இணைய வெளியினிலே...

கனவில் பார்க்கும் முகங்கள் அனைத்தும் நீங்கள் ஏற்கெனவே பார்த்தவை தான். அது எப்போதோ உங்களுடன் ஒரேயொரு முறை லிஃப்டில் வந்த அந்நியராகக் கூட இருக்கலாம்.
இணைய வெளியினிலே...

முக நூலிலிருந்து....

• எதாவது சொல்...
நீ இல்லாத நேரங்களில்
உன் சொற்களாவது என்னோடு
இருக்கட்டும்! 
அல்லது
சொல்வது போல்
பாவனையாவது செய்...
வாயசைப்பாவது
நினைவில் உறுத்தட்டும்...
- செங்கான் கார்முகில்

• மேதாவிகளுடன் நட்பு வைக்கலாம்,
பார்த்து ரசிக்கலாம்... 
உறவு வைத்தால்
பைத்தியம் பிடித்துவிடும்.
- சரவணன் நாரயண்சுவாமி

• ஆசிரியராக இருப்பதன்
ஆகப் பெரிய பிரச்னை...
எல்லாவற்றிற்கும்
பதில் சொல்லிக் கொண்டிருப்பது... 
வகுப்பறையில் அல்ல.
- கலகலவகுப்பறை சிவா

• மாடுகளும் இல்லை. மாட்டு கொட்டகையும் இல்லை.
பாலுக்காக கிராமத்திலே சினையூட்ட 
டியுப் கிராஸ் இனத்தை வளர்த்து பாலை ஊற்றிவிட்டு...
தயிர், மோர், நெய் பாக்கெட்களை கடையில வாங்குறான் விவசாயி
நாம ஒருபடி மேல போய்... பால் பாக்கெட்டுலயும்...
மாட்டை கலர்கோலத்தில போட்டு... பாக்குற காலமாய் போச்சு.
சாணிய தெளிக்க மனசும் நெளியும் காலமாச்சு.
- பாரதி வந்தவாசி

சுட்டுரையிலிருந்து...
• பொறுமையா இருந்தா...
"எருமை மாட்டு மேல மழை பெஞ்ச மாதிரி'ன்னு சொல்றது,
கொஞ்சம் கோவப்பட்டா... 
"ஏன் காட்டு மிராண்டித் தனமா 
நடந்துக்குறேனு' சொல்றது... 
நம்மைச் சுற்றி இருக்கும் சமூகம்.
- கவிதையின் தோழி

• 40 வயது வரை 
"உணவில்' கவனம் 
செலுத்தவில்லையெனில்...?
41 வயது முதல் "உடலில்'
கவனம் செலுத்த நேரிடும்!
- பூனையார்

• ரோட்ல ஆடுங்க... பீச்ல ஆடுங்க...
stage-ல ஆடுங்க...
ஏன்... பாத்ரூம்ல கூட ஆடுங்க.
ஆணவத்துல மட்டும் ஆடாதீங்கடா...
இருக்கற இடம் தெரியாமப் 
போயிடுவிங்க! 
-கவிதை திருடி

• நம்பிக்கையும் கண்ணாடியும்
ஒன்று போலத்தான்...
விரிசல்களை 
காட்டிக் கொடுக்கிறது. 
- மழைச்சாரல்

வலைதளத்திலிருந்து...
கனவுகளைப் பற்றி தகவல்களைப் பார்ப்போம்-

பெரும்பாலான கனவுகள் மனிதன் கண் விழித்து ஐந்தே நிமிடங்களுக்குள் மறந்துவிடுகிறது. சில சமயங்களில் பத்து.

கனவில் பார்க்கும் முகங்கள் அனைத்தும் நீங்கள் ஏற்கெனவே பார்த்தவை தான். அது எப்போதோ உங்களுடன் ஒரேயொரு முறை லிஃப்டில் வந்த அந்நியராகக் கூட இருக்கலாம்.

சிலருக்கு தங்கள் வாழ்க்கையில் நடக்கப்போகும் சம்பவங்கள் கனவில் முன்கூட்டியே தெரிந்திருக்கிறது. அல்லது சம்பவங்கள் நடக்கும்போது அது 
ஏற்கெனவே நடந்தது போன்று தோன்றலாம்.

பயிற்சிகள் மூலம் உங்கள் கனவுகளை நீங்கள் கட்டுப்படுத்த முடியும். ஏற்கெனவே கண்ட கனவை விட்ட இடத்திலிருந்து தொடரலாம். இதற்கு லூஸிட் ட்ரீமிங் என்று பெயர். கனவில் உங்களால் படிக்கவோ, டைம் பார்க்கவோ முடியாது. அடுத்தமுறை கனவு வந்தால் நேரம் பார்க்க முயற்சி செய்யுங்கள்.

கனவில் நிறங்கள் வராது என்பது தவறு. வெறும் 12 சதவிகித மனிதர்கள் மட்டுமே கருப்பு - வெள்ளையில் கனவு காண்கிறார்கள்.

ஒரு மனிதனின் வாழ்நாளில் ஏறத்தாழ ஆறு மணிநேரங்கள் கனவு காண்பதில் செலவிடப்படுகிறது. சில சமயம் தூங்கி எழுந்ததும் கொஞ்ச நேரத்திற்கு கை, கால்களை அசைக்க முடியாமல், பேச முடியாமல் இருக்கலாம். பயப்பட வேண்டாம். இது நார்மல் தான்.

http://www.philosophyprabhakaran.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com