மூளை சார்ந்த படிப்பு... சர்வதேச அளவில் வேலை வாய்ப்புகள்!

உலகின் மிகச் சிக்கலான செயல்பாடுகளை உடையது மனித மூளை. அதன் செயல்பாடுகள் நவீன விஞ்ஞானிகளுக்குக் கூட சவாலாகவே இருந்து வருகின்றன.
மூளை சார்ந்த படிப்பு... சர்வதேச அளவில் வேலை வாய்ப்புகள்!

உலகின் மிகச் சிக்கலான செயல்பாடுகளை உடையது மனித மூளை. அதன் செயல்பாடுகள் நவீன விஞ்ஞானிகளுக்குக் கூட சவாலாகவே இருந்து வருகின்றன. 1000 டிரில்லியன் (10 கோடி கோடி) உட்தொடர்பு இணைப்புகளைக் கொண்ட இந்த நரம்பியல் அமைப்பு எவ்வாறு வேலை செய்கிறது? இருதயத் துடிப்புக்கு எவ்வாறு காரணமாக உள்ளது? கனவுகளை எவ்வாறு உருவாக்குகிறது? இடத்துக்கு இடம் அது எவ்வாறு வேறுபடுகிறது? என்பன போன்ற கேள்விகளுக்கு இதுவரை விடையில்லை.

இதுகுறித்த ஆய்வை ஐரோப்பிய விஞ்ஞானிகள் கடந்த 2013-இல் தொடங்கினர். அதே ஆண்டு அமெரிக்காவும், அடுத்த 2 ஆண்டுகளுக்குப் பிறகு ஜப்பானும், 2016-ல் சீனாவும் தொடங்கியுள்ளன. இந்தியாவும் மூளையின் ரகசியங்களை கண்டறிவதற்கான (decode the human brain) செயல்திட்டங்களில் ஈடுபட்டுள்ளது.

இந்தத் திட்டங்கள் அனைத்தும் மூளை குறித்த மனித அறிவை விரிவுபடுத்தவும், அதன் இயக்கத்தை படமாக்கவும் (மேப்), அந்த உறுப்பு குறித்த மிகப் பெரிய புரிதலை ஏற்படுத்தவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி, இந்தியாவில் ஹரியாணாவில் உள்ள தேசிய மூளை ஆய்வு மையத்தில் (National Brain Research Centre- NBRC)  விஞ்ஞானிகள் குழு பல்வேறு மூளை படங்களை (Images) கொண்டு Indian Brain Template (IBT) என்ற ஒருவகையான அசாதாரண தரவுத்தளத்தை உருவாக்கி வருகிறது.

அண்மைக்காலமாக மூளை வார்ப்புரு படங்கள் (Brain Template) நரம்பியல் விஞ்ஞானிகளின் ஆராய்ச்சிகளில் முக்கியத்துவம் பெறுவது அதிகரித்துள்ளது. இந்த வார்ப்புரு படங்கள் மூலம் வேறுபட்ட இன மக்களின் மூளை அளவு, அடர்த்தி, தொகுதி, மூளையில் நியூரான் அமைவிடம் உள்ளிட்ட குறிப்பிடத் தகுந்த பன்முகத்தன்மையை விஞ்ஞானிகள் கோடிட்டுக் காட்டியுள்ளனர். இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் நிதி உதவியில் மானேசரில் உள்ள NBRC இந்திய மூளை வார்ப்புரு திட்டத்தில் ஈடுபட்டுள்ளது.

IBT ஆதரவின் கீழ், விஞ்ஞானிகள் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் இருந்து குறைந்தபட்சம் தலா ஒருவர் என்ற அடிப்படையில் ஆரோக்கியமான 150 இந்தியர்களின் காந்த அதிர்வு வரைபட (எம்ஆர்ஐ) ஸ்கேன் தரவுதளத்தை கட்டமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஒன்றாக தொகுக்கப்பட்ட இந்த தரவுத்தளம் உரிய பகுப்பாய்வுக்குப் பிறகு விஞ்ஞானிகள், மூளை உடற்கூறியல் பயிலும் அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு உதவுமாறு வைக்கப்படும்.

பழுதான செல்களைச் சரி செய்ய உதவும் மூளையில் உள்ள குளுடாதியோன் (glutathione) என்ற மூலக்கூறு வயதுக்கு ஏற்றவாறு எவ்வாறு வேறுபடுகிறது என்பது குறித்து ஆராய்வதிலும் விஞ்ஞானிகள் கவனம் செலுத்தி வருகின்றனர். காரணம், இந்த மூலக்கூறு பழுதான செல்களை சரி செய்ய உதவுவது ஆகும். மூளையின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள இந்த மூலக்கூறில் கவனம் செலுத்தி ஆராய்வதன் மூலம் முக்கியமான மூளை செயல்பாடுகள் மற்றும் ஞாபகமறதி நோயைக் (Alzheimer's Disease) கணிக்க இயலும்.

அண்மைக்காலமாக, ஞாபகமறதி நோய், மத்திய நரம்பு மண்டல கோளாறால் ஏற்படும் உடல் இயக்கப் பாதிப்பு மற்றும் நடுக்கம், பக்கவாதம், வலிப்பு போன்ற நரம்பியல் நோய்களால் பல ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு துன்பப்படும் நிலையில் இத்திட்டத்தின் அடிப்படை விஞ்ஞான கண்டுபிடிப்புகள் பெருமளவில் துணைபுரியும் என நம்பப்படுகிறது. 

இதையொட்டியே, ஹரியாணா மாநிலம், குர்கான் மாவட்டம், மானேசரில் உள்ள தேசிய மூளை ஆய்வு மையம், மூளை ஆய்வில் ஆர்வமுள்ள இளைஞர்களை Ph.D. மற்றும் ங.நஸ்ரீ. (சங்ன்ழ்ர்ள்ஸ்ரீண்ங்ய்ஸ்ரீங்) கோர்ஸ்களில் சேர அழைப்பு விடுத்துள்ளது.

நரம்பியல் என்பது பல துறைகளை உள்ளடக்கியது என்பதால், இதில் பல்வேறு பாடங்களைப் பயின்றவர்களும் ஆய்வுப் பணிகளில் சிறப்பாக ஈடுபடலாம். Life Science, Physics, Chemistry, Maths, Statistics, Computer Application, Pharmacy, Veterinary Science, Psychology பாடங்களில் முதுநிலை பட்டம் பெற்றவர்கள், பொறியியல், தொழில்நுட்பம், மருத்துவம் பயின்றவர்கள் Ph.D. (Neuroscience)  கோர்ஸிலும், இளைநிலை பட்டம் பெற்றவர்கள் M.Sc. (Neuroscience)    கோர்ஸிலும் சேரலாம். M.Sc. கோர்ஸில் சேர Join Graduate Entrance Examination for Biology and Interdisciplinary Life Science (JGEEBILS) என்ற நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும். Ph.D-இல் சேர அங்கீகரிக்கப்பட்ட தேசிய நுழைவுத் தேர்வுகளில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

ஒருங்கிணைந்த M.Sc.+ Ph.D.  திட்டத்தில் பயிலும் வாய்ப்பும் உள்ளது. Ph.D.-இல் சேர்க்கை பெறுவோர் முதல் 2 ஆண்டுகளுக்கு Junior Research Fellowship  ஆக மாதம் ரூ. 25 ஆயிரம் மற்றும் HRA பெறலாம். அதன்பிறகு, Senior Research Fellowship  ஆக மாதம் ரூ. 28 ஆயிரம் பெறலாம். அதேபோல, M.Sc.-இல் சேர்க்கை பெறுவோர் மாதம் ரூ. 12 ஆயிரம் மற்றும் HRA பெறலாம்.

இவையல்லாமல், 8 வாரங்களைக் கொண்ட Summer Training Programme-I Indian Academy of Science-Bangalore, Indian National Science Academy- New Delhi, National Academy of Science-Allahabad ஆகிய இடங்களில் என்பிஆர்சி நடத்துகிறது. NBRC அல்லாமல் Indian Institute of Science (IISc)-Bangalore, Madras University, Indian Academy of Neuroscience (IAN) - Lucknow, School of Studies in Neuroscience-Jiwaji University - Gwalior, National Institute of Mentel Health and Neuroscience -Bangalore ஆகியவை நரம்பியல் பயில குறிப்பிடத்தகுந்த கல்வி நிறுவனங்கள் ஆகும். 

நரம்பியல் முடித்தவர்களுக்கு மருத்துவம் மற்றும் மருத்துவம் அல்லாத பல்வேறு பிரிவுகளில் சர்வதேச அளவில் நிறைய வேலைவாய்ப்புகள் உள்ளன. வளர்ந்த நாடுகளில் நரம்பியல் நிபுணர்களுக்கு மாதம் ரூ. 13 லட்சம் வரை குறைந்தபட்ச ஊதியம் வழங்கப்படுகிறது. நம் நாட்டில் ரு. 5 லட்சம் வரை வழங்கப்படுவதாகக்கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com