விண்வெளியில் ஓர் உணவகம்!

எந்த ஹோட்டலில் சாப்பிட்டு வந்தீர்கள்?'' என்று கேட்டால், ""விண்வெளியில் உள்ள ஹோட்டலில்'' என பதில் சொல்லும் நாள் வெகு தொலைவில் இல்லை என்றே கூறலாம்.
விண்வெளியில் ஓர் உணவகம்!

எந்த ஹோட்டலில் சாப்பிட்டு வந்தீர்கள்?'' என்று கேட்டால், ""விண்வெளியில் உள்ள ஹோட்டலில்'' என பதில் சொல்லும் நாள் வெகு தொலைவில் இல்லை என்றே கூறலாம். ஆம். விண்வெளியில் 2022-ஆம் ஆண்டு சொகுசு ஹோட்டலை திறக்கிறது அமெரிக்காவின் ஓரியன் ஸ்பான் என்ற தனியார் நிறுவனம். 
இதற்கு "அயூரா விண்வெளி ஹோட்டல்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. பூமியில் இருந்து 200 மைல் தூரத்தில் அமைக்கப்பட உள்ள இந்த சொகுசு ஹோட்டல் கொண்ட ராக்கெட் 2012-ஆம் ஆண்டு விண்வெளிக்கு அனுப்பப்பட உள்ளது. இது குறித்து ஓரியன் ஸ்பான் நிறுவனம் தெரிவித்திருப்பதாவது: 
""இரண்டு பேர் தங்கும் சொகுசு அறை கொண்ட இந்த ஹோட்டலுக்குச் செல்ல மொத்தம் 12 நாள் பயணம் மேற்கொள்ள வேண்டும். இதற்கு முன்னதாக 3 மாதங்கள் பயிற்சியும் எடுத்துக் கொள்ள வேண்டும். முதல்கட்டமாக ஒரு குழுவில் 6 பேர் அனுப்பப்படுவார்கள். விண்வெளி வீரர்கள் இரண்டு பேரும் குழுவில் இருப்பார்கள். 
இந்த பயணத்துக்கான முன்பதிவை ஓரியன் ஸ்பான் நிறுவனம் இணையதளத்தில் தொடங்கியுள்ளது. பயணக் கட்டணமாக ரூ. 55 கோடியும், முன்பதிவுக் கட்டணமாக ரூ. 5 கோடியும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விண்வெளியில் இருந்தபடியே, இதுவரை கண்டிராத பூமியின் அழகைக் கண்டு ரசிக்கவும், இந்த விண்வெளி அனுபவத்தைக் கொண்டு ஆய்வில் ஈடுபடவும் இந்தப் பயணம் வழிவகுக்கும்.
புவிவட்டத்தில் 90 நிமிடங்களில் ஒரு சுற்றுப் பாதையை முடிக்கும் இந்த ஹோட்டலில் இருந்து ஏராளமான சூரிய உதயங்களையும், அஸ்தமனங்களையும் காணலாம். இந்த ஹோட்டலின் பரப்பளவு 43.5 அடி நீளமும், 14.1 அடி அகலமும் கொண்டதாகும். வருங்காலங்களில் இந்த ஹோட்டலின் விரிவாக்கப் பணிகளும் மேற்கொள்ளப்படும். விண்வெளியின் சுற்றுப்புறத்தைக் காண, வழக்கத்துக்கு மாறாக ஏராளமான ஜன்னல்கள் இந்த விண்கலத்தில் அமைக்கப்படுகின்றன. 
கடைசி நேரத்தில் பயணத்தை மேற்கொள்ள விரும்பவில்லை என்றாலும் முன்பதிவாளர்கள் செலுத்திய கட்டணம் திருப்பித் தரப்படும். இந்தப் பயணத்தை பிறருக்கு பரிசாகவும் அளிக்கலாம் என்று ஸ்பான் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com