இணைய வெளியினிலே...

அந்த அழகிய ஏரியில் உல்லாசப் படகில் பலரும் பயணித்துக் கொண்டிருந்தார்கள். அதில் நீச்சல் அறிந்தவர்களும் இருந்தார்கள்.
இணைய வெளியினிலே...

முக நூலிலிருந்து....
• எனக்கான இசையை
யாரோ இசைக்கிறார்கள்...
எனக்கான எழுத்தை
யாரோ எழுதுகிறார்கள்...
எனக்கான சினிமாவை
யாரோ எடுக்கிறார்கள்...
எனக்கான வாழ்வையும்
யாரோ வாழ்கிறார்கள்.
- ரெவித்தம்பி பொன்னன்

• இரக்கமும் உறக்கமும் ஒன்றுதான்.
இரண்டையுமே அளவோடுதான் பயன்படுத்த வேண்டும்.
அதிகம் உறங்குபவன் சோம்பேறி ஆகிறான்...
அதிகம் இரக்கம் காட்டுகிறவன்...
ஏமாளி ஆகிறான். 
- திருப்பதி ராஜா

• அசைக்க முடியாத நம்பிக்கை வைத்தவர்களையும்...
அசைத்துப் பார்க்கிறது
"துரோகம்' 
என்னும் ஒற்றை ஆயுதம்..!
- செüந்தரபாண்டியன் 

• வார்த்தைகளின் மதிப்பு
தெரிந்தவர்களோடு "வாதம்' செய்...
வார்த்தைகளினால் வதம் செய்பவரோடு
"மெüனம்' செய்.
- வாசுதேவன்

• காட்டும் அன்புக்கு அளவு தேவையில்லை... 
அளவை எதிர்பார்க்கையில் தான் பலர் தடுமாறி விடுகிறார்கள்.
- சரவணன் கீழப்பாவூர்

சுட்டுரையிலிருந்து...
• குழந்தைகளுடன் 
விளையாடும்போது,
ஜெயித்துவிடுங்கள்...
வெற்றி எளிதல்ல என 
புரியட்டும் !
- மெத்த வீட்டான்

• பேருந்தில்
கை தவறிய நாணயத்தைக்
கண்டுபிடித்து 
எடுப்பதென்பது...
தென் கடலில் மூழ்கி
முத்து எடுப்பதற்குச் சமம்.

• உலகில் எதுவுமே தவறில்லை என்று
நினைப்பது தவறில்லை.
ஆனால், தவறைச் செய்துவிட்டு...
"இது தவறில்லை' என்று
நம்மை நாமே சமாதானப்படுத்திக் 
கொள்வது தான் தவறு.
- ஸ்ரீ

• பெட்ரோல் 
தீர்ந்தபோதுதான்,
பாதையின் நீளம்...
தெரிகிறது.
- சப்பாணி

வலைதளத்திலிருந்து...
அந்த அழகிய ஏரியில் உல்லாசப் படகில் பலரும் பயணித்துக் கொண்டிருந்தார்கள். அதில் நீச்சல் அறிந்தவர்களும் இருந்தார்கள். நீச்சல் அறியாதவர்களும் இருந்தார்கள். நீச்சல் அறிந்தவர்களின் கண்களும் மனமும் ஏரியின் அழகிலும் அதன் குளுமையிலும் மயங்கிக் களிக்க... அது அறியாதவர்களின் மனமும் நினைவும் ஏரியின் ஆழத்தையும் இதற்கு முன் நடந்த விபத்தையும் எண்ணியே கலங்கிக் கொண்டிருந்தது.
படகில் பயணம் செய்ய, நீச்சல் பயின்றிருக்க அவசியம் இல்லைதான். 
ஆயினும் இரசித்துப் பயணிக்க, நீச்சல் அறிதல் நிச்சயம் அவசியம். 
ஆம்... எதையும் வருந்திச் செய்யாது விரும்பிச் செய்யவும், விரும்பிச் செய்வதைத் திருந்தச் செய்யவும், பயிற்சி என்பது நிச்சயம் அவசியம்.
http://yaathoramani.blogspot.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com