மின்னாற்றல் திறன் மேம்பாட்டுக்கு மானிய உதவி!

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் மின்னாற்றல் திறன் மேம்பாட்டுக்கு மான்ய உதவி வழங்கும் திட்டம் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரப்படுகிறது.
மின்னாற்றல் திறன் மேம்பாட்டுக்கு மானிய உதவி!

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் மின்னாற்றல் திறன் மேம்பாட்டுக்கு மான்ய உதவி வழங்கும் திட்டம் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரப்படுகிறது.

மின்ஆற்றல் ஆய்வு மற்றும் ஆற்றல் சேமிப்பை ஊக்கப்படுத்தும் திட்டத்தின் - Promotion of Energy Audit and Conservation of Energy (PEACE) scheme -  கீழ் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் தாங்கள் பயன்படுத்தும் மின்னாற்றலை ஆய்வு  செய்து அதன் மூலம் ஆற்றலை சேமிப்பதற்கான வழிமுறைகளை அறிந்து கொள்ள இத்திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.  மேலும் மின்னாற்றல் பயன்பாட்டைக் குறைத்து, மின்னாற்றலைச்  சேமிப்பதற்குத்  தேவையான கருவிகளை வாங்கி முதலீடு செய்வதற்கான நிதி உதவியும் அளிக்கப்படுகிறது. மின்னாற்றல் ஆய்வு செலவுக்கும், உபகரண முதலீட்டிற்கும் மான்ய உதவியும் வழங்கப்படுகிறது.

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் மின்னாற்றல் ஆய்வுக்கு ஆகும் செலவில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.75 ஆயிரம் வரை அரசு மானியம் வழங்குகிறது.  மேலும் மின்னாற்றல் ஆய்வின் அடிப்படையில் தொழில் நிறுவனங்கள் மின்னாற்றலைச் சேமிப்பதற்கான தொழில் நுட்பங்களைப்  பெறுவதற்கும் மின்னாற்றலைச் சேமிப்பதற்கான உபகரணங்கள் அமைப்பதற்கான முதலீட்டில் 25 சதவீதம் மானியம் அரசு வழங்குகிறது.  மேலும் உபகரண செலவுகளுக்காக அதிகபட்சமாக ரூ.2.50 லட்சம் நிதி உதவி வழங்கப்படுகிறது.   

இதுகுறித்து மேலும் விவரங்களுக்கு தமிழகத்தின் அனைத்து மாவட்ட தொழில் மையங்களை அணுகி பயன்பெறலாம்.
- எம்.அருண்குமார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com