இசையைக் கற்க...!

இசையைக் கற்க...!

இசை என்பது மனிதர்களின் வாழ்வில் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.

இசை என்பது மனிதர்களின் வாழ்வில் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. இசை ஒருவரை அமைதிப்படுத்துகிறது. அதனால் அவருடைய உடல் நலம் மேம்படுகிறது.    மூளை சுறுசுறுப்பாகின்றது.   இசை ஒவ்வொரு மனிதருடைய வாழ்க்கையிலும் அவர்களுடைய உடல் ஆரோக்கியத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது. 

இசையில் ஆர்வம் உள்ளவர்கள் இசையைக் கற்று அத்துறையில் வேலை வாய்ப்பு பெறலாம். அத்துறை சம்பந்தமான  தொழில்களை மேற்கொள்ளலாம். இசைக் கல்வியை வழங்கும்  அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் வழங்கி வருகின்றன.   அவற்றில் சில:

Tamil Nadu Music and Fine Arts University } http://tnmfau.ac.in/
Tamilnadu Government Music College } http://www.tn.gov.in/thiruvaiyaru_musiccollege/
KM Music Conservatory} http://kmmc.in
Madras Music Academy }  http://musicacademymadras.in
Delhi School of Music } http://www.delhischoolofmusic.net
Swarnabhoomi Academy of Music } http://sam.org.in
Calcutta School of Music } http://www.calmusic.org

பயிற்சி... அரசியல்வாதியாக!

இந்தியாவில் அரசியலில் ஈடுபடுவதற்கும், தேர்தலில் போட்டியிடுவதற்கும் எந்த கல்வித் தகுதியும் நிர்ணயிக்கப்படவில்லை.  அதனால் படித்தவர்கள், படிக்காதவர்கள் என யார் வேண்டுமானாலும் அரசியலில் ஈடுபடலாம். தேர்தலில் போட்டியிட்டு பதவிகளைப் பிடிக்கலாம் என்ற நிலையே  இப்போது உள்ளது.

தற்போது அரசியலில் ஈடுபடுவதற்கும் பயிற்சிகள்  தரக் கூடிய நிறுவனங்கள் வந்துவிட்டன.  அனுபவம் சார்ந்து பல ஆண்டுகளாக செய்யப்பட்டு வந்த விவசாயம்,  இப்போது அறிவியலாகி பல கல்வி நிறுவனங்களில் பல்வேறு படிப்புகள் கற்றுத் தரப்படுவதைப் போல  அனுபவ அடிப்படையில்  ஈடுபடக்கூடிய அரசியல்துறையும் இப்போது படிப்பாகிவிட்டது.

அரசியல் தலைவராவதற்கான தகுதியைப் பெறுவதற்கு பயிற்சி வழங்கும் சில பயிற்சி நிறுவனங்கள் :

The Institute of Political Leadership } http://www.iplindia.in
Indian Institute of Democratic Leadership } http://www.iidl.org.in/
National School of Leadership } http://www.nsl.ac.in
MIT SCHOOL OF GOVERNMENT } http://mitsog.org

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com