வீடியோவைப் பதிவேற்றுங்கள்... ஆன்லைன் மூலம் சம்பாதியுங்கள்!

ஆன்-லைன் வாயிலாக சம்பாதிக்க இருபதுக்கும் மேற்பட்ட வழிகள் இருக்கின்றன. அவற்றில் யூடியூப் (youtube) மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி? என்பதைப்  பார்ப்போம்.
வீடியோவைப் பதிவேற்றுங்கள்... ஆன்லைன் மூலம் சம்பாதியுங்கள்!

ஆன்-லைன் வாயிலாக சம்பாதிக்க இருபதுக்கும் மேற்பட்ட வழிகள் இருக்கின்றன. அவற்றில் யூடியூப் (youtube) மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி? என்பதைப்  பார்ப்போம்.

யூடியூப்-ஐ  இணையத்தின்  தொலைக்காட்சி என்று கூட சொல்லலாம்.  எப்படி விக்கிபிடியாவில் அனைத்துறை தகவல்களும் கிடைக்கிறதோ, அதேபோன்று யூடியூப் வீடியோ தளத்தில் கிடைக்காத தகவல்களே இல்லை எனலாம். 

உலக அளவில், சராசரியாக ஒரு நிமிடத்திற்கு 50 மணி நேர வீடியோ பதிவு பதிவேற்றம் (upload) செய்யப்படுகிறது.  அந்த வகையில், இந்தியாவில் அதிக பார்வையாளர்களைக் கொண்டுள்ள பத்தாவது சேனலாக யூடியூப் உள்ளது. உலக அளவில் பார்வையாளர்களைக் கொண்டுள்ள இந்த யூடியூப் சேனலின் மூலம்  நாம் பணம் சம்பாதிக்க என்ன  செய்ய வேண்டும்?

இதற்கான அடிப்படை தேவைகள்: 

இன்டர்நெட் இணைப்புடன் கூடிய கம்ப்யூட்டர்,  ஒரு வீடியோ கேமரா இருக்க வேண்டும். 

முதலாவதாக யூடியூப் அக்கவுண்ட் துவங்கி, புதிய சேனலைத் தொடங்க வேண்டும்.  நீங்கள் ஆரம்பிக்கும் யூடியூப் சேனலின் பெயர் வித்தியாசமானதாகவும் எளிதாக பார்வையாளர்களைக் கவரும் வண்ணம் இருக்க வேண்டும். 

உங்களுக்கு அருகில் நடக்கும் வித்தியாசமான நிகழ்வுகளை வீடியோ பதிவு செய்யுங்கள்.  உதாரணத்திற்கு உங்கள் மனைவி நன்றாக சமைப்பவர் என்றால் அதை வீடியோ பதிவு செய்யலாம் அல்லது நீங்கள் நல்ல உடை வடிவமைப்பாளராக இருந்தால் அதைப்பற்றி வீடியோ பதிவு செய்யலாம். இதேபோல் தொழில் நுட்ப விஷயங்கள், திரை விமர்சனங்கள், வீடியோ டுடோரியல்கள், அழகு குறிப்புகள், மிமிக்ரி, சுற்றுலாத் தள வீடியோக்கள், பாடல்கள், இசைக் கோர்வைகள், வீடியோ ப்ளாக்கிங் அனிமேஷன் போன்றவற்றையும் பதிவேற்றம் செய்யலாம்.  வீடியோவானது முழுக்க முழுக்க உங்களுடையதாக உங்களால் உருவாக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.

உங்களுடைய வீடியோவிற்கு யூடியூப் தரும் ஆடியோவைப் பயன்படுத்தாதீர்கள். அந்த ஆடியோக்களைப் பயன்படுத்தினால் அதில் வரும் விளம்பர வருமானம் உங்களுக்கு வராது. 

எடுத்த வீடியோ பதிவை எப்படி பதிவேற்றம் செய்வது? 

உங்கள் கம்ப்யூட்டரில் மூவி மேக்கர் (movie maker) என்ற மென்பொருளைப் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். "மூவி மேக்கர்' மென்பொருளில் உங்களுடைய வீடியோ பதிவைப் பதிவேற்றம் செய்து தேவை இல்லாத இடங்களை நீக்கம் செய்யுங்கள். உங்கள் வீடியோவிற்கு பின்னணி இசையோ அல்லது குரலோ தேவைப்பட்டால் அதையும் ரெகார்ட் செய்து வீடியோ பதிவில் சேருங்கள். மொத்தத்தில் உங்கள் வீடியோவை பார்வையாளர்கள் பார்க்கும்படி எடிட் செய்யுங்கள். 

அவ்வளவுதான், யூடியூப் தளத்தில் உங்களது சேனலுக்குள் சென்று upload என்ற பட்டனை கிளிக் செய்து உங்கள் வீடியோ பதிவை upload செய்யுங்கள்.

Upload செய்த பிறகு உங்கள் வீடியோ பதிவு குறித்த தகவல்களை தர வேண்டும். பார்வையாளர்களை  எளிதில் கவரும் வண்ணம் ஆங்கிலத்தில் தலைப்பு கொடுங்கள். வீடியோவில் என்ன உள்ளது என Description பகுதியில் சொல்லுங்கள். Tags பகுதியில் உங்கள் வீடியோவை தேடுவதற்கு எளிதான வார்த்தைகளை கொடுங்கள். இப்போது Public என்று தேர்வு செய்து save செய்து விடுங்கள்.

உங்களுக்குப்  பணம் எப்படி வரும்?

நீங்கள் பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோவிற்கு அதிக views  வந்தால் அல்லது உங்கள் வீடியோ உங்களுக்கு சொந்தமானது என்றால் 'invitation to earn revenue from you videos' என்ற தலைப்பில் மின்னஞ்சல் உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு வரும். 

அதில் உள்ள லிங்கில் சென்று உங்கள் தகவல்களை நீங்கள் தர வேண்டும்.

நீங்கள் தந்த தகவல்கள் திருப்தியாக இருப்பின், நீங்கள் பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோக்களைப் பரிசோதனை செய்யும். எனவே நீங்கள் அதிகமான மற்றும் வித்தியாசமான வீடியோக்களைப் பதிவேற்றம் செய்யுங்கள். அதிக பார்வையாளர்கள் பார்க்க வேண்டும். இதைத்தான் யூடியூப் நிறுவனம் எதிர்பார்க்கிறது. எல்லாம் சரியாக இருந்தால் யூடியூப் நிறுவனம் partner என்ற அந்தஸ்தை வழங்கும்.

உங்களில் பலருக்கு partner என்ற அந்தஸ்து கொடுக்காமல் நிராகரிக்கப்படலாம். மேலும் மீண்டும் Apply செய்வதற்கு இரண்டு மாதங்கள் காத்திருக்க வேண்டும். அதற்காக கவலைப்படாதீர்கள். வீடியோ பதிவேற்றம் செய்யாமல் இருக்காதீர்கள். உங்கள் வேலையைத் தொடர்ந்து செய்யுங்கள். இரண்டு மாதங்களுக்கு பின் இன்னும் அதிக வீடியோ, views உடன் மீண்டும் Apply செய்யுங்கள்.

இதற்கிடையே உங்களுக்கு Adsense கணக்கு இருந்தால் அதன் வாயிலாக சம்பாதிக்கும் வாய்ப்பை யூடியூப் உங்களுக்கு வழங்கும். இதில் வீடியோவை பதிவேற்றம் செய்தவுடன் Monetize My Video என்பதை கொடுக்க வேண்டும். இப்போது வீடியோ குறிப்பிட்ட நாட்களுக்கு review செய்யப்படும். வீடியோ உங்களுடையது என்று யூடியூப் நிறுவனம் உறுதி செய்தவுடன் Monetized என்று ஆகி விடும்.

உங்களுடைய Adsense கணக்கை யூடியூப்பில் சேர்க்க, நீங்கள் யூடியூப் கணக்கில் நுழைந்தவுடன் யூடியூப் இதை கேட்கும். கேட்கவில்லையென்றால் சிறிது நேரம் காத்திருக்கவும்.

Partner, Adsense இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் Adsense வருமானம் partner  வருமானத்தை விட குறைவு.

உங்களுக்கு வருமானம் வர ஆரம்பித்து விட்டது என்பதைத் தெரிந்து கொள்ள உங்கள் வீடியோ பதிவிற்கு யூடியூப் நிறுவனம் இரண்டு வகையான விளம்பரங்கள் கொடுக்கும். 

1. வீடியோவின் கீழ் வரும் சிறிய விளம்பரம், 
2. வீடியோவிற்கு முன் வரும் விளம்பரம். 

நீங்கள் எவ்வளவு வீடியோ பதிவேற்றம் செய்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது உங்களது வருமானம் அமையும்.

எனக்குத் தெரிந்த நபர் யூடியூப் சேனலுக்கென்று தனியாக அலுவலகம் வைத்திருக்கிறார். இது தவிர 35 நபர்கள் வேலை செய்கின்றனர். அவர் பதிவேற்றம் செய்யும் ஒவ்வொரு வீடியோவிற்கு ஏறத்தாழ 2.00 லட்சம் views வருகின்றன. மாதத்திற்கு லட்சக் கணக்கில் சம்பாதிக்கிறார். 

எனவே இது அருமையான சந்தர்ப்பம் முயற்சி செய்யுங்கள். பணம் சம்பாதியுங்கள்.

- ரா. சுந்தர்ராமன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com