இணைய வெளியினிலே...

எங்க ஊர்ல பஸ்ட்டாண்டு பக்கத்திலே இருக்கும் வண்டிகாரத் தெரு மாரியம்மன் ரொம்ப பவர் புஃல் அப்படீன்னு சொல்லுவாங்க.
இணைய வெளியினிலே...

முக நூலிலிருந்து....
• காட்டைக் கிறுக்கி வானத்தைக்  குழப்பி 
மழையைச் சிதறி வெயிலை அப்பி
வரைந்ததில் உண்டாகியிருந்தது
ஓர் மழலை உலகம்...!
- நிவிகா மித்ரை

• யார் வேண்டுமானாலும் 
அரசியலுக்கு வாருங்கள்...
வருவதற்கு முன்...
ரேசன் அரிசியை ஒருமுறை 
பொங்கி சாப்பிட்டு  வாருங்கள்.
- ராம் பெரியசாமி

• "எத்தனை தடவை திருப்பிச் சொன்னாலும்...
ஏன் உனக்கு புரியவே மாட்டேன் என்கிறது?''
"திருப்பிச் சொன்னா எப்படி புரியும்? நேரா சொல்லுங்க''
- ரியாஸ் குரானா

• அவனும் நடுவதை விடுவதாய் இல்லை...
மழையும் மனமிரங்கி வருவதாய் இல்லை...
இருந்தும் வழியெங்கும்  நட்டுக் கொண்டே  சென்றான்...
மரம் வளர்ப்போம்.... மழை பெறுவோம்....
- குமார் முருகேசன் 

சுட்டுரையிலிருந்து...
• என்னிடமிருக்கும் 
குறைகளை எல்லாம் 
களைந்துவிட்டு
என்னைப் பார்த்தேன்...
அதில் சிறிது கூட நான் இல்லை.
- வந்தியத்தேவன்

• "உன்னை எனக்குப் பிடிக்கும்"
என்று ஒருவர் கூறிவிட்டால்
வாழ்நாள் முழுவதும் 
அவருக்கு உங்களைப் பிடிக்கும் என
கற்பனை கோட்டை 
கட்டிவிடாதீர்கள்
- அர்ச்சனா

வலைதளத்திலிருந்து...
எங்க ஊர்ல பஸ்ட்டாண்டு பக்கத்திலே இருக்கும் வண்டிகாரத் தெரு மாரியம்மன் ரொம்ப பவர் புஃல் அப்படீன்னு சொல்லுவாங்க. ஆனா பொதுவாவே எனக்கும் அதுக்கும் ஒரு பனிப்போர் ரொம்ப வருஷமாவே. நான் ஆறாம் வகுப்பு படிக்கும் போது அப்பா வாங்கி கொடுத்த ஒரு செருப்பை அடுத்த நாளே அந்த கோவிலில் இழந்திருக்கேன். அதன் பிறகு செருப்பு காணாமல் போனதை கிட்ட தட்ட ஆறு மாதம் வரை மறைத்து வச்சிருந்தேனென்றால் அதுக்கு என் சாமர்த்தியம் தான் காரணம்(?)  பின்னே அது தெரிந்து, வேற ஒரு நல்ல செருப்பால் அடி வாங்கினேன். 
அதிலிருந்தே அந்த கோவில் பக்கம் போனாலே செருப்பைக் கழட்டி போட்டு, அதன் மேல் ஏறி கொண்டு சாமி கும்பிடுவேன். "அதுக்கு பேசாம போட்டுகிட்டே கும்பிட்டு தொலைக்கலாம்'ன்னுமுணுமுணுத்து போன பெருசைப் பார்த்து  "போய்யா பெர்சு, இந்த அம்பாள் செமத்தியான பவர்ய்யா, செருப்பு போட்டு கிட்டு கும்பிட்டா கணக்கிலே சுழி தான் கிடைக்கும்' என நினைத்துக் கொண்டேன். (இல்லாட்டியும் சுழி தான் கிடைக்கும்) அதுக்காக அந்த அம்மனைக் கும்பிடாமல் இருந்தது கிடையாது. 
ஒரு தடவை செருப்பின் மீது நின்று கொண்டிருக்கும் போதே ஒரு செருப்பு திருடன்,  "கொஞ்சம் தள்ளிக்கோ"ன்னு,  பக்தி பழமா நான் கும்பிட்டு கிட்டு இருக்கும் போது,  செருப்பை தள்ளி கிட்டுப் போனான். அதிலிருந்து அந்த அம்மன் மேல் எனக்கும் என் மேல் அம்மனுக்கும் செல்ல சண்டை ஆரம்பமாகியது. 
http://abiappa.blogspot.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com