வேலை...வேலை...வேலை...

ஆவின் நிறுவனத்தில் வேலை, அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை, ஐ.டிபி.ஐ வங்கியில் வேலை
வேலை...வேலை...வேலை...

ஆவின் நிறுவனத்தில் வேலை
பதவி: மேலாளர் - Admin
காலியிடம்: 1
கல்வித் தகுதி: எம்பிஏ படிப்புடன் 2 ஆண்டுகள் முதுகலை டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும்.
பதவி: மேலாளர் - (P&I)
காலியிடம்: 1
கல்வித் தகுதி: கால்நடை அறிவியலில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பதவி: மேலாளர்-மார்க்கெட்டிங்
காலியிடம்: 1
கல்வித் தகுதி: எம்பிஏ படிப்புடன் 2 ஆண்டுகள் முதுகலை டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும்.
பதவி: மேலாளர்-DE
காலியிடம்: 1
கல்வித் தகுதி: எலெக்ட்ரிக்கல் & எலெக்ட்ரானிக்ஸ்/ எலெக்ட்ரானிக்ஸ் & இன்ஸ்ரூமென்டேஷன்/ எலெக்ட் ரானிக்ஸ் & கம்யூனிகேஷன்/ ஆட்டோமொபைல்/
மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பாடங்களில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பதவி: மேலாளர்- Accounts
காலியிடம்: 1
கல்வித் தகுதி: ஏதேனும் பட்டம் பெற்றிருக்க வேண்டும். சிஏ, ஐசிடபிள்யூஏ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பதவி: Executive - Office
காலியிடம்: 3
கல்வித் தகுதி: முதுகலைப் பட்டத்துடன் கூட்டுறவு துறை பயிற்சியில் தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும்.
பதவி: Private Secretary -Grade III
காலியிடம்: 1
கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு பட்டத்துடன் டைப்ரைட் டிங், சுருக்கெழுத்து ஆங்கிலத்தில் ஹையர் கிரேட், தமிழில் லோயர் கிரேட் தேர்ச்சி பெற்றிருக்க
வேண்டும்.
பதவி: Extension Officer Grade II
காலியிடங்கள்: 4
கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் கூட்டுறவு துறை பயிற்சியில் தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும்.
பதவி: Junior Executive (Office)
காலியிடம்: 1
கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் கூட்டுறவு துறை பயிற்சியில் தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும்.
பதவி: டெக்னிஷியன் (லேப்)
காலியிடம்: 1
கல்வித் தகுதி: எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சியுடன் இரு ஆண்டுகள் லேப் டெக்னிஷியன் டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.
பதவி: டெக்னிஷியன் (டயர்)
காலியிடம்: 1
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐ.டி.ஐ. (ஃபிட்டர்) அல்லது மெக்கானிக்கல்/ ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.
பதவி: கனரக வாகன ஓட்டுநர்
காலியிடம்: 1
கல்வித் தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி. கனரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்
வயது வரம்பு: அனைத்துப் பதவிகளுக்கும் 18 வயதிலிருந்து 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.aavinmilk.com என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, தேவையான
சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
முகவரி: The General Manager, The Coimbatore District Cooperative Milk Producers’ Union Limited,
Pachapalayam, Kalampalayam (Post), Coimbatore – 641 010.
மேலும் விவரங்களுக்கு: http://aavinmilk.com/hrcbe070218.html என்ற இணையதளத்தைப் பாருங்கள்.
விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசித் தேதி: 27-02-2018.

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை
பதவி: IP Analyst  
காலியிடம்: 1
பதவி: IP Analyst (Senior)
காலியிடம்: 1
கல்வித் தகுதி: பி.இ அல்லது எம்.எஸ்.சி. உடன் அறிவுசார் சொத்துரிமை தொடர்பான அறிவு பெற்றிருக்க வேண்டும்
முன்அனுபவம்: IP Analyst பதவிக்கு சம்பந்தப்பட்ட துறையில் இரு ஆண்டுகள் பணி அனுபவமும், IP Analyst (Senior) பதவிக்கு சம்பந்தப்பட்ட
துறையில் 5 ஆண்டுகள் பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்க்காணும்
முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
முகவரி: The Director, Centre for Intellectual Property Rights (CIPR),     CPDE building, Anna University,
Chennai 600 025
மேலும் விவரங்களுக்கு: https://www.annauniv.edu/pdf/Advertisement-IP%20Analyst%20Recruitment.pdf என்ற இணையதளத்தைப் பாருங்கள்.
விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசித் தேதி: 28-02-2018.

ஐ.டிபி.ஐ வங்கியில் வேலை
பதவி: Executive
காலியிடங்கள்: 760
கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 20 வயதிலிருந்து 25 வயதுக்குள் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.
விண்ணப்பிக்கும் முறை: https://www.idbi.com என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை ஆன்லைன் மூலம் பூர்த்தி செய்து, புகைப்படத்தையும்
தேவையான சான்றிதழ்களையும் பதிவேற்றி விண்ணப்பிக்க வேண்டும். 
விண்ணப்பக் கட்டணம்: எஸ்.சி./ எஸ்.டி/ மாற்றுத் 
திறனாளிகளுக்கு ரூ.150. மற்றவர்களுக்கு ரூ.700. ஆன்லைன் மூலம் மட்டுமே கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: ஆன்லைன் தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
மேலும் விவரங்களுக்கு: https://www.idbi.com/pdf/careers/
FinalDetailedAdvertisementforpostofExecutive
201805022018.pdf என்ற இணையதளத்தைப் பாருங்கள்.
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 28-02-2018.

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வேலை
பதவி: உதவி பொறியாளர் (எலெக்ட்ரிக்கல்) 
காலியிடங்கள்: 300
கல்வித் தகுதி: எலெக்ட்ரிக்கல் & எலெக்ட்ரானிக்ஸ்/எலெக்ட்
ரானிக்ஸ் & கம்யூனிகேஷன் இன்ஸ்ட்ரூமென்டேஷன் இன்ஜினியரிங்/கணினி அறிவியல்/ஐ.டி. இன்ஜினியரிங் ஆகியவற்றில் பி.ஈ.அல்லது ஏஎம்ஐஇ முடித்திருக்க வேண்டும்
பதவி: உதவி இயக்குநர் (சிவில்)
காலியிடங்கள்: 25
கல்வித் தகுதி: சிவில் இன்ஜினியரிங் துறையில் பி.ஈ. அல்லது ஏஎம்ஐஇ முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.tangedco.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை ஆன்லைன் மூலம்
பூர்த்தி செய்து, புகைப்படத்தையும் தேவையான
சான்றிதழ்களையும் பதிவேற்றி விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: எழுத்துத்தேர்வு மூலம்
தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
மேலும் விவரங்களுக்கு: https://www.tangedco.gov.in/linkpdf/AE%20NOTIFICATION%20.pdf என்ற இணையதளத்தைப் பாருங்கள்.
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசித் தேதி: 28-02-2018
தொகுப்பு : பிரவீண் குமார்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com