புதிய வேலை... புதிய பார்வை!

புதிய வேலையில் சேரும் போது நம்மில் பலரும் பள்ளிக்கு முதன் முதலில் செல்லும் போது ஏற்படும் அச்சம் கலந்த உணர்வுடனேயே இருப்பது வழக்கம்.
புதிய வேலை... புதிய பார்வை!

புதிய வேலையில் சேரும் போது நம்மில் பலரும் பள்ளிக்கு முதன் முதலில் செல்லும் போது ஏற்படும் அச்சம் கலந்த உணர்வுடனேயே இருப்பது வழக்கம். அந்த அலுவலகச் சூழல் மற்றும் புதிய நபர்களைப் பற்றி தெரிந்து கொள்ளும் வரை நாம் யாருடனும் மனம் விட்டு பேச முடியாமல் இறுக்கமான நிலையில் இருக்க வேண்டி வரும்.
இது ஒன்றும் பெரிய விசயம் அல்ல. நாம் எங்கு சென்றாலும் எதைப் பேச வேண்டும் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஒரு முன் தயாரிப்பு செய்து கொண்டால் எத்தகைய கடினமான சூழலையும் கடந்து விடலாம். அதுகுறித்த சில ஆலோசனைகள் உங்களுக்காக...
உடன் பணிபுரிபவர்களைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்: புதிய அலுவலகத்தில் நாம் சேர்ந்ததும் நமது வேலை பற்றி தெரிந்து கொள்வது எவ்வளவு முக்கியமோ அதேபோல் உடன் பணிபுரிபவர்கள் பற்றி தெரிந்து கொள்வதும் மிக மிக அவசியம். நாம் எல்லாருக்கும் சிறந்த நண்பராக இருக்க முடியாது என்றாலும் அனைவரையும் பற்றி அறிந்து கொள்ளும் போதுதான் நாம் இயல்பாக பழகவும் பணியாற்றவும் முடியும்.
உங்கள் எல்லையை அறிந்து கொள்ளுங்கள்: புதிய வேலையில் சேர்ந்ததும் நாம் நமது எல்லை எது என்று தெரிந்து கொள்ள வேண்டும். அடுத்தவர்கள் பணி மற்றும் இதர விசயங்களில் தேவை இல்லாமல் தலையிடுவதைத் தவிர்த்து விடுங்கள். மிகுந்த எதிர்பார்ப்புகள் எதையும் வைத்துக் கொள்ளாதீர்கள்.
குற்றச்சாட்டுகளைத் தவிர்த்துவிடுங்கள்: புதிய பணியாளரை சக ஊழியர்களிடம் எவ்வாறு அறிமுகப்படுத்துவது என்பது குறித்து ஒவ்வொரு நிறுவனத்திற்கும் வேறுபட்ட கருத்துக்கள் உள்ளன. இருப்பினும், உங்களுடைய செயல்பாடுகள் பற்றி நீங்கள் சில கருத்துக்களை தெரிவிக்கலாம். மற்றவர்களின் செயல்பாடுகள் பணிகள் குறித்து குறைகள் எதை கண்டாலும் தொடக்கத்திலேயே குற்றச்சாட்டுகளை முன் வைக்காதீர்கள். உங்கள் மேலாளர் எடுக்கும் எந்த உத்தரவையும் சரியாகச் செய்து முடிக்க தயாராக இருக்க வேண்டும்.
மனம் திறந்து பேசுங்கள்: வேலைக்குச் சேர்ந்த முதல் சில வாரங்களிலேயே உங்கள் முழு திறமையையும் நீங்கள் வெளிப்படுத்துவது சாத்தியமில்லை. எனவே உங்களுக்கு தெரியாத சில விசயங்கள் குறித்து பிறரிடம் கூச்சம் ஏதும் இன்றி கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். அவ்வாறு கேட்டு தெரிந்து கொள்வதற்கு கௌரவம் பார்க்காதீர்கள். உங்களின் வெளிப்படத் தன்மை உங்கள் மேலாளரைக் கவரக்கூடும்.
பயிற்சி காலங்களில்...: ஒவ்வொரு நிறுவனத்திலும் வெவ்வேறு விதிமுறைகளும் நடைமுறைகளும் இருக்கும் நீங்கள் பணியில் சேர்ந்த ஓராண்டு பயிற்சி அல்லது திறன் காண் காலம் என்று சொல்லப்படும் Probationary periods- இல் உங்கள் முன்னேற்றத்தை கவனத்தில் கொள்ளுங்கள். உங்கள் செயல்பாடுகள் மூலம் உங்கள் மேலாளரின் கவனத்தை ஈர்த்துக் கொள்ளுங்கள்.
உங்கள் திறனை வளர்த்துக் கொள்ள கூடுதல் பயிற்சி மற்றும் அதிகாரிகளின் நன்மதிப்பை பெற இக்காலக்கட்டத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள். அது உங்கள் முன்னேற்றத்திற்கு சிறந்த வழியாக இருக்கும். முக்கியமான அலுவலகக் கூட்டம் மற்றும் திட்ட அறிக்கைகள் தயாரிப்பு போன்ற பணிகளை மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தால் தவிர்க்காதீர்கள். அலுவலக பணிகளில் உங்களை எப்போது பிஸியாக வைத்துக் கொள்ளுங்கள்.
புதிய வேலை என்பது வெறும் வேலை என்று எடுத்துக் கொள்ளாமல் அதை உங்கள் வாழ்வின் உயர்நிலைக்கான படியென கொள்ளுங்கள் வெற்றி நிச்சயம்.
- திருமலை சோமு
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com