கற்றுக் கொள்ளுங்கள்...மனிதவள மேலாண்மையை! 

இன்றைய காலகட்டத்தில் மனிதர்களின் பிரச்னைகளைத் தவிர மற்ற பிரச்னைகளை எளிதில் தீர்த்துவிட முடிகிறது
கற்றுக் கொள்ளுங்கள்...மனிதவள மேலாண்மையை! 

இன்றைய காலகட்டத்தில் மனிதர்களின் பிரச்னைகளைத் தவிர மற்ற பிரச்னைகளை எளிதில் தீர்த்துவிட முடிகிறது. மனிதர்களை மேலாண்மை செய்வது மட்டும் எளிமையானதாக இருக்கவில்லை.
மனிதர்களை மேலாண்மை செய்யும் வல்லுநர்களை உருவாக்குவதே "மாஸ்டர் ஆப் சோஷியல் ஒர்க்' (MSW) என்ற முதுகலை இரண்டு ஆண்டு பட்டப்படிப்பு. இந்த படிப்பு குறித்து கோயம்புத்தூர் ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் துறைத் தலைவர் ஏ.அழகர்சாமி நம்மிடம் பகிர்ந்து கொண்டதாவது:
இந்த படிப்பில் சேருவதற்கு கலை கல்லூரியில் ஏதாவது ஓர் இளங்கலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானதாகும்.
இந்த படிப்பில் சமுதாயப் பிரச்னைகள், சமுகப்பணித்திட்டங்கள், சமுதாய நிறுவனங்களின் செயல்பாடுகள், சர்வதேச சமுதாயப் பிரச்னைகள், சமூக உறவுகள், சமுதாயஅமைப்பு, உளவியல் உள்ளிட்ட பாடங்கள் கற்றுத் தரப்படுகின்றன.
ஒவ்வொரு மாணவனும் வாரத்தில் இருநாட்கள் ஏதேனும் ஒரு தொண்டு நிறுவனத்திற்கு சென்று களப்பணி மேற்கொள்ள வேண்டும். மனித உறவுகள் மேம்படவும், நாம் சந்திக்கும் பிரச்னைகளுக்கு பொதுவான தீர்வு காணவும், போதை பழக்கம் உள்ளவர்களைத் திருத்தவும், சிறுவர், முதியவர்களின் வாழ்வு மேம்படவும், தொழிலாளர்கள்} நிர்வாக உறவு மேம்படவும் பாடமும் பயிற்சியும் அளிக்கப்படும்.
சோஷியல்ஒர்க் என்பது சமூகத்தில் கீழ் மட்டத்தில் இருப்பவர்களுக்கு உதவி செய்தல், கிராம, நகர வளர்ச்சிக்கு உதவுதல், சமூக இன்னல்களை நீக்குதல் என்பது மட்டுமல்ல, கடந்த பல ஆண்டுகளில் சோஷியல் ஒர்க் ஒரு நல்ல தொழில்முறைப் பணியாகவும் வளர்ந்துள்ளது.
இதில் படிக்கும் மாணவர்கள் தொழிலாளர்கள் வைப்பு நிதி நிறுவனம் உள்ளிட்ட தொழிலாளர் நலன் சார்ந்த நிறுவனங்களுக்குச் சென்று களப்பயிற்சி பெறுவார்கள். இறுதியில் திட்ட அறிக்கை சமர்ப்பிப்பார்கள். கடந்த 2013 ஆகஸ்டில் நடைமுறைக்கு வந்த கம்பெனிகள் புதிய சட்டப்படி, ரூ 500 கோடி அல்லது அதற்கு மேலும் சொத்துமத்திப்புள்ள நிறுவனங்கள், நிதியாண்டியல் ரூ 5 கோடி லாபம் ஈட்டிய நிறுவனங்கள் அனைத்தும் சமுகப்பொறுப்பு வாரியம் ஒன்றை உருவாக்கி, நிறுவனத்தின் மூலம் சமுதாயப் பணியை கட்டாயமாக மேற்கொள்ள வேண்டும். இந்தத் துறைக்கு தலைமை தாங்கவும், துறையில் உள்ள அனைத்து வேலைகளைச் செய்யவும் ஒரு நிறுவனத்துக்கு சமூகப் பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள். தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இந்த படிப்புக்கு வேலை வாய்ப்பினை அளிக்கின்றன. பெரிய தொழில்நிறுவனங்களில், சேவை நிறுவனங்களில், வணிக நிறுவனங்களில் மனிதவள மேம்பாட்டுப் பிரிவில் இந்தப் படிப்பு படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு உள்ளது. மனித வளத்தை மேம்படுத்தவும், நிர்வகிக்கவும் ஆர்வமுள்ள ஒவ்வொரு மாணவருக்கும் உகந்த படிப்பு இது'' என்றார்.
- எஸ்.பாலசுந்தரராஜ்




 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com