பிரச்னைகள்... பிரச்னைகளல்ல!

நாம் தொடர்ந்து பல்வேறு சவால்கள், சிரமங்கள், தற்காலிக பின்னடைவுகளைச் சந்தித்து வருகிறோம். இந்த சவால்கள், சிரமங்கள், பின்னடைவுகள் எல்லாம் தவிர்க்கக் கூடியவையே. 
பிரச்னைகள்... பிரச்னைகளல்ல!

நாம் தொடர்ந்து பல்வேறு சவால்கள், சிரமங்கள், தற்காலிக பின்னடைவுகளைச் சந்தித்து வருகிறோம். இந்த சவால்கள், சிரமங்கள், பின்னடைவுகள் எல்லாம் தவிர்க்கக் கூடியவையே. 

எவ்வாறு மன அழுத்தத்தைக் கையாளலாம்? நேர்மறை சிந்தனையுடன் ஒவ்வொரு சவாலையும் எவ்வாறு சந்திக்கலாம்? என்பதை நாம் கற்றுக் கொள்ள வேண்டும். இதன் மூலம் நம்முடைய நடத்தையில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. நமது வாழ்க்கைச் சிரமங்களையும் , நமது மன அழுத்தத்தையும் எவ்வாறு நாம் கையாள்கிறோமோ அதன் மூலம் கூடுதலான தகுதிகளை நாம் பெற முடியும். 

நேர்மறைச் சிந்தனை: நம்பிக்கை நிறைந்த மனிதர் கடினமான சூழலில் மன அழுத்தத்தை எவ்வாறு கையாள்வது என்பதை அறிந்திருப்பவர். இதன் மூலம் தங்கள் அதிருப்தியை அவர்கள் கைவிடுவார்கள். பாதகமான நிலை உருவானாலும் அதை எதிர்கொண்டு செயல்படுவார்கள். நம்பிக்கை உடையோர், நேர்மறையான சிந்தனையுடன் வாழ்க்கையை முன்னேற்றுவார்கள். எதிர்மறையான சிந்தனைகளை உடனே தவிர்த்து விடுவார்கள். நமது சிந்தனைகளே நமது செயல்பாடுகளைத் தீர்மானிக்கும் 
காரணிகளாக உள்ளன. 

பிரச்னைகள் பிரச்னைகளல்ல: நாம் பிரச்னைகளை பிரச்னைகளாக நினைக்காமல், அன்றையச் சூழ்நிலை என்பதாக எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் நமக்கு எப்போது சிரமம் ஏற்பட்டாலும் உடனே அதை எதிர்கொண்டு சவாலாகக் கருதி செயல்பட வேண்டும். சவால் என்ற சொல் நேர்மறையானதாகும். இந்த வார்த்தை உங்களை வலிமை நிறைந்தவராகவும், சிறப்பானவராகவும் மாற்றும். 

வாய்ப்புகளைத் தேடுதல்: நேர்மறையான சிந்தனையை தொடரவும், மன அழுத்தத்தை கையாளவும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சிரமமான நிலையை கிடைத்துள்ள அல்லது எதிர்பாராமல் கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி சவாலைச் சந்திக்க வேண்டும்.

எதிர்மறைச் சிந்தனைகளைப் போக்க: வரக் கூடிய பாதிப்புகளை முன்னரே எதிர்பார்த்து, அதைத் தீர்க்க முன்னதாகச் செயல்பட வேண்டும். எந்த எதிர்மறைச் சிந்தனை ஏற்பட்டாலும் அதை செயலிழக்கச் செய்ய, உணர்ச்சி வசப்படாமல் நமக்குள்ளேயே நமக்கு எந்தப் பிரச்னையும் இல்லை என்று பேசிக் கொள்ள வேண்டும். இதெல்லாம் ஒரு பிரச்னையா? என்று எளிதாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

இலக்குகளே முக்கியம்: நமது குறிக்கோள்கள், கனவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அனைத்து பாதிப்புகளும் தற்காலிகமானவை என நினைக்க வேண்டும். நேர்மறையான சிந்தனையை எந்தச் சூழ்நிலையிலும் கைவிடவே கூடாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com