வேலை...வேலை...வேலை...

பேங்க் ஆஃப் பரோடாவில் வேலை, பாபா அணுசக்தி ஆய்வு மையத்தில் வேலை, ரிசர்வ் வங்கியில் வேலை
வேலை...வேலை...வேலை...

பேங்க் ஆஃப் பரோடாவில் வேலை
பதவி: Block Chain Officers
காலியிடங்கள்: 2
கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு துறையில் பி.ஈ./ பி.டெக் முடித்திருக்க வேண்டும்
முன் அனுபவம்: 8 ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும். அதில் 3 ஆண்டுகள் சம்பந்தப்பட்ட துறையில் பணியாற்றியிருக்க வேண்டும்
பதவி: Business Analysts
காலியிடங்கள்: 2
கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் எம்.பி.ஏ. முடித்திருக்க வேண்டும்
முன் அனுபவம்: 8 ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும். அதில், 5 ஆண்டுகள் வங்கி/ நிதி நிறுவனத் துறையில் பணியாற்றியிருக்க வேண்டும்
பதவி: Innovation Officers
காலியிடங்கள்: 2
கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்
முன் அனுபவம்: 8 ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும். அதில் 3 ஆண்டுகள் சம்பந்தப்பட்ட துறையில் பணியாற்றியிருக்க வேண்டும். 
விண்ணப்பிக்கும் முறை: www.bankofbaroda.co.in/careers.htm என்ற வலை தளத்தில், விண்ணப்பதாரரின் விவரங்களைப் பூர்த்தி செய்து, சான்றிதழ்களைப் பதிவேற்றி, விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தி ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். பிறகு, ஆன்லைன் விண்ணப்பத்தின் அச்சுப் பிரதியை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்
விண்ணப்பக் கட்டணம்: பொது/ ஓபிசி பிரிவினக்கு ரூ.600; மற்றவர்களுக்கு ரூ.100
தேர்ந்தெடுக்கப்படும் முறை: மதிப்பெண், ஆன்லைன் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
மேலும் விவரங்களுக்கு: www.bankofbaroda.com/writereaddata/Images/pdf/Advertisement-2018-19-Fintech.pdf என்ற வலைதளத்தைப் பாருங்கள்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 17-08-2018

பாபா அணுசக்தி ஆய்வு மையத்தில் வேலை
பதவி: Scientific Assistant/C
காலியிடங்கள்: 86
கல்வித்தகுதி: Mechanical/Electrical/Metallurgy/Chemical/Civil/Computer Science/Electronics & Instrumentation போன்றவற்றில் ஏதேனும் ஒரு துறையில் டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும் (அல்லது) பிளஸ் டூ-வில் கணித பாடம் எடுத்து படித்து முடித்து, இயற்பியல்/ வேதியியல் பாடங்களில் பி.எஸ்சி பட்டப்படிப்பில் 60 சதவீத மதிப்பெண்களுக்குக் குறையாமல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 19 வயதிலிருந்து 24 வயதுக்குள் இருக்க வேண்டும். சில பிரிவினருக்கு உச்சபட்ச வயதுவரம்பில் விலக்கு உண்டு.
பதவி: Technician/B Plant Operator
காலியிடங்கள்: 39
கல்வித்தகுதி: பிளஸ் டூவில் இயற்பியல், வேதியியல், கணிதம் பாடப்பிரிவில் 
குறைந்தது 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு: 18 வயதிலிருந்து 22 வயதுக்குள் இருக்க வேண்டும். சில பிரிவினருக்கு உச்சபட்ச வயதுவரம்பில் விலக்கு உண்டு.
பதவி: Technician/B Laboratory
காலியிடங்கள்: 33
கல்வித்தகுதி: பிளஸ் டூவில் இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியல் பாடப்பிரிவில் குறைந்தது 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு: 18 வயதிலிருந்து 22 வயதுக்குள் இருக்க வேண்டும். சில பிரிவினருக்கு உச்சபட்ச வயதுவரம்பில் விலக்கு உண்டு.
பதவி:  Technician/C
காலியிடங்கள்: 51
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பில் கணிதம், அறிவியல் பாடங்களுடன் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பிறகு, A/C Mechanic/ Fitter/ Welder/ Machinist/ Electrical/ Electronics/ Instrumentation/ Mechanical துறைகளில் ஐ.டி.ஐ. முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 வயதிலிருந்து 22 வயதுக்குள் இருக்க வேண்டும். சில பிரிவினருக்கு உச்சபட்ச வயதுவரம்பில் விலக்கு உண்டு.
விண்ணப்பிக்கும் முறை: www.recruit.barc.gov.in என்ற வலைதளத்தில், விண்ணப்பதாரரின் விவரங்களைப் பூர்த்தி செய்து, சான்றிதழ்களைப் பதிவேற்றி, விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தி ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: முதன்மைத் தேர்வு, இரண்டாம் நிலை தேர்வு, திறனறி தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். 
மேலும் விவரங்களுக்கு: https://recruitmentindia.in/wp-content/uploads/2018/03/barc-1.pdf என்ற வலைதளத்தைப் பாருங்கள்
விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி: 20-8-2018.

ரிசர்வ் வங்கியில் வேலை
பதவி: Medical Consultant
காலியிடங்கள்: 10
பணியிடம்: மும்பை
கல்வித்தகுதி: எம்.பி.பி.எஸ். பட்டம் பெற்றிருக்க வேண்டும். பொது மருத்துவத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். 
முன்அனுபவம்: ஏதேனும் மருத்துவ மனையிலோ அல்லது தனியாகவோ குறைந்தது 2 ஆண்டுகள் மருத்துவத் தொழில் புரிந்திருக்க வேண்டும்
விண்ணப்பிக்கும் முறை: www.opportunities.rbi.org.in/ என்ற வலைதளத்திலிருந்து விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து, கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
முகவரி: The Regional Director, Human Resource Management Department, Recruitment Section, Reserve Bank of India, Mumbai Regional Office, Shahid Bhagat Singh Road, Fort, Mumbai – 400001.
மேலும் விவரங்களுக்கு: https://opportunities.rbi.org.in/Scripts/bs_viewcontent.aspx?Id=3527 என்ற வலைதளத்தைப் பாருங்கள்.
விண்ணப்பம் சென்று சேர வேண்டிய கடைசித் தேதி: 20-08-2018 மாலை 5 மணிக்குள்.

சென்னை கன்டோன்மெண்ட் போர்ட்டில் வேலை
பதவி: ஆயா (மகளிர்)
காலியிடங்கள்: 2 (1 இடம் எஸ்சி பிரிவினருக்கு)
கல்வித்தகுதி: எட்டாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். மருத்துவ நிறுவனங்களில் பணி செய்த அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
வயது வரம்பு: பொதுப் பிரிவினருக்கான இடத்திற்கு 25 வயதுக்குள்ளும், எஸ்சி. மகளிருக்கான இடத்திற்கு 30 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். 
தேர்ந்தெடுக்கப்படும் முறை: எழுத்துத் தேர்வு, திறனறி தேர்வின் மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்,
விண்ணப்பிக்கும் முறை: www.cbstm.org.in என்ற வலைதளத்திலிருந்து விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, தேவையான நகல் சான்றிதழ்களை இணைத்து, கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
முகவரி: The Chief Executive Officer, Cantonment Board, North Parade Road, St. Thomas Mount, Chennai - 600016.
மேலும் விவரங்களுக்கு: www.cbstm.org.in:9080/Cantonment/admin/pdf/careers/Employment%20Notice%20website%20upload-2018-07-11-16-42-54.pdf என்ற வலைதளத்தைப் பாருங்கள்.
விண்ணப்பம் சென்று சேர வேண்டிய கடைசித் தேதி: 18-8-2018 மாலை 5 மணி. தொலைதூரப் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு: 25-8-2018 மாலை 5 மணி.
தொகுப்பு: பிரவீண் குமார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com