படிப்புக்கு உதவும் பலவிதமான "ஆப்'கள்!

கல்லூரி மாணவர்களுக்கு பயனளிக்கும் வகையில் பல்வேறு மொபைல் ஆப்கள் தற்போது பயன்பாட்டில் உள்ளன.
படிப்புக்கு உதவும் பலவிதமான "ஆப்'கள்!

கல்லூரி மாணவர்களுக்கு பயனளிக்கும் வகையில் பல்வேறு மொபைல் ஆப்கள் தற்போது பயன்பாட்டில் உள்ளன.
படிப்பு என்பது பாடப்புத்தகங்களில் உள்ளவற்றை மனப்பாடம் செய்து, தேர்வின் போது வாந்தியெடுப்பது என்ற காலம் மலையேறிக் கொண்டிருக்கிறது. எதைப் படித்தாலும் புரிந்து படிக்க வேண்டும். எந்த விஷயத்தையும் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும். பிழையில்லாமல் எழுத வேண்டும். புதியன எது வந்தாலும் உடனே அதைத்தெரிந்து கொள்ள வேண்டும். இப்படி ஏகப்பட்ட விஷயங்கள் இருக்கின்றன. 
எனினும் வகுப்பறையில் மட்டுமே இவற்றைக் கற்றுக் கொள்ளவோ தெரிந்து கொள்ளவோ முடியாது. வகுப்பறைக்கு வெளியே உள்ள உலகத்தில் மொபைல் போனுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. பாட சம்பந்தமான பகுதிகளை மொபைல் போனில் பதிவிறக்கம் செய்து, அதைப் பேருந்துப் பயணத்தின்போது படித்துக் கொண்டே செல்லும் மாணவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
ஒரு சொல்லுக்குப் பொருள் தெரியவில்லையா? இப்போது யாரையும் கேட்க வேண்டியதில்லை. அதற்கென உள்ள மொபைல் ஆப்பில் சென்று பார்த்தால் உடனே பொருள் தெரிந்துவிடும். எந்த ஒரு சந்தேகத்தையும் மொபைல் ஆப் மூலம் தீர்த்துக் கொள்ளலாம். 
சில மொபைல் ஆப்களை கல்லூரி மாணவர்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். 

1 iTunes University
2. iStudiez Lite
3. Exam Vocabulary Builder
4. Dictionary.com
5. Coursera
6. Dragon Dictation
7. Brainscape - Smart Flashcards
8. Flashcards+
9. Quizlet
10. Todoist
11. MyScript Smart Note
12. XMind
13. Evernote and Penultimate

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com