வேலை... வேலை... வேலை... அரசு துறைகளில் வேலை

18 வயது முதல் 24 வயதுக்குள் இருக்கவேண்டும்  (குறிப்பிட்ட பிரிவினருக்கு அதிகபட்ச வயது
வேலை... வேலை... வேலை... அரசு துறைகளில் வேலை

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் வேலை  
பணி:   Trade Apprentice (பிரிவுகள்: Accountant, Cabin/Room Attendant, Computer Operator and Programming Assistant,  Data Entry Operator,  Electrician,  Electronics Mechanic , Fitter,  House Keeper (Corporate),  Information  Technology  and  Electronics System Maintenance,  Instrument Mechanic,  Laboratory Assistant (Chemical Plant), Library Assistant, Mechanic (Motor vehicle), Mechanic Diesel, Refrigeration and Air Conditioning Mechanic, Secretarial Assistant,  Store Keeper,  Welder (Gas & Electric)

காலியிடங்கள்:  285

தகுதி:  +2 படிப்பில் தேர்ச்சி மற்றும் சம்பந்தப்பட்ட பிரிவில்  TRADE CERTIFICATE பெற்றிருக்க  வேண்டும். LABORATORY ASSISTANT  பதவிக்கு BSC (Physics/ Chemistry)  பட்டப்  படிப்பில் தேர்ச்சி மற்றும்   Laboratory Assistant   பிரிவில் Trade Certificate பெற்றிருக்க வேண்டும். 

வயது வரம்பு:  18 வயது முதல் 24 வயதுக்குள் இருக்கவேண்டும்  (குறிப்பிட்ட பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு  உண்டு). 

விண்ணப்பிக்கும் முறை: http://www.ongcindia.com/wps/wcm/reportspdf/common/1961_Karaikal.pdf  என்ற இணையதளத்தில் தரப்பட்டுள்ள  மாதிரி விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, அதில்  குறிப்பிட்டுள்ள சான்றிதழ்களை இணைத்து, கீழ்க்காணும் முகவரிக்கு தபால் மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.  

முகவரி:   I/C HR-ER, ONGC Karaikal Asset, Neravy Office Complex, Neravy (PO), Karaikal -609604. 
 
தேர்வு செய்யப்படும் முறை:  எழுத்துத் தேர்வு, உடல் தகுதிக்கான மருத்துவச் சான்றிதழ் போன்றவை  மூலம்  தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
 
மேலும் விவரங்களுக்கு:  http://www.ongcindia.com/wps/wcm/connect/ongcindia/home/career/recruitment+notices/notification-for-engagement-of-apprentices-under-apprentices-act-19611 என்ற இணையதளத்தைப் பாருங்கள். 

விண்ணப்பங்கள் சென்று சேரக் கடைசித் தேதி:  03.11.2017 


இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை
 
பணி:  Technician Apprentice  (பிரிவுகள்:  Mechanical, Electrical, Telecom & Instrumentation)  
மொத்த காலியிடங்கள்: 310 (தமிழ்நாடு மட்டும்-22)

தகுதி:   சம்பந்தப்பட்ட பிரிவில் மூன்று ஆண்டு டிப்ளமோ அல்லது இரண்டு ஆண்டு டிப்ளமோ - ஓர் ஆண்டு ஐடிஐ படிப்பை முடித்திருக்க வேண்டும்.  குறைந்தபட்சம் 50 சதவீத  மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

வயது வரம்பு:  18  வயது முதல்  24 வயதுக்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:  https://plis.indianoilpipelines.in  என்ற  இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.   

தேர்வு செய்யப்படும் முறை:  எழுத்துத் தேர்வு, நேர்முகத்  தேர்வு மூலம்  தகுதியான  நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.  

மேலும் விவரங்களுக்கு:  https://www.iocl.com/download/PL-Technician-Apprentices-Notification.pdf என்ற இணைய தளத்தைப் பாருங்கள். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி:  06.11.2017


தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தில் வேலை 

பணி: Junior Assistant , Typist, Steno-Typist Gr.III, Library Assistant, Fishery Assistant, Farm Manager, Electrician Gr. II, Mechanic Gr. II, Lab. Attendant, Office Assistant. 

மொத்த காலியிடங்கள்: 25

தகுதி: Junior Assistant பதவிக்கு, பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க  வேண்டும்., அத்துடன்  Certificate course in computer on office Automation படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பஹ்ல்ண்ள்ற் பதவிக்கு, பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், தமிழ் - ஆங்கிலம் தட்டச்சு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Steno-Typist Gr.III பதவிக்கு, பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்., அத்துடன் தமிழ் - ஆங்கிலம் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.  Library Assistant  பதவிக்கு, நூலகவியல் சான்றிதழ் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க  வேண்டும்., அத்துடன் நல்ல கையெழுத்துத் திறன் பெற்றிருக்க வேண்டும். Fishery Assistant பதவிக்கு, குறைந்தபட்ச கல்வியறிவு பெற்றிருக்க வேண்டும்., அத்துடன் அங்கீகரிக்கப்பட்ட ஃபிஷர்மேன் டிரெய்னிங் சென்டரில் குறைந்த பட்சம் பத்து மாதங்கள் பயிற்சி  பெற்றிருக்க வேண்டும்.  Farm Manager பதவிக்கு, B.F.Sc., பட்டப்படிப்பில் 3.00/4.00 அல்லது 7.00/10.00 என்ற தரப் புள்ளிகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Electrician Gr. II பதவிக்கு, தொடர்புடைய பிரிவில் ஐ.டி.ஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்., மாநில மொழியில் படிக்கவும் - எழுதவும் திறன் பெற்றிருக்க வேண்டும்.,  அத்துடன்  குறைந்த பட்சம் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.  Mechanic Gr. II  பதவிக்கு, மெக்கானிக்கல் என்ஜினியரிங் பிரிவில் ஐ.டி.ஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்., அத்துடன்  குறைந்த பட்சம் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.  Lab. Attendant  பதவிக்கு, எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்., அத்துடன் fishes அல்லது aquatic animals அல்லது Laboratory பிரிவில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும், நல்ல உடல் நலத்துடன் இருக்கவேண்டும், சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். Office Assistant பதவிக்கு, எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்., நல்ல உடல் நலத்துடன் இருக்க வேண்டும், சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும், அலுவலகப் பணிகளில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:  30 வயதுக்குள் இருக்கவேண்டும். பி.சி., எம்.பி.சி., டி.சி பிரிவினர்  32 வயதுக்குள் இருக்கவேண்டும்., எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர்  35 வயதுக்குள் இருக்கவேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்:  ரூ.500 (குறிப்பிட்ட பிரிவினருக்கு ரூ.250 ) விண்ணப்பக் கட்டணத்தை The Finance Officer, Tamil Nadu Fisheries University, Nagapattinam-611 001 என்ற பெயரில்,  தேசிய மயமாக்கப்பட்ட ஏதேனும் ஒரு வங்கியில் டி.டி. எடுத்து விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை:   http://tnfu.ac.in/app/webroot/img/documents/Non-teaching-staff-Application.pdf என்ற இணையதளத்தில் தரப்பட்டுள்ள  விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து,  பூர்த்தி செய்து,  தேவையான சான்றிதழ்களின் நகல்கள் இணைத்து கீழ்க்காணும் முகவரிக்கு  தபால் மூலம் அனுப்பி வைக்க வேண்டும். 

முகவரி:  The Registrar, Tamil Nadu Fisheries University, Nagapattinam-611 001
தேர்வு செய்யப்படும் முறை:  கல்வித் தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்படும்  நபர்கள்,   நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு, தகுதி வாய்ந்தவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். 

மேலும் விவரங்களுக்கு:   http://tnfu.ac.in/app/webroot/img/documents/No-of-posts-qualification-terms-and-conditions.pdf Utßm http://tnfu.ac.in/app/webroot/img/documents/Non-teaching-Advertisement1.pdf  என்ற இணையதளத்தைப் பாருங்கள்.

விண்ணப்பங்கள் சென்று சேரக் கடைசித் தேதி:  07.11.2017

ஆவின் நிறுவனத்தில் வேலை 
பணி:  ஒன்ய்ண்ர்ழ் உஷ்ங்ஸ்ரீன்ற்ண்ஸ்ங் (ஞச்ச்ண்ஸ்ரீங்), உஷ்ற்ங்ய்ள்ண்ர்ய் ஞச்ச்ண்ஸ்ரீங்ழ் (எழ்ஹக்ங் ஐஐ), பங்ஸ்ரீட்ய்ண்ஸ்ரீண்ஹய் (கஹக்ஷ) 
பணியிடம்: சிவகங்கை, ராமநாதபுரம்  மாவட்டம்.

மொத்த காலியிடங்கள்: 05

தகுதி:   Junior Executive (Office) பதவிக்கு B.A(Co.Op, B.Com (Co.Op) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன் MPCS-இல் பத்தாண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். Extension Officer (Grade II)   பதவிக்கு ஏதேனும் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்று, கோ-ஆபரேடிவ் டிரெய்னிங் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்;  அத்துடன் MPCS-இல் பத்தாண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் (அல்லது) பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள், கோ-ஆபரேடிவ் டிரெய்னிங் தேர்ச்சி பெற்றிருப்பதுடன் MPCS -இல் பதினைந்து ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். B.A(Co.Op), B.Com (Co.Op) தேர்ச்சி பெற்றவர்கள் ஐந்து ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்;  Technician (Lab) பதவிக்கு பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்; அத்துடன் Lab (Technician)  பிரிவில் இரண்டு ஆண்டுகள் டிப்ளமோ படித்திருக்க வேண்டும்; அத்துடன் MPCS-இல் பத்தாண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்:  ரூ.250  (குறிப்பிட்ட பிரிவினருக்கு கட்டணம் இல்லை)

விண்ணப்பிக்கும் முறை: http://www.aavinmilk.com/hrvdnapp191017.pdf  என்ற இணையதளத்தில் உள்ள   விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து,  பூர்த்தி செய்து,  தேவையான சான்றிதழ்களின் நகல்கள் மற்றும் தமிழ் மீடியம் படித்ததற்கான  PSTM  சான்றிதழ் இணைத்து கீழ்க்காணும் முகவரிக்கு  பதிவுத் தபால் அல்லது விரைவு அஞ்சல்  மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.   

முகவரி:  The General Manager, Sivagangai District Co-operative Milk Producers’ Union Limited, Kazhanivasal, Karaikudi-2

தேர்வு செய்யப்படும் முறை:  எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
 
மேலும் விவரங்களுக்கு: http://www.aavinmilk.com/hrvdnapp191017.pdf    என்ற இணையதளத்தைப்  பாருங்கள். 

விண்ணப்பங்கள் சென்று சேரக் கடைசித் தேதி:  08.11.2017 

தொகுப்பு:  ரவி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com