வாங்க இங்கிலீஷ் பேசலாம் 127

புரொபஸர், கணேஷ் மற்றும் ஜூலி டிபன் சாப்பிட ஓர் உணவகத்துக்குச் செல்கிறார்கள். அங்கு அவர்கள் சந்திக்கும் சர்வரிடம் ஜூலி சில கேள்விகள் 
வாங்க இங்கிலீஷ் பேசலாம் 127

புரொபஸர், கணேஷ் மற்றும் ஜூலி டிபன் சாப்பிட ஓர் உணவகத்துக்குச் செல்கிறார்கள். அங்கு அவர்கள் சந்திக்கும் சர்வரிடம் ஜூலி சில கேள்விகள் கேட்கப் போவதாகவும், அதில் குறைந்தது மூன்று கேள்விகளுக்காவது அவன் சரியாக பதிலளிக்காவிட்டால் அவனது காதலி ராக்கியின் தலை வெடித்துச் சிதறி விடும் என கூறுகிறது. சர்வர் சவாலை ஏற்கிறான். முதல் கேள்வி: ஆங்கிலத்தில் ஆகச் சிறிய வாக்கியம் எது? சர்வர் அதற்கு yes என்கிறான். ஜூலி அது ஒரு சொல் மட்டுமே, வாக்கியம் அல்ல. வாக்கியத்துக்கு ஒரு subject மற்றும் verb அவசியம் என்கிறது. உடனே சர்வர் இதைப் பற்றி இணையத்தில் தேடி வாசித்து விட்டு வாதிடுகிறான்.
சர்வர்: என் பாட்டில் பிழையில்லை. ஏன் தெரியுமா?
ஜூலி: ஏனாம்?
சர்வர்: இந்த இணையதளத்தில் தெளிவாய் போட்டிருக்கிறார்கள். Yes, No ஆகியவை வாக்கியங்கள் அல்லாமல் இருக்கலாம், ஆனால் அவை pro-
sentences.
ஜூலி: ஓ!
சர்வர்: ஆமாம். Pro-sentence என்றால் pronoun போல. ஒரு வாக்கியத்துக்கு பதிலாய் ஆனால் வாக்கியத்துக்கு இணையாக ஒரு சொல் செயல்பட்டால்
அது pro-sentence ஆகிறது. Do you love me? இக் கேள்விக்கு yes என்று சொன்னால் Yes I do எனப் பொருளாகிறது. முழுவாக்கியமும் இல்லாவிட்டாலும் கேட்பவரால் கணித்து நிரப்பப்படுகிறது. அதாவது elide ஆகிறது. ஆகையால் என் பதில் சரி தான்.
ஜூலி: இவ்வளவு சுற்றி வளைத்து எதையும் சரி என நிரூபிக்கலாம். அதனால் அது சரி ஆகிடாது.
சர்வர்: நோ சப்பைக்கட்டு. நான் முதல் கேள்வியில் ஜெயிச்சுட்டேன்.
ஜூலி: சரி அப்படியே வச்சுக்கோ. சின்னப் பையன்!
சர்வர்: அது இருக்கட்டும் உன் பதில் என்ன?
ஜூலி: என் பதில் அல்ல, இது தான் பொதுவாக இலக்கண நிபுணர்களால் ஏற்றுக் கொள்ளப்படும் பதில். ஆங்கிலத்தின் ஆகச் சின்ன வாக்கியம் I am. இதன்
பொருள் "நான் இருக்கிறேன்'. 
புரொபஸர்: அப்படி என்றால் he is, she is, they are, it is இவையெல்லாம் கூட சேர்த்துக்கலாமே!
ஜூலி: வேணும்னா சேர்த்துக்கலாம்.
புரொபஸர்: God is
கணேஷ்: அப்படீன்னா?
புரொபஸர்: "கடவுள் இருக்கிறார்'
சர்வர்: சரி, அடுத்த கேள்விக்கு வாங்க. எனக்கு என் காதலியைக் காப்பாற்றணும். இன்னும் அரை மணியில் வாடிக்கையாளர்கள் மதிய உணவுக்கு வர
ஆரம்பிச்சிடுவாங்க. ஒருவேளை இந்த போட்டியை பாதியில் விட்டுட்டு போய் அவள் தலை வெடிச்சிருச்சுன்னா?
ஜூலி: கண்டிப்பா வெடிக்கும்.
சர்வர்: ஐயோ வேண்டாம். கேளு... கேளு...
ஜூலி: ரெண்டாவது கேள்வி. ஆங்கில எழுத்துகள் அத்தனையும் உள்ளடங்கின வாக்கியம் எது? பத்து சொற்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும். ஒரே வாக்கியம்.
26 எழுத்துக்களும் வர வேண்டும். 
சர்வர்: பத்து வார்த்தைகள் தாண்டக் கூடாது, சரி தானே? பார்க்கிறேன். A cot is kept by the young woman's bulky beanbag. ஏதோ
தோணுனதை சொல்லிட்டேன். எத்தனை சொற்கள்னு தெரியல.
ஜூலி: நான் எண்ணுகிறேன். ஒண்ணு, ரெண்டு, மூணு .. ம்ஹும்... 22 தாண்டல. Good effort still.
சர்வர்: சரி... நீ சொல்லு
ஜூலி: The quick brown fox jumps over the lazy dog. எண்ணிப் பாரு
சர்வர்: ம்ம்ம்... கரெக்ட் 26.
ஜூலி: எப்பிடி? உன் வாக்கியத்தில் சில எழுத்துக்கள் அதிகமா திரும்ப வருது. ஆனால் என் வாக்கியத்தில் குறைவாகத் தான் மீள வருது.
சர்வர்: சரி நான் இதில் இருந்து ஒரு கேள்வி கேட்கிறேன். இதுக்கு நீ பதில் சொல்லாவிட்டால் ரெண்டாவது கேள்வியில் நான் ஜெயிச்சிட்டதா பொருள். ஓகேவா?
ஜூலி: சரி... கேளு
சர்வர்: 26 ஆங்கில எழுத்துக்களில் தனி சொற்கள் என்று சொல்லத்தக்கவை இரண்டே தாம். அவை எவை? ஐந்து வினாடிகளுக்குள் பதில் சொல்ல வேண்டும்.
Your time starts now.
ஜூலி: ஓ... அஞ்சே விநாடி தானா?
சர்வர்: ம்ம்ம்... ரெண்டே வினாடி முடிஞ்சிருச்சு
ஜூலி: ஏ... இரு இரு. O
சர்வர்: தப்பு. அது interjection. அதுக்கு oh ஆகணும்.
ஜூலி: ம்ம்ம்...A
சர்வர்: கரெக்ட். A என்றால் "ஒரு' என அர்த்தம். ஆனால் அடுத்த சொல்லை சொல்வதற்குள்...
ஜூலி: எனக்குத் தெரியும் தெரியும்
சர்வர்:  Time out!
(இனியும் பேசுவோம்) 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com