வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 108

கணேஷும் மீனாட்சியும் ஆங்கில கிரிக்கெட் வர்ணனையில் பயன்படுத்தப்படும் சொற்றொடர்கள் ஆணாதிக்க
வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 108

கணேஷும் மீனாட்சியும் ஆங்கில கிரிக்கெட் வர்ணனையில் பயன்படுத்தப்படும் சொற்றொடர்கள் ஆணாதிக்க மனப்பான்மையுடன் உள்ளதைப் பற்றி விவாதிக்கிறார்கள். மீனாட்சி bowl a maiden over  எனும் Pharse எவ்வாறு பெண்ணுடலைப் பற்றி கொச்சையாக பேசுகிறது என விளக்குகிறார். அப்போது அவர் Consummate எனும் வினைச்சொல்லை பயன்படுத்துகிறார். அதன் பொருள் என்ன என கணேஷ் வினவுகிறான். 

மீனாட்சி: Consummate என்றால் உடலுறவு  மூலம் ஒரு திருமணத்தை நிறைவு செய்வது எனப் பொருள். 

கணேஷ்: ஓ... அதனால் தான் maiden என்ற சொல்லே உங்களுக்கு ஒரு ... ஒரு... சரியான சொல் வரவில்லை. நாவின் விளிம்பில் இருக்கிறது...

மீனாட்சி: like a red rag to a bull

கணேஷ்: ஆமா to say maiden over to Meenakshi is like raising a red rag to a bull  இது காளைச் சண்டையில் காளையை நோக்கி சிவப்புத் துணியை அசைத்துக் காட்டுவதில் இருந்து ஏற்பட்ட சொற்றொடரா?

மீனாட்சி:  ஆமா. வர்ன் You provoke a person when you raise a red rag to him or her.

கணேஷ்: ஆனால் நான் consummate என்பதை வேறு அர்த்தத்திலும் படித்திருக்கிறேனே! Virat Kohli is a consummate artist when it comes to chasing totals. நேத்து பேப்பர்ல ஒரு கட்டுரையில் முதல் வாக்கியம்.

மீனாட்சி:  ஆமாம். இங்கே consummate என்பது ஒரு adjective  முழுமையான, கச்சிதமான, பிழையற்ற, உன்னதமான, அற்புதமான எனும் அர்த்தங்கள் கொண்ட சொல். 

கணேஷ்:  எப்படி இரு வேறு அர்த்தங்கள்?

புரொபஸர்: நான் சொல்கிறேன். திருமணத்திற்குப் பிறகுதான்  ஒரு பெண் முழுமையாகிறாள். She is consummated.  அதனால் she is consummate.

மீனாட்சி:  I disagree. திருமணம் தான் ஒரு பெண்ணை பெண்ணாக்குகிறது என்பதை நான் ஒத்துக் கொள்ள மாட்டேன்.  இது போல் sexism-த்தை மாணவர்களுக்கு போதிக்கும் பேராசிரியர்களை தூக்கிலிட வேண்டும்.

கணேஷ்:  ஐயோ வேண்டாம். சாருக்காக நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன்.

புரொபஸர்: நீ அஞ்சாதே. இவர்கள் எல்லாரும் சும்மா எடுத்தாலே தலையை வெட்டணும், தூக்கிலடணுமுன்னு தான் பேசுவாங்க. For your kind information  நீ தூக்கிலிடணுமுன்னா தல்ஸ்தாயை தான் தூக்கிலிடணும்.

மீனாட்சி: ஏன்? அவர் என் favorite author ஆச்சே!

புரொபஸர்: அவர் தனது "அன்னா கரெனீனா', "போரும் வாழ்வும்' ஆகிய நாவல்களில் வலியுறுத்தும் கருத்து இது: இளம் பெண்கள் திருமணமாகி நிலைப்படும் போது தான் அமைதியும் ஆத்ம திருப்தியும் பெறுகிறார்கள். அவர்கள் மனுஷிகளாக முழுமை அடைகிறார்கள். "அன்னா கரெனீனா',வில் கிட்டியும்,  "போரும் வாழ்வும்'  நட்டாஷாவும் இப்படித் தான் பெண்களாக மலர்கிறார்கள்.

மீனாட்சி: It is disgusting. தால்ஸ்தாயிடம் எனக்குப் பிடிக்காததே இது தான். நான் திருமணத்துக்கு முன்பே முழுமையானவளாய் இருந்தேன்.

கணேஷ்: அப்படீன்னா தல்ஸ்தாயின் லாஜிக் படி நீங்க புரொபஸரை திருமணமே செஞ்சுருக்கக் கூடாதே?

புரொபஸர்: யெஸ் நல்லா கேட்டே. அவ ஃபெமினிஸ்டா இருந்தாலும் ஏன் என்னை கட்டிக்கிட்டா தெரியுமா?

கணேஷ்: ஏன்?

புரோபஸர்: Because I bowled the maiden over.

கணேஷ்: ஆங்?

புரொபஸர்: அப்படி ஒரு ண்க்ண்ர்ம் இருக்கு. ரொமாண்டிக்காக  ஓர்  இளம்பெண்ணைக் கவர்ந்து நம் பின்னால் பித்தாக திரிய வைப்பது. Bye the bye,

மீனாட்சி இக்கேள்வி உனக்கு:  who is a maid?

கணேஷ்:  வீட்டு வேலைக்காரி

புரொபஸர்: அப்படி என்றால் வீட்டு வேலைக்காரிகள் கன்னிகளா?

மீனாட்சி: அப்படி நான் சொல்லவில்லை. ஆதி ஆங்கிலத்தில் ம்ஹண்க்ங்ய் என்றால் வேலைக்காரி என்ற பொருளும் உண்டு. ஏனென்றால் அக்காலத்தில் ஏழைப் பெண்களுக்கு சுலபத்தில் திருமணமாகாது. அவர்கள் பணக்கார வீடுகளில் வேலைக்காரிகள் ஆவார்கள். அதாவது ஏழையாக இருந்தால் கன்னியாக இருப்பதும், ஏழைக் கன்னியாக இருந்தால் வேலைக்காரியாக இருப்பதும் தவிர்க்க முடியாததாக அப்போது இருந்தது.

(இனியும் பேசுவோம்)
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com