மக்கள் தொடர்புத்துறை... கல்வி நிறுவனங்கள்!

அரசாங்கமாக இருந்தாலும், தொழில் நிறுவனங்களாக இருந்தாலும் தங்களுடைய திட்டங்கள், செயல்பாடுகளை மக்களுக்கு தெரியப்படுத்தவும், மக்களிடம் கொண்டு சென்று சேர்க்கவும் மக்கள் தொடர்பு துறை செயல்படுகிறது.
மக்கள் தொடர்புத்துறை... கல்வி நிறுவனங்கள்!

அரசாங்கமாக இருந்தாலும், தொழில் நிறுவனங்களாக இருந்தாலும் தங்களுடைய திட்டங்கள், செயல்பாடுகளை மக்களுக்கு தெரியப்படுத்தவும், மக்களிடம் கொண்டு சென்று சேர்க்கவும் மக்கள் தொடர்பு துறை செயல்படுகிறது.

அரசாங்கமோ, தொழில் நிறுவனமோ நேரடியாக மக்களை தொடர்பு கொள்வதில்லை.  மக்கள் தொடர்பு துறையினர் தான் மக்களை தொடர்பு கொண்டு அரசாங்கத்தின், தொழில் நிறுவனத்தின் செயல்பாடுகளை மக்களுக்கு தெரியப்படுத்துகின்றனர். 

இத்துறையில் பணிபுரிபவர்கள் அனைவருடைய மனநிலையைப் புரிந்து செயல்படக்கூடியவராகவும், ஒருங்கிணைக்கும் திறன், சிறந்த முறையில் தகவல் பறிமாற்றம் செய்யும் திறனுடையவராகவும், குழுவோடு பணியாற்றுபவராகவும் இருக்க வேண்டியது அவசியம்.  மக்கள் தொடர்பு சம்பந்தமான பல்வேறு பட்டயம், பட்டப்படிப்புகள் பல்வேறு கல்வி நிறுவனங்களால் நடத்தப்படுகின்றன.

அத்தகைய படிப்புகள் படித்தவர்களுக்கு மக்கள் தொடர்பு துறையில் வேலை வாய்ப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. 

மக்கள் தொடர்பு சம்பந்தமான படிப்பை நடத்தும் கல்வி நிறுவனங்கள் :
Aligarh Muslim University, Aligarh
Bharathidasan University, Tiruchirappalli
Bharatiya Vidya Bhavan's Sardar Patel College of Communication and Management, New Delhi
Centre for Image Management Studies, Noida
Cochin University : School of Management Studies, Kochi
Devi Ahilya Vishwavidyalaya, Indore
Gujarat University, Ahmedabad
Indian Institute of Journalism, New Delhi
Indian Institute of Mass Communication (I.I.M.C.), New Delhi
Indian Institute of Public Relations, New Delhi
Institute of Marketing and Management, New Delhi
K.C. College of Management Studies, Mumbai
Meteor Institute of Digital Design Studies (M.I.D.D.S.), Thane
New Delhi Y.M.C.A. Centre for Mass Media, New Delhi
Punjabi University, Patiala
- எம்.அருண்குமார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com