போலி பொருள்களை கண்டறியும் ஆப்!

உலகில் அசல் பொருள்களை விட போலிகளின் புழக்கம்தான் அதிகரித்து வருகிறது.
போலி பொருள்களை கண்டறியும் ஆப்!

உலகில் அசல் பொருள்களை விட போலிகளின் புழக்கம்தான் அதிகரித்து வருகிறது. விஞ்ஞானிகள் இரவும், பகலும் கடினமாக உழைத்து உருவாக்கும் புதிய தொழில்நுட்பம் அடங்கிய பொருள்களை, அச்சு அசல் மாறாமல் அப்படியே அவை போலிகளாக  வெளியிடப்படுகின்றன.

போலி பொருள்கள், உலக வர்த்தகச் சந்தையில் 7 சதவீதத்தை எட்டியுள்ளதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. விஞ்ஞான வளர்ச்சிக்கு இணையாக இந்த போலி பொருள்களின் வளர்ச்சியும் அசூர வேகத்தில் செல்கிறது. எலக்ட்ரானிக் பொருள்களை போலி என கண்டறிவதற்கு அதனைப் பிரித்துப் பார்த்தால் மட்டுமே முடியும்.  இதனால் அந்தப் பொருளுக்கும் சேதம் ஏற்படும் என்பதால்,  அத்தகைய ஆய்வை மேற்கொள்ள யாரும் முன்வருவதில்லை.

இதனால் போலி பொருள்களைக் கண்டுபிடிப்பது என்பது சவாலாக இருந்தது. இந்தச் சவாலை,  அமெரிக்க பல்கலைக்கழகத்தின் இந்திய வம்சாவளி ஆராய்ச்சியாளர்கள் முறியடித்துள்ளனர்.

ஸ்மார்ட் போன் மூலம் போலிகளைக் கண்டறியும் புதிய Apps - ஐ இவர்கள் கண்டுபிடித்துள்ளனர். செயற்கை நுண்ணறிவு (ஆர்டிபிசியல் இண்டலிஜன்ஸ்) மூலம் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஆப்,  அசல் பொருள்களையும், போலி பொருள்களையும் கண்டுபிடிக்கிறது.

எலக்ட்ரானிக் பொருள்கள் மட்டுமின்றி, ஜவுளிகள், தோல் பொருள்கள், மருந்து மாத்திரைகள், விளையாட்டு பொம்மைகள், காலணிகள் என பல்வேறு வகையிலான போலி பொருள்களைக் கண்டறிகிறது.

இதற்காக  இந்த  ஆப் - இல் சுமார் 30 லட்சம் அசல் பொருள்களின் தகவல்கள் சேகரிக்கப்பட்டு உள்ளூட்டப்பட்டுள்ளன. இந்த ஆப்பைக் கொண்டுள்ள ஸ்மார்ட் போனையோ, டாப்லேட்டையோ அதன் கேமிரா மூலம் ஒரு பொருளை காண்பித்து, ஆப் சொல்லும் செயல்களைச் பின்பற்றினால் போதும். அந்தப் பொருள் அசலா, போலியா என்பதை அந்த  ஆப் - ஐ கண்டுபிடித்துவிடும்.

இந்த ஆப் போலிகளை 98 சதவீதம் துல்லியமாகக்  கண்டுபிடித்துவிடுவதாக அமெரிக்க பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் லஷ்மிநாராயணன் சுப்பிரமணியன்  தெரிவிக்கிறார்.
- அ.சர்ஃப்ராஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com