ஆனால்,
ஒரு மருத்துவமனையில் கூட 
எழுதப்படவில்லை...
"பிரசவத்திற்கு இலவசம்'
சமுத்திரக்கனி

////////////////////////////////////////////////////

விழிகளிடம் அகப்படுவதில்லை...
ஞான விளக்கின் 
சுடர்.
- ஆரூர் தமிழ்நாடன்

ஒரே வயிறுன்னு
ஓவரா செல்லம் கொடுத்தது
தப்பாப் போச்சு...
இப்போ தொப்பைன்னு பேர்
வாங்கிட்டு வந்து நிக்குது. 
- எம் பேரு கருத்தப்பாண்டி

சுட்டுரையிலிருந்து...

கனவுக் கோட்டையைக் 
கட்ட நினைத்து,
முதல் வரிசைக் கற்கள் கூட ... 
வைத்து முடியவில்லை. 
கலைத்து விட்டுச் சிரிக்கிறது விதி.

//////////////////////////////////////////////////////////

எல்லா அன்பும் 
கடைசியில் மனிதனை
அநாதையாக நிற்கச் செய்வதற்கே.
- ஸ்ரீசிவா

////////////////////////////////////

விவேகானந்தர், பாரதியாரெல்லாம் சின்ன வயசுலயே மரணம்..
ப்ளேபாய் பத்திரிக்கை ஓனர் 91வயசில் மரணம்...
""யப்பா.. கடவுளே... 
நீ என்னதான்யா சொல்லவர்றே?''
- திருமுருகன்

/////////////////////////////////////////////

வேகமா ஓடிட்டு இருக்கிற உலகத்துல...
எல்லாருமே அதே வேகத்துல 
ஓட வேண்டுமுன்னு நினைக்கிறது... 
முட்டாள்தனம்.
சில பேர் பொறுமையாகத்தான் போவான். 
- கேசவன்

////////////////////////////////////////////////

பேத்தி 
கிறுக்கினாள்...
தலைகவிழ்ந்து நின்றன,
தாத்தாவின் 
கவிதைகள்.
- கவிஞர் முல்லை நடவரசு


வலைதளத்திலிருந்து...

பொதுவாக எனக்கு நகை அணிவது என்பது பிடிக்காது. பெண்கள் அணிவது, அவர்கள் பிறப்புரிமை. அது பற்றி இங்கே பேச்சில்லை. நகை அணியும் ஆண்களைப் பற்றியது இது.

மோதிரம், செயின், கம்மல், வளையல் எனப் பெண்களின் பிதுரார்ஜித உரிமைகளில் நான்கினை ஆண்கள் தமக்குமான ஆபரணங்களாக அபகரித்துக்கொண்டது பற்றி நிரம்ப வருத்தப்பட்டிருக்கிறேன். பால்ய வயதுகளில் நகையணியும் ஆண்களைப் பார்க்க நேர்ந்தால் குறைந்தபட்சம் நாலடியாவது தள்ளி நின்றுவிடுவேன். குறிப்பாக, ரயிலில் சீட்டுக்கு அடியே சூட்கேசை வைத்து இழுத்துக் கட்டும் இரும்புச் சங்கிலி கனத்துக்குக் கழுத்தில் செயின் அணிந்து நகர்வலம் வரும் நபர்களைக் கண்டால் எனக்குக் கிலி...

மோதிரதாரிகளால் பெரிய அபாயமில்லை என்றாலும் கோப்பரகேசரி முப்பத்தி ஆறாம் குலோத்துங்க சோழனின் இலச்சினையைப் போல் நீண்டு அகன்று தோற்றமளிக்கும் எழுபது எம்மெம் மோதிரங்களை விரலுக்கு இரண்டு வீதம் இரு கரங்களிலும் ஏந்தி நிற்போரைக் கண்டாலும் கொஞ்சம் ஒரு மாதிரி 
ஆகிவிடும்...

ஆயிரம் சொல்லுங்கள். பெண்கள் அணிந்தால் பார்க்க அழகு. ஆண்கள் அணிவது அராஜகத்தின் உச்சம் என்பதே என் கருத்தாக இருந்தது.
http://www.writerpara.com  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com