சூரியனுக்கு அருகே உங்கள் பெயர்!

சூரியனுக்கு அருகே உங்கள் பெயர்!

சுட்டெரிக்கும் சூரியனைக் கண்டு நாம் விலகி நின்றாலும், நமது பெயர் சூரியனுக்கு அருகே பத்திரமாக செல்ல இருக்கிறது என்றால் நம்புவீர்களா? ஆம், உங்கள் பெயரை சூரியன் அருகே கொண்டு செல்ல நாசா வாய்ப்பளித்துள்ளது

சுட்டெரிக்கும் சூரியனைக் கண்டு நாம் விலகி நின்றாலும், நமது பெயர் சூரியனுக்கு அருகே பத்திரமாக செல்ல இருக்கிறது என்றால் நம்புவீர்களா? ஆம், உங்கள் பெயரை சூரியன் அருகே கொண்டு செல்ல நாசா வாய்ப்பளித்துள்ளது.

விண்வெளியை ஆய்வு செய்து வரும் நாசா முதல் முறையாக வெப்பத்தைக் கக்கும் சூரியன் அருகே சென்று ஆய்வு நடத்த உள்ளது. இதற்காக பார்க்கர் சோலார் செயற்கைக்கோளை விரைவில் அனுப்பவுள்ளது.

காரின் அளவில் உள்ள இந்த செயற்கைக்கோள், சூரியக் கதிர்களில் இருந்து வெப்பமும், சக்தியும் எப்படி பூமிக்கு சுட்டெரிக்கும் கதிர்களாக வருகின்றன என்பது குறித்த ஆய்வில் ஈடுபட உள்ளது. 

இதன் மூலம், கடந்த 60 ஆண்டுகளாக சூரியன் குறித்து மனிதர்களுக்கு தெரியாத பல அரிய தகவல்கள் கிடைக்கும் என்று நாசா நம்புகிறது. பார்க்கர் சோலார் செயற்கைக்கோள் 43,000 மைல் வேகத்தில் சூரியனைச் சுற்றி வரும். சூரியனின் கடும் வெப்பத்தைத் தாக்குபிடிக்க 4.5 அங்குல தடிமத்தில் கார்பன் தகடு மூலம் செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த செயற்கைக்கோளில் பெயர்கள் அடங்கிய சிப்பை வைத்து அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது. இதற்காக உலகம் முழுவதிலும் இருந்து பெயர்களை நாசா சேகரித்து வருகிறது. 

ஏப்ரல் 27-ஆம் தேதி கடைசி தேதியாக நாசா நிர்ணயித்துள்ளது. உங்கள் பெயரை அனுப்ப வேண்டும் என்றால் http://go.nasa.gov/HotTicket என்ற நாசாவின் இணையதள முகவரிக்கு சென்று பெயரைப் பதிவு செய்ய வேண்டும். அப்படி பதிவு செய்தவர்களுக்கு அவரவர் பெயர் பதிக்கப்பட்ட டிக்கெட்டையும் நாசா வழங்குகிறது. 

பிறகென்ன சூரியனுக்கு உங்கள் பெயரை இலவசமாக அனுப்பி வைக்க வேண்டியதுதானே?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com