வேலை...வேலை...வேலை...

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை,  தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் வேலை, ஆவின் நிறுவனத்தில் வேலை
வேலை...வேலை...வேலை...

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை  
பணி:  Jr. Engineering Assistant-IV  (©¬ÜLs: Production (Chemical), Electrical, Mechanical, Instrumentation, Fire & Safety)
மொத்த காலியிடங்கள்: 45
தகுதி:  சம்பந்தப்பட்ட பிரிவில் மூன்று ஆண்டு பொறியியல்  டிப்ளமோ படிப்பில் 50% மதிப்பெண்கள் பெற்றுத் தேறியிருக்க வேண்டும்.   குறைந்த பட்சம் ஓராண்டு பணி அனுபவம் பெற்றிருக்கவேண்டும். Fire & Safety பணிக்கு,  Matric plus Sub-Officer’s Course (from NFSC-Nagpur) படிப்பில் தேர்ச்சி அல்லது அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்;  அத்துடன் கனரக வாகனம் ஓட்டும் லைசன்ஸ் பெற்றிருக்கவேண்டும்.  ஓராண்டு பணி அனுபவம் பெற்றிருக்கவேண்டும். 
வயது வரம்பு:  18 வயது முதல் 26 வயதுக்குள் இருக்கவேண்டும்  (குறிப்பிட்ட பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு  உண்டு). 
விண்ணப்பக் கட்டணம்:  ரூ.150/-  
விண்ணப்பிக்கும் முறை:  http://www.iocl.com  என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் பதிவு செய்து விண்ணப்பித்த பின், பிரிண்ட்-அவுட் எடுத்து,  தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்க்காணும் முகவரிக்கு  சாதாரண தபாலில் மட்டுமே அனுப்பி வைக்க வேண்டும்.   
முகவரி:  DGM(HR), HR Dept, Administration Building, Mathura Refinery, Mathura, Uttar Pradesh-281005 
தேர்வு செய்யப்படும் முறை:  எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு, உடல் தகுதித் திறன் தேர்வு  மூலம்  தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.  
மேலும் விவரங்களுக்கு: https://www.iocl.com/download/ALL-INDIA-AD(OCT'17)-FINAL.pdf என்ற இணையதளத்தைப்  பாருங்கள். 
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி:  31.10.2017
விண்ணப்பங்கள் சென்று சேரக் கடைசித் தேதி:  07.11.2017 

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் வேலை
பணி:  Hindi Officer cum Senior Assistant Secretary 
காலியிடங்கள்: 01
தகுதி: முதுகலைப் பட்டத்தை ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் முடித்திருக்க வேண்டும்;  அத்துடன் தமிழில் போதுமான மொழியாற்றல் இருப்பது அவசியம். 
 வயது வரம்பு:  30 வயதுக்குள் இருக்கவேண்டும். 
விண்ணப்பிக்கும் முறை: http://www.vocport.gov.in/port/userinterface/Recruitment.aspx  என்ற இணையதளத்தில் தரப்பட்டுள்ள  விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து,  பூர்த்தி செய்து,  தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்க்காணும் முகவரிக்கு  தபால் மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.  
 முகவரி: The Secretary,  V.O.Chidambaranar Port Trust, Administrative Office, Bharathi Nagar, Tuticorin - 628 004.
தேர்வு செய்யப்படும் முறை:  தகுதித்திறன் அடிப்படையில்  தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப் படுவார்கள். 
விண்ணப்பங்கள் சென்று சேரக் கடைசித் தேதி:  31.10.2017 

ஆவின் நிறுவனத்தில் வேலை  
பணி:  Manager (Vet./P&I), Technician (Lab), Junior Executive (Office), Technician (Refrigeration), Technician (Electrical), Senior Factory Assistant.
மொத்த காலியிடங்கள்: 24
தகுதி:  Manager (Vet./P&I) பதவிக்கு பட்டப்படிப்பில் வெட்னரி சயின்ஸ் பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்; அத்துடன் வெட்னரி கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.  Technician (Lab) பதவிக்கு பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்; அத்துடன் Lab (Technician) பிரிவில் இரண்டு ஆண்டுகள் டிப்ளமோ படித்திருக்க வேண்டும். Junior Executive (Office) பதவிக்கு B.A(Co.Op), B.Com (Co.Op) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்; அல்லது ஏதேனும் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்று, கோ-ஆபரேடிவ் டிரெய்னிங் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். Technician (Refrigeration) பதவிக்கு பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்; அத்துடன் ஐடிஐ (ரெஃப்ரிஜிரேஷன் & ஏர்-கண்டிஷனர் மெக்கானிக் - NTC) படித்திருக்கவேண்டும்., அல்லது மெக்கானிக்கல் என்ஜினியரிங் டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.  Technician (Electrical) பதவிக்கு பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்; அத்துடன் ஐடிஐ (எலக்ட்ரீஷியன்) படிப்புடன் - National Trade Certificate மற்றும் லைன்மேன்-ஒயர்மேன் ‘B'லைசன்ஸ் பெற்றிருக்கவேண்டும்; அல்லது எலக்ட்ரிக்கல் & எலக்ரானிக்ஸ் என்ஜினியரிங் பிரிவில் டிப்ளமோ படிப்புடன் ‘C' லைசன்ஸ் பெற்றிருக்கவேண்டும். Senior Factory Assistant பதவிக்கு +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்; அல்லது ஏதேனும் ஒரு பிரிவில் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.   
வயது வரம்பு: 18 வயது முதல் 30 வயதுக்குள் இருக்கவேண்டும்  (குறிப்பிட்ட பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு  உண்டு).
விண்ணப்பக் கட்டணம்:  ரூ.250  (குறிப்பிட்ட பிரிவினருக்கு கட்டணம் இல்லை)
விண்ணப்பிக்கும் முறை: http://www.aavinmilk.com/hrktgapp121017.pdf என்ற இணையதளத்தில் உள்ள   விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து,  பூர்த்தி செய்து,  தேவையான சான்றிதழ்களின் நகல்கள் மற்றும் தமிழ் மீடியம் படித்ததற்கான PSTM சான்றிதழ் இணைத்து கீழ்க்காணும் முகவரிக்கு  பதிவுத் தபால் அல்லது ஸ்பீட் போஸ்ட் மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.   
முகவரி: 
The General Manager,
The Kancheepuram - Thiruvallur District
Cooperative Milk Producers’ Union Ltd.,
No.55, Guruvappa Street, Ayanavaram,
CHENNAI - 600 023
தேர்வு செய்யப்படும் முறை:  எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பங்கள் சென்று சேரக் கடைசித் தேதி:  31.10.2017 

தமிழ்நாடு விவசாயப் பல்கலைக்கழகத்தில் வேலை 
பணி:  Junior Assistant cum Typist 
காலியிடங்கள்: 129
தகுதி: +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்;  கணினி அறிவு வேண்டும். அத்துடன் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பல்கலைக்கழகத்தில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். தட்டச்சு தமிழ்-ஆங்கிலம் ஹையர் கிரேடு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.  தமிழ்-ஆங்கிலம் ஆங்கிலம் மொழிகளில் ஏதேனும் ஒன்றில் லோயர் கிரேடு தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.
வயதுவரம்பு:  30 வயதுக்குள் இருக்கவேண்டும். (பி.ஸி., எம்.பி.ஸி., எஸ்.ஸி., எஸ்.டி., பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு  உண்டு).
விண்ணப்பக் கட்டணம்:  ரூ.750 (குறிப்பிட்ட பிரிவினருக்கு ரூ.500 ) The Comptroller, TNAU, Coimbatore என்ற பெயரில், பாரத ஸ்டேட் வங்கியில் டி.டி. எடுத்து விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்பவேண்டும். 
விண்ணப்பிக்கும் முறை: http://www.jat.tnausms.in/  என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பித்து-பிரிண்ட் -அவுட் எடுத்து தேவையான சான்றிதழ்களின் நகல்களை  இணைத்து கீழ்க்காணும் முகவரிக்கு "ரிஜிஸ்டர் போஸ்ட்-வித் அக்னா
லெட்ஜ்மெண்ட் டியூ' முறையில், அல்லது கூரியர் மூலம் அனுப்பலாம்;  நேரிலும் சமர்ப்பிக்கலாம்.  
முகவரி:  
The Registrar, Tamil Nadu Agricultural University,
Coimbatore  641 003
தேர்வு செய்யப்படும் முறை:  எழுத்துத் தேர்வு, தட்டச்சு, கணினித்  திறன் தேர்வு  மூலம் தகுதியுடையவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
மேலும் விவரங்களுக்கு: http://14.139.13.70/Reports/JAT%20Information%20Brochure.pdf என்ற இணையதளத்தைப் பாருங்கள். 
விண்ணப்பங்கள் சென்று சேரக் கடைசித் தேதி:  31.10.2017 
தொகுப்பு:  ரவி
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com