வேலை... வேலை...  வேலை...

பிளஸ் டூ முடித்திருக்க வேண்டும். ஆங்கில தட்டச்சு நிமிடத்துக்கு 30 வார்த்தைகள் / ஹிந்தி தட்டச்சு நிமிடத்துக்கு 25 வார்த்தைகள் தேர்ச்சியடைந்திருக்க வேண்டும்.
வேலை... வேலை...  வேலை...

வன ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை

பதவி: லோயர் டிவிஷன் கிளார்க்

காலியிடங்கள்: 19

கல்வித் தகுதி: பிளஸ் டூ முடித்திருக்க வேண்டும். ஆங்கில தட்டச்சு நிமிடத்துக்கு 30 வார்த்தைகள்/ ஹிந்தி தட்டச்சு நிமிடத்துக்கு 25 வார்த்தைகள் தேர்ச்சியடைந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18 வயதிலிருந்து 27 வயதுக்குள் இருக்க வேண்டும்.

பதவி: டெக்னிஷியன் (எலெக்ட்ரீஷியன், பிளம்பர், கார்பென்டர், வெல்டர், ஃபீல்ட் / லேப் ரிசர்ச், மெக்கானிக்கல், சிவில்)

காலியிடங்கள்: 58

கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு/ பிளஸ் டூ தேர்ச்சியடைந்த பிறகு, சம்பந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ தேர்ச்சியடைந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18 வயதிலிருந்து 30 வயதுக்குள் இருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: https://recruitment.fri.res.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.300 (ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்).

தேர்ந்தெடுக்கப்படும் முறை: எழுத்துத் தேர்வு, திறனறி தேர்வு மூலமாக விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

மேலும் விவரங்களுக்கு: https://recruitment.fri.res.in/FRi-advt-employment-news.pdf  என்ற இணையதளத்தைப் பாருங்கள்.

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 21-04-2018.


பாரத ஸ்டேட் வங்கியில் வேலை

பதவி: ஸ்பெஷல் மேனேஜ்மெண்ட் எக்ஸிக்யூடிவ்

காலியிடங்கள்: 35

கல்வித் தகுதி: சிஏ/ ஐசிடபிள்யுஏ/ ஏசிஎஸ்/ எம்பிஏ (நிதி)/ இரண்டாண்டுகள் முதுநிலை டிப்ளமோ (நிதி) முடித்திருக்க வேண்டும். 5 ஆண்டுகள் முன் அனுபவம் வேண்டும்.

வயது வரம்பு: 30 வயதிலிருந்து 40 வயதுக்குள் இருக்க வேண்டும். 

பதவி: துணை பொது மேலாளர் (சட்டம்)

காலியிடங்கள்: 2

கல்வித் தகுதி: சட்டத்தில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். பார் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும். 17 ஆண்டுகள் சட்ட அலுவலராகப் பணியாற்றிய முன் அனுபவம் வேண்டும்.

வயது வரம்பு: 42 வயதிலிருந்து 52 வயதுக்குள் இருக்க வேண்டும்.

பதவி: துணை மேலாளர் (சட்டம்)

காலியிடங்கள்: 82

கல்வித் தகுதி: சட்டத்தில் பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும். பார் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும். 17 ஆண்டுகள் சட்ட அலுவலராகப் பணியாற்றிய முன் அனுபவம் வேண்டும்.

வயது வரம்பு: 25 வயதிலிருந்து 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: https://bank.sbi/careers அல்லது https://www.sbi.co.in/careers ஆகிய இணையதளங்களின் மூலம் விண்ணப்பதாரரின் சுயவிவரங்களைப் பதிவு செய்து, தேவையான சான்றிதழ், புகைப்படம் ஆகியவற்றைப் பதிவேற்றி, ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். பிறகு, ஆன்லைன் விண்ணப்பத்தைப் பிரதியெடுத்துக் கொள்ள வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.600 (ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்).

மேலும் விவரங்களுக்கு:

https://www.sbi.co.in/webfiles/uploads/files/1521469978176_CRPD_RECTRUITMENT_SCO_ENGLISH.pdf என்ற இணையதளத்தைப் பாருங்கள்.

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 21-04-2018.

தென்னக ரயில்வேயில் வேலை

பதவி: ஜூனியர் கிளார்க் கம் டைப்பிஸ்ட்

காலியிடங்கள்: 74

கல்வித் தகுதி: பிளஸ் டூ அல்லது அதற்கு இணையான படிப்பில் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சியடைந்திருக்க வேண்டும். ஆங்கில தட்டச்சு நிமிடத்துக்கு 30 வார்த்தைகள்/ ஹிந்தி தட்டச்சு நிமிடத்துக்கு 25 வார்த்தைகள் தேர்ச்சியடைந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 42 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்ஸி, எஸ்டி, ஓபிசி பிரிவினருக்கு உச்சபட்ச வயது வரம்பில் தளர்வு உண்டு.

விண்ணப்பிக்கும் முறை: www.rrcmas.in  என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

முகவரி: The Chairman, Railway Recruitment Cell, No.5, Dr. P.V. Cherian Cresent Road, Behind Ethiraj College, Egmore, Chennai 600 008.

தேர்ந்தெடுக்கப்படும் முறை: ஆன்லைன் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலமாக விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

மேலும் விவரங்களுக்கு: http://www.rrcmas.in/downloads/gdce-jr-clerk-notification2018.pdf  என்ற இணையதளத்தைப் பாருங்கள்.

விண்ணப்பம் சென்று சேர வேண்டிய கடைசித் தேதி: 23-04-2018.


மத்திய ஆயுர்வேத அறிவியல் ஆய்வு கவுன்சிலில் வேலை


பதவி: மருந்தாளுநர்

காலியிடம்: 1 

கல்வித் தேர்ச்சி: D.Pharm முடித்த பிறகு அங்கீகரிக்கப்பட்ட ஆயுர்வேத மருத்துவமனை ஒன்றில் இரண்டாண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும் அல்லது B.Pharm முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 27 வயதுக்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: http://www.ccras.nic.in/  என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, கீழ்க்காணும் முகவரியில் 24-04-2018 அன்று நடைபெறும் எழுத்துத் தேர்விலும், தொடர்ந்து நடைபெறும் நேர்முகத் தேர்விலும் பங்கேற்க வேண்டும். அப்போது, தேவையான நிஜ சான்றிதழ்கள், சுயசான்றொப்பமிட்ட நகல் சான்றிதழ்கள், புகைப்படங்கள் ஆகியவற்றைக் கொண்டு வர வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் முகவரி: 

Dr. A. LAKSHMIPATHI RESEARCH CENTRE FOR AYURVEDA  CENTRAL COUNCIL FOR RESEARCH IN AYURVEDIC SCIENCES, MINISTRY OF AYUSH, GOVT. OF INDIA VHS CAMPUS, 2nd FLOOR, TTTI - PO, TARAMANI, CHENNAI - 600 113 

மேலும் விவரங்களுக்கு:

www.ccras.nic.in/sites/default/files/viewpdf/Vacancies/06042018_ALRCA_Chennai_Advt_Pharmacist.pdf என்ற இணையதளத்தைப் பாருங்கள்.

எழுத்துத் தேர்வு/ நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்: 24-04-2018.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com