இதயத்தை 12  மணிநேரம் பத்திரப்படுத்தும் கருவி!

உடல் உறுப்பு தானம் குறித்து நம் நாட்டு மக்களிடையே தற்போதுதான் விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது.
இதயத்தை 12  மணிநேரம் பத்திரப்படுத்தும் கருவி!

உடல் உறுப்பு தானம் குறித்து நம் நாட்டு மக்களிடையே தற்போதுதான் விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. இன்றைய பரபரப்பான வாழ்க்கை சூழ்நிலையில், தானமாக பெறப்பட்ட  ஓர் இதயத்தை 4 மணி நேரத்திற்குள் கொண்டு வந்து ஒருவருக்குப் பொருத்துவது என்பது சவாலான காரியமாகவே உள்ளது.
இதற்காக சாலைகளில் தனி வழித்தடம் ஒதுக்கி குறிப்பிட்ட நேரத்தில் கொண்டு வந்தால்தான், இதயத்தையும், பாதிக்கப்பட்டவரையும் காப்பாற்ற முடியும். உடம்பில் இருந்து எடுக்கப்பட்ட இதயத்தை ஐஸ் பெட்டியில் வைத்து கொண்டு செல்லப்படுகிறது.
இந்த கடினமான சூழ்நிலையில் இருந்து விடுபடும் வகையில், உடம்பில் இருந்து எடுக்கப்பட்ட இதயத்தை 12 மணிநேரம் வாழ வைக்கும் புதிய கருவியை ஸ்வீடனின் லுண்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இதற்காக சிறிய கருவியை அவர்கள் உருவாக்கியுள்ளனர். இந்தக் கருவி இதயத்துக்குத் தேவையான பிராணவாயுவை அளித்து 12 மணி நேரம் உயிர் வாழ வைக்கிறது. இந்த புதிய முறை மூலம் ஒருவரின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட இதயத்தை வெளிநாடுகளுக்கே கொண்டு செல்லலாம். அடுத்தகட்ட முயற்சியாக 24 மணி நேரம் வரை இதயத்தை உயிர் வாழ வைக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளதாக லுண்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
- அ.சர்ஃப்ராஸ்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com