வெல்வதற்கு தடை எதுவுமில்லை!

தங்கள் குழந்தைக்கு ஆட்டிஸ குறைபாடு உள்ளது என்பதை அறிந்த ஒரு தம்பதி, அதை நினைத்தே கவலைப்பட்டுக் கொண்டிராமல், அதனிடம் தொடர்ந்து காட்டிய அன்பு
வெல்வதற்கு தடை எதுவுமில்லை!

தங்கள் குழந்தைக்கு ஆட்டிஸ குறைபாடு உள்ளது என்பதை அறிந்த ஒரு தம்பதி, அதை நினைத்தே கவலைப்பட்டுக் கொண்டிராமல், அதனிடம் தொடர்ந்து காட்டிய அன்பு, அரவணைப்பால், அந்த குழந்தை சிறப்பாக வளர்ந்து இப்போது சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வில் 83 சதவீத மதிப்பெண்கள் பெற்று சாதிக்கும் மாணவனாக மாறியிருக்கிறது.
ஹரியாணா மாநிலம், குருகிராம் நகரைச் சேர்ந்தவர்கள் சுகன்யா-கார்த்திக் தம்பதி. தில்லியில் வசித்த இவர்களுக்கு 2 குழந்தைகள். இவர்களில் மூத்த மகன் ருத்ராக்ஷ். 
அவனுக்கு 3 வயது தொடங்கியபோது, அவனுடைய இயல்பில் நிறைய மாற்றங்கள் தெரிந்தன. ஒரு பொருளை பற்றி எடுப்பது, பேசுவது போன்றவற்றில் அவனால் மற்ற குழந்தைகளைப் போல இயல்பாக செயல்பட முடியவில்லை. 
இந்த நிலையில், ருத்ராக்ஷ் சிறுவர் பள்ளியில் (Play School) சேர்க்கப்பட்டான். என்றாலும், தங்களுடைய குழந்தை எல்லாவற்றிலும் பின்தங்குவதாக அந்த பெற்றோர் கருதினர். இதனால், வேலைக்கு சென்றுகொண்டிருந்த சுகன்யா, பிறகு முழுநேரமும் ருத்ராக்ஷýடன் செலவிடத் தொடங்கினார்.
பெரும்பான்மையான பெற்றோரைப் போல, சுகன்யாவும் தனது மகனின் பலம், பலவீனங்களை முழுமையாக அறிந்திருந்தார். முதலில் அவர், தன் மகனை மெதுவாக கற்கும் (Slow Learner) திறன் கொண்டவன் என நினைத்தார். அவனுடைய ஆர்வத்தை அறிந்துகொள்ள எண்ணி, மணிக்கணக்கில் அவனுடன் விளையாடினார். 
இதன்மூலம் ருத்ராக்ஷ், தருக்க ரீதியான விளையாட்டுகளில் (Logical Reasoning Games) ஆர்வம் காட்டியதும், படைப்பு விளையாட்டுகளை (Creative Games) அவன் கண்டுகொள்ளவில்லை என்பதையும் அறிந்து, அதற்கேற்ப விளையாட்டுகளில் மகனை ஈடுபடுத்தினார்.
இந்த நிலையில், தில்லியில் உள்ள ஒரு முன்னணி பள்ளியில் அவனைச் சேர்த்தனர். அந்தப் பள்ளியின் ஆசிரியர்கள் அனைவரும் ருத்ராûக்ஷ குறைகூறினர். குறிப்பாக, அவன் தன்னைத்தானே பாதுகாக்கவும், தானாகவே ஒரு செயலைச் செய்யவும் திறனற்றவன் என்று அவர்கள் மட்டம்தட்டினர். 
எனினும், ருத்ராக்ஷ் வீட்டில் ஓரளவு செயல்படுபவனாக இருந்ததோடு, எழுதவும், படிக்கவும் செய்தான். சிலசமயங்களில் அவனால் உரையாடவும் முடிந்ததை சுகன்யா உணர்ந்தார். 
இதையடுத்து, உளவியல் நிபுணரிடம் சென்றபோது, அவனைப் பரிசோதித்த மருத்துவர், அவன் Autism Spectrum Disorder -ஆல் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். சுகன்யாவால் இதை தாங்கிக்கொள்ள முடியவில்லை. என்றாலும் பிறகு ஒருவழியாக தன்னை தேற்றிக்கொண்டார்.
இதுகுறித்து சுகன்யா கூறுகையில், "மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு ஒரு தீர்மானத்துக்கு வந்தேன். 3 மாதங்கள் நம்பிக்கையோடு அவனுடன் கடுமையாக உழைத்தேன். அவனை இந்த சமூகத்தை நோக்கி உந்தித் தள்ளியதோடு, அவனுடைய வகுப்பில் மற்ற மாணவர்களுக்கு இணையாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டேன். மேலும், தில்லி மாளவியா நகரில் உள்ள SPARSH  என்ற மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன். 
அங்கு அவனுக்கு சமூக கலந்துரையாடல் திறன் (Social Interaction Skills) தேவைப்படுவதை அறிந்து அதில் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த நேரத்தில் ருத்ராக்ஷ் கல்வியில் சிறந்து விளங்கினான். மக்களிடம் கலந்துரையாடுவதில் மட்டுமே அவனுக்கு உதவி தேவைப்பட்டது. 
ருத்ராக்ஷ் 4ஆம் வகுப்பு படிக்கும் போது, தில்லியில் இருந்த குடும்பம் குருகிராமுக்குத் திரும்பியது. அங்கு ஹரியாணா காவல் துறையும், ஸ்ரீராம் குழுமமும் இணைந்து நடத்தும் ஸ்ரீராம் போலீஸ் பப்ளிக் பள்ளியில் ருத்ராûக்ஷ சேர்த்துக்கொள்ள முன்வந்தனர். 
அந்தப் பள்ளி ருத்ராக்ஷýக்கு பிடித்ததாகவும், ஆதரவான சூழலாகவும் அமைந்தது. அங்கு அவன் சிறப்புப் பள்ளியில் இருக்க வேண்டி இருந்ததால், அதற்கான வசதிகளை பள்ளி நிர்வாகம் செய்துகொடுத்தது.
இதுகுறித்து சுகன்யா கூறும்போது, "இதற்கு முன்னர் ருத்ராக்ஷ் படித்த பள்ளியில் பெற்றோர்-ஆசிரியர் கூட்டங்களில் பங்கேற்க நான் மிகவும் அச்சப்படுவேன். காரணம், என் மகன் குறித்த எதிர்மறையான கருத்துகள், குறைகளை மட்டுமே அவர்கள் கூறுவர். 
தற்போது, அதே தயக்கத்துடன்தான் இந்தப் பள்ளி கூட்டத்திற்கும் சென்றேன். ஆனால் அவர்கள், ருத்ராக்ஷின் நிறைகளையும், நேர்மறையான விஷயங்களை மட்டுமே கூறினர். இதைவிட மனநிறைவு வேறு எதுவும் இருக்க முடியாது. என் மகனை வளர்க்கும் அந்தப் பள்ளி ஆசிரியர்களுக்கு நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன்'' என்கிறார்.
இந்த நிலையில், ருத்ராக்ஷ் 10-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வில் 83 சதவீத மதிப்பெண்கள் பெற்று தனது மகத்தான வலிமையை நிரூபித்துள்ளான். அவன் இனி சிறப்பு வகுப்பில் இருக்க வேண்டியதில்லை. அனைத்து மாணவர்களும் உள்ள (Included) வகுப்பிலேயே படிக்கலாம். 
ருத்ராக்ஷ், கணினி அறிவியல் பாடத்தில், செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) சிறப்புப் பிரிவில் பயில விரும்புவதாக பெருமை பொங்கக் கூறுகிறார் சுகன்யா. 
- இரா.மகாதேவன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com