சமையல் கலையில் சாதனை!

சமையல் கலையில் சர்வதேச அளவில் சாதனை படைத்திருக்கிறார் வாழப்பாடியை சேர்ந்த இளைஞர் சிலம்பரசன்.
சமையல் கலையில் சாதனை!

சமையல் கலையில் சர்வதேச அளவில் சாதனை படைத்திருக்கிறார் வாழப்பாடியை சேர்ந்த இளைஞர் சிலம்பரசன்.

 அவர் சேலத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 2003-இல் சமையல் கலையில் பட்டயப் படிப்பு படித்தார்.

 பெங்களூரில் இயங்கும் 3 நட்சத்திர சொகுசு விடுதியில் பணியில் சேர்ந்த அவர், பெங்களூரு விமான நிலையத்தில் பிரெஞ்சு, மலேசியா விமானங்களில் முதல் வகுப்பு பயணிகளுக்கு சர்வதேசத் தர உணவுகளை தயாரித்து கொடுக்கும் வாய்ப்பைப் பெற்றார்.
 இதைத் தொடர்ந்து, "ராயல் ஆர்சிட்' எனும் 5 நட்சத்திர சொகுசு விடுதியில் பணிபுரிந்த அவர், பிரபல சமையல் கலைஞர் சுதிர்நாயர் கொடுத்த ஊக்கத்தினால்,பெங்களூரில் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரியும் பெண்களுக்கு சமையல் கலை பயிற்சி அளித்தார்.
 பெங்களூரில் 2010, 2011, 2013-இல் நடைபெற்ற "யங் செப் குளூனெரி சேலன்ஞ்' போட்டியில் சமையல் கலைஞர் சஞ்ஜெய்பேல் வழிகாட்டுதலின்பேரில், பங்குபெற்று, இயற்கை முறையில் மூன்று உணவுகளைத் தயாரித்து சமர்ப்பித்து பரிசு பெற்றார்.
 2012-இல் பெங்களூரு ராயல்-ஆர்-கேட் சொகுசு விடுதியில் பணிபுரிந்தபோது, ஜப்பானில் பிரசித்தி பெற்ற சூசி வகை உணவை, கடற்பாசி, நண்டு, மீன் முட்டைகளை கொண்டு 120 அடி நீளத்துக்குத் தயாரித்து சர்வதேச அளவில் சாதனை படைத்து "புக் ஆப் லிம்கா' புத்தகத்தில் இடம்பிடித்தார்.
 2015-இல் ஐடிசி கிரேண்ட் சோழா 5 நட்சத்திர விடுதியில் நடைபெற்ற 6வது சர்வதேச சமையல் கலைஞர்கள் மாநாட்டிலும், புதுதில்லியில் நடைபெற்ற ஐ.எப்.சி.ஏ குளோபல் குளுனெரி எக்சேஞ்ச் போட்டியிலும் பரிசுகளைப் பெற்றார்.
 தென்னிந்திய குளுனெரி சங்கத்துடன் இணைந்து குழந்தைகள்- பெற்றோருக்கு ஆரோக்கியமான உணவு குறித்து செய்முறையுடன் விழிப்புணர்வு பயிற்சி அளித்தார். அதற்காக சர்வதேச சமையற்கலைஞர் நாள் (செப் டே அவார்டு) விருது பெற்றார்.
 2016-இல் நடைபெற்ற 4வது குளுனெரி கண்காட்சி போட்டியில் பங்கேற்று, பழங்கள், காய்கறிகளில் சிற்பங்களை வடிவமைத்து பாராட்டு சான்றிதழ் பெற்றார். தற்போது, குழந்தைகளுக்கான ஆரோக்கிய உணவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் ஆர்வம் காட்டி வருகிறார்.
 நிகழாண்டிலும் "புட் பார் ஹெல்த் ஹீரோ' போட்டியில் பங்கேற்று மீண்டும் "செப் டே அவார்டு' பெற்றுள்ளார்.
 தற்போது அவர் தனது சொந்த ஊரான வாழப்பாடியில் தங்கி, கிராமப்புற இளைஞர்களுக்கு சமையல் கலை பயிற்சி அளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
 - பி.பெரியார்மன்னன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com