நினைத்ததை நடத்தி முடிக்கும் ஆப்!

நினைத்ததை நடத்தி முடிக்கும் ஆப்!

நினைப்பதெல்லாம் நடந்துவிடாது என்பது பழங்காலம். ஆனால், நினைத்ததை நடத்தி முடிப்பது இன்றைய செல்லிடப்பேசி ஆப்களின் காலம்.

நினைப்பதெல்லாம் நடந்துவிடாது என்பது பழங்காலம். ஆனால், நினைத்ததை நடத்தி முடிப்பது இன்றைய செல்லிடப்பேசி ஆப்களின் காலம்.
மனிதனை மூளை இயக்கி வருவதைப்போல், செல்லிடப் பேசிகளை ஆப்கள்தான் இயக்கி வருகின்றன. இந்த இரண்டையும் ஒன்று சேர்த்து இயக்கினால் என்னவாகும்? ஆம். செல்லிடப்பேசி ஆப்களை மனிதனின் மூளை சமிக்ஞைகளை வைத்தே இயக்கும் காலம் வெகு தூரம் இல்லை.
இந்த தொழில்நுட்பத்தை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. இதற்கான காப்புரிமையையும் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் கோரியுள்ளது. இதன் மூலம் இனி வருங்காலங்களில், நமது தலையில் சென்சார்கள் பொருத்திய ரப்பர் பாண்டை மட்டும் அணிந்து கொண்டால்போதும், நாம் நினைப்பதை எந்தவித உடல் அசைவுமின்றி செல்லிடப்பேசியில் உள்ள ஆப்கள் இயங்கும்.
நமது மூளையில் உள்ள சமிக்ஞைகள் electroencephalogram வடியில் செல்லிடப்பேசிக்கு சென்சார்கள் அனுப்பி வைக்கும். இந்த சமிக்ஞைகளை செல்லிடப்பேசியில் உள்ள ஆப்கள் டேட்டாவாக பதிவு செய்து அதன் அடிப்படையில் செயல்படும். இதன் மூலம் நாம் செய்ய வேண்டியதை நினைத்தாலே போதும். நமது செல்லிடப்பேசி ஆப் நடத்தி முடித்துவிடும்.
இதன் மூலம் தற்போது நமது செல்லிடப்பேசிகளைத் திறக்க பயன்படுத்தும் கை ரேகைப்பதிவு, எண் பதிவு, ஸ்வைப் செய்வது போன்ற செயல்கள் காலாவதியாகிவிடும் என்று கூறப்படுகிறது.
இந்தத் தொழில்நுட்பம் செயல்பாட்டுக்கு வந்தால், உடல் ஊனமுற்றோருக்குதான் அதிக பயன்படும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஏனென்றால், இதுபோன்ற நபர்களுக்கு இயந்திர கால், கைகள் பொருத்தி அவர்களின் மூளை சமிக்ஞை மூலம் இயந்திர பாகங்களைச் செயல்படுத்தி அவர்களின் கை, கால்களை இயக்கவிடலாம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
- அ.சர்ஃப்ராஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com