இணைய வெளியினிலே...

மிளகாய் பழுத்தாலும் இனிக்காது... அப்படித்தான் சிலர்.
இணைய வெளியினிலே...

முக நூலிலிருந்து....

வாழ்க்கை உன்னை பின்னோக்கி இழுக்கும்போது,
மனம் தளராதே... 
பின்னோக்கி இழுக்கப்படும் அம்பு தான்...
வேகத்துடன் முன்னோக்கிப் பாய்கிறது. 

அபிதா சுதா

மிளகாய் பழுத்தாலும் இனிக்காது... அப்படித்தான் சிலர்.

மைக்கேல்ராஜ்

பார்வைகளை மட்டும் வீசிவிட்டு...
உயிரைப்பற்றிய கவலையின்றி கடக்கிறாய். 
நாளைக்கேனும்...
என்கிற நம்பிக்கையில்...
கிடக்கிறதென் இதயம். 

பூபதி பூவி

புல்வெளியைக் கண்டதும் ஆனந்தமாய் ஓடுகிறது மனசு... 
சிறுவன்.

ஜவ்வாது முஸ்தபா

நம் எல்லாரின் மனதிலும் எப்போதும் தயாராகவே இருக்கிறது;
துயரக்கடல் நீந்தும் ஒரு படகு.

ஆரூர் தமிழ்நாடன்

சுட்டுரையிலிருந்து...


அறிவைத் தேடி ஒரு வண்டியில்...
வாழ்க்கையைத் தேடி மறு வண்டியில்.

- விப் வீரா

கோபத்தை  உப்பு போல பயன்படுத்தணும்...
குறைந்தால், மரியாதை போயிடும்.
கூடினால், மதிப்பு போயிடும்.

- கடைநிலை ஊழியன்

வாழ்க்கையில முன்னேற படிப்படியா ஏறணும்னு அவசியம் இல்ல...
தேவப்பட்டா லிஃப்ட்ல கூட ஏறிப்போயிடலாம்...
குறிப்பிட்ட ஃபுளோர் வரைக்கும்

- ட்விட்டர் ரவுடி 

நம்ம வாழ்க்கையும்
ஒரு காடு மாதிரிதான்...
அதுல எந்த மிருகம் வந்தாலும்
பொறுத்துப் போங்க...
ஆனால் சந்தேகம் என்ற 
மிருகம் மட்டும் வந்தால்...
உடனே வேட்டையாடிடுங்க...
இல்லைன்னா 
அது நம்மவாழ்க்கையை 
வேட்டையாடிடும்.

- கார்த்திக் உன்னைப்போல் ஒருவன்


வலைதளத்திலிருந்து...


சில நாட்களுக்கு முன்னால் புரோட்டாவைச் சாப்பிடாதீர்கள் என்றொரு செய்தி தீயாய் பரவியது. மைதா மாவு எப்படி உருவாக்கப்படுகிறது? அதில் என்னென்ன வேதிப் பொருட்கள் சேர்க்கப்படுகின்றன? அவை என்னென்ன விதங்களில் உடலுக்குத் தீங்கு செய்கின்றன என்று விரிவான ஆய்வுக் கட்டுரை போல அந்தச் செய்தி அமைந்திருந்தது. படித்துப் பார்த்த பலர், புரோட்டா சாப்பிடுவதையே விட்டு விட்டார்கள். மைதாவுக்கு மெருகூட்ட, அதை வெண்மையாக்க அந்த வேதிப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன என்பதும், அவற்றை உண்பதால் உடலுக்குத் தீங்கு ஏற்படும் என்பதும் உண்மை தான். இதை புரோட்டாவுக்கு எதிராக மட்டும் ஏன் பயன்படுத்தினார்கள்? கேக் வகைகளிலிருந்து மேற்கத்திய உணவுகளான பீட்சா வகைகள் வரை அனைத்திலும் மைதா கலந்திருக்கிறது. மைதாவைப் பயன்படுத்தாதீர்கள் என்று பரப்பினால் அது விழிப்புணர்வு, புரோட்டாவைச் சாப்பிடாதீர்கள் என்று பரப்பினால் அதை விழிப்புணர்வு என்று எடுத்துக் கொள்ள முடியுமா? ஏழைகளின் உணவாக மலிவான விலையில், உடலுக்கு உடனடி தெம்பளிக்கும், பரவலாக உண்ணப்படும் உணவான புரோட்டாவை ஒழித்து விட்டு அந்த இடத்துக்கு பீட்சாவைக் கொண்டு வர செய்யப்படும் சதித் திட்டம் என்பதாகத் தானே அதை புரிந்து கொள்ள முடியும்?
http://rafifeathers.blogspot.in/ 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com