விண்வெளி அறிவியல் சம்பந்தமான படிப்புகள்!

விண்வெளி அறிவியல் சம்பந்தமான படிப்புகளைப் படித்து அத்துறையில் ஆராய்ச்சி மற்றும் வேலை வாய்ப்புகளைப் பெறலாம். 
விண்வெளி அறிவியல் சம்பந்தமான படிப்புகள்!

விண்வெளி அறிவியல் சம்பந்தமான படிப்புகளைப் படித்து அத்துறையில் ஆராய்ச்சி மற்றும் வேலை வாய்ப்புகளைப் பெறலாம். 
விண்வெளி அறிவியல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த படிப்பாக உள்ளது. ஒவ்வொரு நாட்டின் அரசாங்கமும் விண்வெளி ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்து பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. விண்வெளி ஆராய்ச்சி நாட்டின் பாதுகாப்புக்கு மட்டுமல்லாது, இயற்கை வளங்களைப் பாதுகாத்தல், காலநிலை மாற்றங்களை முன்கூட்டியே அறிந்து கொள்தல் ஆகியவற்றுக்கும் பயன்படுகிறது.
விண்வெளி ஆராய்ச்சித் துறை மூலம் செயற்கை கோள்கள் விண்ணில் ஏவப்பட்டு, வானவெளியில் நிலை நிறுத்தப்பட்டு பல்வேறு ஆராய்ச்சிகளையும், ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டு வரப்படுகிறது. இத்துறையில் நல்ல வேலை வாய்ப்புகளும் காத்திருக்கின்றன. அதனால் அது சம்பந்தமான படிப்புகளை மாணவர்கள் தேர்வு செய்து படித்தால் நல்ல எதிர்காலம் உள்ளது. 
மத்திய அரசின் விண்வெளித்துறையின் கீழ் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஸ்பேஸ் சயின்ஸ் அன்ட் டெக்னாலஜி என்ற கல்வி நிறுவனம் துவக்கப்பட்டு பல்வேறு பாடப் பிரிவுகள் நடத்தப்படுகின்றன. விண்வெளித்துறை தொடர்பான படிப்புகளை மாணவர்கள் படிக்கலாம்.
இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஸ்பேஸ் சயன்ஸ் அன்ட் டெக்னாலஜி கல்வி நிறுவனத்தில் நடத்தப்படும் பாட பிரிவுகள் :
Under Graduate:
B.Tech (Avionics)
B.Tech (Aerospace Engineering)
Dual Degree :
Dual Degree (B. Tech + Master of Science / Master of Technology)
Post Graduate:
M.Tech in Aerodynamics and Flight Mechanics
M.Tech in Structures and Design
M.Tech in Thermal and Propulsion
M.Tech in Control Systems
M.Tech in Digital Signal Processing
M.Tech. in RF and Microwave Engineering
M.Tech in VLSI and Microsystems
M.Tech in Power Electronics
M.Tech in Materials Science & Technology
Master of Science in Astronomy and Astrophysics
M.Tech in Earth System Sciences
M.Tech in GeoInformatics
M.Tech. in Machine Learning and Computing
M.Tech in Optical Engineering
M.Tech in Solid State Technology
Research:
Full time Ph.D. Programme
Part Time Ph.D. Programme

கல்வி உதவித் தொகை :
இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஸ்பேஸ் சயன்ஸ் அன்ட் டெக்னாலஜி கல்வி நிறுவனத்தில் சேர்ந்து படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு : Indian Institute of Space Science and 
Technology - https://www.iist.ac.in/ என்ற இணைய தளத்தைப் பாருங்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com