வேலை...வேலை...வேலை...

தமிழ்நாடு செய்தித்தாள், காகித நிறுவனத்தில் வேலை, சென்னை ஐ.ஐ.டி.யில் வேலை, நகராட்சி நிர்வாக ஆணையரகத்தில் வேலை
வேலை...வேலை...வேலை...

தமிழ்நாடு செய்தித்தாள், காகித நிறுவனத்தில் வேலை
பதவி: இளநிலை சுருக்கெழுத்தாளர்-டைப்பிஸ்ட்
காலியிடங்கள்: 2
கல்வித் தகுதி: பொறியியல் பட்டம் தவிர ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஆங்கில தட்டச்சு ஹையர் கிரேட் (நிமிடத்துக்கு 45 வார்த்தைகள்) மற்றும் ஆங்கில சுருக்கெழுத்து லோயர் கிரேட் (நிமிடத்துக்கு 80 வார்த்தைகள்) தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். டிப்ளமோ இன் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் படித்தவர்கள், தமிழ் தட்டச்சு தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
வயது வரம்பு: அதிகபட்சம் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். நஇ பிரிவினருக்கு அதிகபட்சம் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.tnpl.com என்ற இணையதளத்தில் இருந்து பயோ-டேடா மாதிரி, விண்ணப்பப் படிவ மாதிரியைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, உரிய சான்றிதழ்களை இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
முகவரி: GENERAL MANAGER (CORPORATE AND TECHNICAL CELL), TAMILNADU NEWSPRINT AND PAPERS LIMITED, NO.67, MOUNT ROAD, GUINDY, CHENNAI - 600032, TAMILNADU.
மேலும் விவரங்களுக்கு: http://www.tnpl.com/Careers/junior_steno_typist_grade_iii_trainee.pdf என்ற இணையதளத்தைப் பாருங்கள்.
விண்ணப்பம் சென்று சேர வேண்டிய கடைசித் தேதி: 19-01-2018.

சென்னை ஐ.ஐ.டி.யில் வேலை
பதவி: ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் (எஸ்.சி/ எஸ்.டி. விண்ணப்பதாரருக்கு மட்டும்)
காலியிடங்கள்: நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கையைப் பொருத்து நிர்வாகம் முடிவு செய்யும்.
கல்வித் தகுதி: பிபிஏ/பி.காம்/பி.ஏ./ பி.பி.எம்./ பி.சி.ஏ./ பி.எஸ்ஸி படிப்புகளில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: அதிகபட்சம் 29 வயதுக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: பயோ-டேடாவுடன் உரிய சான்றிதழ்களின் நகல்களையும் பதிவேற்றம் செய்து, recruitment@imail.iitm.ac.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு: https://www.iitm.ac.in/sites/default/files/notices/advertisement_for_the_post_of_junior_executive.pdf என்ற இணையதளத்தைப் பாருங்கள்.
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 19-01-2018.

நகராட்சி நிர்வாக ஆணையரகத்தில் வேலை
பதவி: Sanitary Inspector
காலியிடங்கள்: 110
கல்வித் தகுதி: பி.எஸ்சி. வேதியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும். துப்புரவுஆய்வாளர் சான்றிதழ் பெற்றிக்க வேண்டும்.
வயது வரம்பு: அதிகபட்சம் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். ஒவ்வொரு பிரிவினருக்கும் அதிகபட்ச வயது வரம்பில் வேறுபாடு உண்டு.
விண்ணப்பிக்கும் முறை: அறிவிப்பில் உள்ள மாதிரி விண்ணப்பப் படிவத்தின்படி விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து, உரிய சான்றிதழ்களை இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: Commissionerate of Municipal Administration, 6th Floor Ezhilagam  Annex Building, Kamarajar salai, Chepauk, Chennai - 600005.
மேலும் விவரங்களுக்கு: 
http://govtjobsdrive.in/wp-content/uploads/2017/12/CMA-Chennai-Recruitment-2018-110-Sanitary-Inspector-Posts-Application-Form.jpg என்ற இணையதளத்தைப் பாருங்கள்.
விண்ணப்பம் சென்று சேர வேண்டிய கடைசித் தேதி: 19-01-2018.

இர்கான் இண்டர்நேஷனல் நிறுவனத்தில் வேலை
பதவி: உதவி மேலாளர் (மனிதவள மேலாண்மை)
காலியிடங்கள்: 2
வயது வரம்பு: அதிகபட்சம் 33 வயதுக்குள் இருக்க வேண்டும்.
பதவி: அசிஸ்டண்ட் ஆபிஸர் (மனிதவள மேலாண்மை)
காலியிடங்கள்: 2
வயது வரம்பு: அதிகபட்சம் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
மேற்கண்ட இரு பதவிகளுக்கும் கல்வித் தகுதி: மனிதவள மேலாண்மைத் துறையில் (ஹெச்.ஆர்.) முழுநேர எம்.பி.ஏ/ பிஜிடிஎம் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
முன் அனுபவம்: பொதுத்துறை நிறுவனங்கள்/ மாநில அரசு அலுவலகங்கள்/ ரயில்வே/ தனியார் துறைகளில் மனிதவள மேலாண்மைப் பிரிவில் இரண்டாண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.ircon.org என்ற இணையதளத்தில் உரிய சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். 
விண்ணப்பக் கட்டணம்: பொது/ ஓபிசி-ரூ.1,000 (எஸ்சி/ எஸ்டி/ முன்னாள் ராணுவத்தினருக்கு ரூ.250 மட்டும்)- ஆன்லைன் விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்த 24 மணி நேரத்திற்குள், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா இணையதளத்தின் மூலமாகச் செலுத்த முடியும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, மருத்துவத் தேர்வு ஆகியவற்றின் மூலம் தகுதியான நபர்கள் தேர்தெடுக்கப்படுவார்கள். 
மேலும் விவரங்களுக்கு: http://www.ircon.org/images/To%20Edcil%20Hr%20Advt%20final%20for%20net.pdf என்ற இணையதளத்தைப் பாருங்கள்.
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசித் தேதி: 22-01-2018.

துறைமுகத்தில் வேலை
பதவி: ஜூனியர் லேப் டெக்னிஷியன்
காலியிடங்கள்: 1
பதவி: ஜூனியர் லேப் அசிஸ்டெண்ட்
காலியிடங்கள்: 1
கல்வித் தகுதி: பி.எஸ்.சி. (எம்.எல்.டி)
முன் அனுபவம்: நோயியல்/ பொது சுகாதார ஆய்வுக்கூடம்/ மருத்துமனையில் 3 ஆண்டுகள் பணி அனுபவம்.
விண்ணப்பிக்கும் முறை: அறிவிப்பில் உள்ள மாதிரி விண்ணப்பப் படிவத்தின்படி விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து, உரிய சான்றிதழ்களை இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: CHIEF MEDICAL OFFICER, COCHIN PORT TRUST, COCHIN - 682003.
மேலும் விவரங்களுக்கு: http://www.cochinport.gov.in/writereaddata/careers/docs/1515055847Lab%20Technician. என்ற இணையதளத்தைப் பாருங்கள்.
விண்ணப்பம் சென்று சேர வேண்டிய கடைசித் தேதி: 23-01-2018.
தொகுப்பு: பிரவீண் குமார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com