திறன் வளர்க்கும் கோடை வகுப்புகள்!

பள்ளி மாணவர்கள் கோடை விடுமுறையில் நண்பர்கள், உறவினர்களுடன் சுற்றுலா சென்று, மகிழ்ச்சியாகப் பொழுதுபோக்கவே விரும்புவார்கள்.
திறன் வளர்க்கும் கோடை வகுப்புகள்!

பள்ளி மாணவர்கள் கோடை விடுமுறையில் நண்பர்கள், உறவினர்களுடன் சுற்றுலா சென்று, மகிழ்ச்சியாகப் பொழுதுபோக்கவே விரும்புவார்கள். ஆனால் உயர்கல்வியில் நல்ல கல்வி நிறுவனங்களில் இடம்பிடிப்பதும், பலத்த போட்டிகளுக்கிடையே வேலை தேடுவதும் எதிர்கால சவால்களாக உள்ளன. எனவே கோடை விடுமுறையை மகிழ்ச்சியான, அதே சமயம் திறன் வளர்க்கும் காலமாக மாற்றிக்கொள்வதற்காக, இந்தியாவில் சில முன்னணி கல்வி நிறுவனங்கள் சர்வதேச தரத்தில் கோடை வகுப்புகளை நடத்துகின்றன. 
அந்தவகையில், முதலிடத்தில் இருப்பதாகக் கூறப்படுவது புணேவில் உள்ள Symbiosis Summer School. இது பல்நோக்கு திட்டங்கள் கொண்ட முழுநேர உண்டு உறைவிடப் பள்ளியாகும். இங்கு தேசிய, சர்வதேச பயிற்றுநர்களைக் கொண்டு Filmmaking and Photography, Creative Writing, Liberal Arts, Performing Arts, Climate Change ஆகியவற்றில் குறுகியகால சான்றிதழ் பயிற்சி அளிக்கப்படுகிறது. கட்டணம் தங்குமிடம், உணவு அனைத்தையும் சேர்த்து ரூ. 1.20 லட்சம்.

அடுத்த இடத்தில் இருப்பது Amity University Summer School Programme. நொய்டாவில் உள்ள இந்தப் பள்ளியில் 2 வாரங்கள் கோடைக்கால பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், மேலாண்மை, தகவல் தொடர்பு, படைப்புத் திட்டங்கள், சட்டம், விடுதி மேலாண்மை, போக்குவரத்து மற்றும் சுற்றுலா, உளவியல், அயல் மொழிகள் குறித்த வகுப்புகள் இருக்கும். வேலைவாய்ப்புக்கான பாடங்கள் குறித்து முடிவெடுப்பதற்கான ஆளுமை பண்புக்கூறுகளை இந்த பயிற்சி வழங்கும். கட்டணம் விடுதிக்கும் சேர்த்து ரூ. 14 ஆயிரம்.

Young Leaders for Active Citizenship (YLAC)  என்ற அமைப்பு மாணவர்கள் சமூக சவால்களைப் புரிந்துகொள்வதற்கான தனிப்பட்ட சிறந்த பயிற்சியை வழங்குகிறது. இது ஹார்வர்டு மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்களால் நடத்தப்படுகிறது. பண்பாட்டு விழிப்புணர்வு, தலைமைத்துவத் திறன் போன்றவற்றில் மாணவர்களுக்கு விசாலமான பார்வை ஏற்படுத்தப்படுகிறது. தில்லி, மும்பை வளாகங்களில் பயிற்சி அளிக்கப்படுகிறது. கட்டணம் பயிற்சிக்கு ஏற்ப ரூ. 20- 28 ஆயிரம் மற்றும் சேவை வரி.

மற்றொரு சிறப்புமிக்க கோடை வகுப்பை Oxford Summer courses வழங்குகிறது. இதன் 10 நாள் பயிற்சியில் மாணவர்களின் தகுதி உயர்த்தப்பட்டு கல்லூரி சேர்க்கையில் வெற்றி வாய்ப்பு உருவாக்கப்படுகிறது. இதன் மும்பை, தில்லி, பெங்களூர் வளாகங்களில் பயிற்சி அளிக்கப்படுகிறது. கட்டணம் ரூ. 99 ஆயிரம்.
ஹரியாணாவில் உள்ள Ashoka University-யிலும் Young Scholars Program நடத்தப்படுகிறது. Liberal Arts பயில விரும்பும் மாணவர்களுக்கு கோடைகால பயிற்சி வழங்கும் முன்னணி நிறுவனமாக இது உள்ளது. 7 நாட்கள் கொண்ட உண்டு, உறைவிடப் பயிற்சியில் அனுபவங்களில் இருந்து மாணவர்கள் கற்றுக்கொள்ள வழிசெய்யப்படுகிறது. கட்டணம் ரூ. 35 ஆயிரம்.

புணேவில் உள்ள Flame University -இல் 2 வாரங்கள் கொண்ட Summer Immersion Program நடத்தப்படுகிறது. விமர்சனச் சிந்தனை, ஆராய்ச்சி, எண்ணம், தகவல் தொடர்பு திறன், தலைமைப் பண்பு, குழு பணித் திறன் போன்றவை இவற்றில் அடங்கும். கட்டணம் ரூ. 40 ஆயிரம்.

Doon School's Summer Porgramme on Leadership என்பது 9-12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தலைமைத்துவ திறனை மேம்படுத்தும் மிகச் சிறந்த பயிற்சியாகக் கருதப்படுகிறது. இதில் படைப்பு அனுபவ கற்றல், அறிவார்ந்த சவால், பிரச்னைகளைத் தீர்த்தல், வடிவமைப்புச் சிந்தனை, சமூக சேவை, சுய தேடல் போன்ற பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. பயிற்சி வளாகம்-டேராடூன். கட்டணம் ரூ. 1.40 லட்சம்.

ஹரியாணாவில் உள்ள Jindal Global Summer School}Cu Aspire India Scholars Programme திட்டத்தில் 9-12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2 வாரங்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது. கட்டணம் ரூ. 30 ஆயிரம். 

London King's College இந்தியாவில் உள்ள Lady Shri Ram College உடன் இணைந்து இந்தியாவில் தில்லி, மும்பை ஆகிய இடங்களில் கோடை வகுப்புகளை நடத்துகிறது. இதில் சர்வதேச உறவுகள், சந்தை மேலாண்மை, சர்வதேச சந்தை குறித்து கற்றுத்தரப்படுகிறது. இதற்கான கட்டணம் ரூ. 47 ஆயிரம். 

ARCC Summer Program} The Himalayan Project  என்பது 21 நாட்கள் கொண்ட சாகசம் நிறைந்த கோடைகால பயிற்சியாகும். இதில் 9-ஆம் வகுப்பு முதல் மாணவர்கள் பங்கேற்கலாம். இது சர்வதேச மாணவர்களும் பங்கேற்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட திட்டம் என்பதால், கூடுதல் செலவுமிக்கது. வடஇந்தியப் பகுதிகளின் பல இடங்களுக்கும் அழைத்துச் செல்லப்பட்டு பயிற்சி அளிக்கப்படும். 

கட்டணம் ரூ. 3.25 லட்சம். 

இவையல்லாமல், தில்லியில் நடைபெறும் Summer Theatre Workshop} National School of Drama-இல் 9 முதல் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. கட்டணம் ரூ. 12 ஆயிரம். குர்கான் மற்றும் பெங்களூரில் Workshop on Leadership Development for senior School Students by Stoodnt என்ற பயிற்சி திட்டமும் உள்ளது. இதற்கான கட்டணம் ரூ. 1500.

இவை அனைத்தும் தேசிய அளவில் உள்ள மிகச் சிறந்த கோடைகால பயிற்சித் திட்டங்களாகக் கருதப்படுகிறது. இவற்றில் பெரும்பாலும் சர்வதேச அளவில் மாணவர்கள் பங்கேற்று வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com