உருவாக்கு... புதிய பாதையை! 

மற்றவர்கள் உருவாக்கிய பாதையில் நடந்து செல்பவன் மனிதன். மற்றவர்களுக்காக பாதையை உருவாக்கு பவனே மாமனிதன் என்று சொல்வார்கள். அந்த வகையில் தன் எண்ணத்துக்கு
உருவாக்கு... புதிய பாதையை! 

மற்றவர்கள் உருவாக்கிய பாதையில் நடந்து செல்பவன் மனிதன். மற்றவர்களுக்காக பாதையை உருவாக்கு பவனே மாமனிதன் என்று சொல்வார்கள். அந்த வகையில் தன் எண்ணத்துக்கு தகுந்த பாதையை உருவாக்குபவனே வரலாற்றில் தடம் பதித்து செல்ல முடியும். 
சிலர் எங்கு சென்றாலும் நடந்தே சென்று வருவார்கள். பல பேர் அவரிடம், "எதற்காக இப்படி நடந்தே செல்கிறீர்கள்?'' என கேட்டால், "உடற்பயிற்சிக்காகத்தான்'' என்பார்கள். 
"சரி அவசரத்துக்கு எப்படிச் செல்வீர்கள்?'' என்று கேட்டால், வாடகை காரில் செல்வதாகச் சொல்வார்கள். உண்மையை என்னவென்றால், அவர்களுக்குச் சைக்கிள் ஓட்டத் தெரியாது என்பதுதான். 
முதன்முதலாக சைக்கிள் ஓட்டி பழகும் போது சைக்கிள் தாறுமாறாகப் போகும், நல்ல சாலையில் கூட விழும் சம்பவங்களும் நடக்கும். ஆனால், இதற்கெல்லாம் பயப்படாமல், சைக்கிள் கற்க முயன்றவன்தான் எதிர்காலத்தில் பைக்கை ஓட்டிக் கொண்டு நினைத்த இடத்துக்கு நினைத்த நேரத்துக்கு செல்ல முடியும்.
"ஐயோ, கீழே விழுந்து விடுவோமே' என் நினைத்து சைக்கிள் ஓட்டுவதற்கு சிறு வயதில் பயிற்சி எடுக்காதவர்கள் எதிர்காலத்தில் நிறைய காலத்தையும், பணத்தையும் வீணாக்க நேர்கிறது. 
ஆம். எந்தச் செயலையும் சிறப்பாகச் செய்ய அதற்குரிய பயிற்சி எடுக்க வேண்டும். அதுபோல எதையும் கற்றுக் கொள்வதற்குத் துணிவும் அவசியம்.
புதிதாக ஒரு தொழிலைத் தொடங்க வேண்டுமென்று ஓர் இளைஞர் விரும்பினார் என்றால் அதைத் தடுக்க பலர் பல விதமாகப் பேசுவார்கள். "அதே தொழிலைச் செய்த தனக்கு தெரிந்த ஒருவர் பெரிய நஷ்டத்தை சந்தித்து விட்டார்' என்பார்கள். "அந்தப் பொருளை சந்தைப்படுத்துவது என்பது மிகவும் கஷ்டம்' என்பார்கள். "என்னப்பா நீ, புதுசா ஏதோ செய்யணும்கிறே. நமக்கு சரியா வருமா?' என்பார்கள். 
இப்படியாக தொடங்கும் முன்பே நிறையத் தடைகளை விதிப்பவர்கள் நம்மை சுற்றி இருக்கும் போது புதிய பாதையில் பயணிப்பது சிரமம்தான். இருப்பினும் ஏற்கெனவே இருக்கும் தொழிலை விட புதிய தொழிலை வித்தியாசமாகச் செய்யும்போதுதான் மக்களின் கவனம் நம் மேல் விழும். ஒரு முறை நம்மை நம்பி வந்தவர்களுக்கு சரியான பொருளை அல்லது விஷயத்தை தந்து விட்டால் போதும், நாம் உருவாக்கிய புதிய பாதையில் தொடர்ந்து பயணிக்கலாம். 
புதிய தொழில் ஒன்றைத் தொடங்கி நடத்த விரும்புபவர்கள் முதலில் செய்ய வேண்டியவை நிறைய இருக்கின்றன. முதலில் என்ன தொழில் செய்ய நினைக்கிறோமோ, அந்தத் தொழில் பற்றிய அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு பொருளைத் தயாரித்து விற்பனை செய்ய நினைத்தால் அந்தப் பொருளைத் தயாரிக்க என்ன என்ன மூலப் பொருட்கள், அவை எங்கே கிடைக்கும்? அவற்றின் செய்யும் முறைகளில் சிறப்பானது எது? வாங்க வேண்டிய இயந்திரங்கள் எவை? என்பன போன்ற விவரங்களுடன் கூடவே, அந்தப் பொருள் எந்தப் பகுதியில் எந்தத் தரத்தில் வாழும் மக்களுக்கு அதிக தேவையாக உள்ளது? அதைச் சந்தைப்படுத்துவதில் உள்ள நடைமுறைப் பிரச்னைகள் எவை? தொழில் தொடங்கி நடத்த எவ்வளவு மூலதனம் தேவைப்படும்? அத் தொழில் சார்ந்த பணியாளர்கள் கிடைப்பது எளிதா? என நிறைய விவரங்களைத் தெரிந்து கொள்வது அவசியம்.
அதன் பிறகு அந்தத் தொழிலில் பயிற்சி பெற வேண்டும். ஏற்கெனவே பயிற்சி பெற்றவர்களின் துணையுடன் பயிற்சி பெறலாம். அல்லது அத்தொழில் செய்யும் பிற நிறுவனங்களில் பணியில் குறிப்பிட்ட சில காலம் சேர்ந்து பணியாற்றி பயிற்சி பெறலாம். 
பிறகு தேவையான மூலதனம், இட வசதி, பணியாளர்கள் எல்லாவற்றையும் திட்டமிட்டு, முறையாகத் தொழில் தொடங்கி நடத்த வேண்டும். புதிய பாதை என்பது எளிதானதல்ல. இன்னும் சொல்லப் போனால் பழைய பாதையின் தொடர்ச்சியாகவே பல புதிய பாதைகள் இருக்கின்றன.
- வி.குமாரமுருகன் 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com