சுய ஒழுங்கு... எவற்றில் எல்லாம்? 

சுய ஒழுக்கத்தை ஒவ்வொருவரும் கடைப்பிடிக்க வேண்டும். சிறுவயதில் ஒழுக்கத்தை கற்றுக் கொண்டால் தான், வாழ்நாள் முழுவதும் ஒழுக்கத்தை கடைப்பிடிக்க முடியும்
சுய ஒழுங்கு... எவற்றில் எல்லாம்? 

சுய ஒழுக்கத்தை ஒவ்வொருவரும் கடைப்பிடிக்க வேண்டும். சிறுவயதில் ஒழுக்கத்தை கற்றுக் கொண்டால் தான், வாழ்நாள் முழுவதும் ஒழுக்கத்தை கடைப்பிடிக்க முடியும். அறிவை ஒவ்வொருவரும் முறையாகப் பயன்படுத்தினால், ஒவ்வொரு தனிநபரும் சாதனை படைக்க முடியும்.
 வெற்றிகரமான தொழில் நிறுவன தலைமை செயல் அதிகாரிகள், அரசியல் தலைவர்கள், தலைமைப் பொறுப்புகளில் இருந்து வழிநடத்துபவர்கள் போன்றோருக்கும், சாதாரண வாழ்க்கை நடத்தும் பிறருக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் எவை?
 வெற்றிகரமான மக்கள் தங்கள் வாழ்க்கையை சுய ஒழுக்கக் கோட்பாடுகளின்படி நடத்துகின்றனர்.
 மனித பலவீனங்களை வெல்தல், நேர்மறை நடத்தைகளைக் கடைப்பிடித்தல், சிறப்பான பழக்க, வழக்கங்கள் போன்றவற்றின் மூலம் எந்த பணியிலும் உயர்வைப் பெற முடியும்.
 சுய ஒழுக்கத்தின் மூலம் ஒருவர் அனைத்து தடைகளை எதிர்கொண்டு வெற்றி பெறும் நிலையை அடைவார்.
 சுய ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க என்ன செய்ய வேண்டும்?
 சீரிய சிந்தனை: சுய ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க அமைதியான வகையில் ஒருவர் சிந்திக்க நேரம் ஒதுக்க வேண்டும். பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக 30 முதல் 60 நிமிடங்கள் வரை அமர்ந்து சிந்திக்க வேண்டும். மேலும் வித்தியாசமாக ஏதாவது செய்யும் வகையில் சிந்தித்துச் செயல்படலாம்.
 தினசரி குறிக்கோளுக்கு திட்டமிடல்: ஓரே சீரான மனநிலை வெற்றிக்கு தேவைப்படுகிறது. "எனது வாழ்க்கைக்கு நான் என்ன செய்ய வேண்டும்?' என உங்களையே நீங்கள் கேட்டுக் கொள்ள வேண்டும். குறுகிய எல்லைகளுக்குள் உங்களை சுருக்கிக் கொள்ளாதீர்கள். ஒரு லேப்டாப் அல்லது ஐபேட் அல்லது ஸ்பைரல் நோட்டுப் புத்தகத்தை எடுத்து 10 குறிக்கோள்களை எழுதுங்கள். இவற்றுக்கு காலக்கெடு நிர்ணயித்துக் கொள்ளுங்கள். எடுத்துக்காட்டாக, நான் இதற்குள் இந்தப் படிப்பை முடிப்பேன் அல்லது புகை பிடிக்காத நல்ல உடல் தகுதியுடன் கூடிய மகிழ்ச்சியான மனிதனாக மாறுவேன் எனத் திட்டமிடலாம். இப்படி திட்டமிடுவதைத் தொடர்ந்து 21 நாள்கள் வழக்கமாக செய்தால், உங்கள் வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்படும்.
 தினசரி நேர மேலாண்மை:அன்றாட பணிக்குள் செல்வதற்குள், அந்த நாளை தொடங்குவதற்குள் நாம் அன்று என்ன செய்ய வேண்டும், என இரவில் எழுதிக் கொள்ள வேண்டும். இவற்றை கீழ்கண்ட வாறு வகைப்படுத்தலாம். கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் சிலவற்றை செய்ய வேண்டும், மெல்லிய விளைவுகளை ஏற்படுத்தும் சிலவற்றை மேற்கொள்ள வேண்டும், தீய விளைவுகள் இல்லாத சிறப்பானவற்றை மேற்கொள்ள வேண்டும் என ஒவ்வொரு செயலுக்கும் நேரம் ஒதுக்க வேண்டும்.
 அச்சமின்மை: தோல்வியின் அச்சத்தில் இருந்து வெளிவந்து, நம்மால் செய்ய முடியாது என நினைத்துக் கொண்டிருப்பவற்றை அழித்து விட வேண்டும். நம்மிடம் உள்ள தகுதி திறமையை நாம் தெரிந்து கொள்ள தைரியத்துடன் பல்வேறு பிரச்னைகனை எதிர்கொள்ள வேண்டும். நாம் அஞ்சும் ஒரு செயலை தவறாமல் செய்தால், அச்சத்துக்கு இறப்பு நிச்சயம். நமது மனதில் நிலவும் அச்சத்தை நீக்கி, "என்னால் முடியும், என்னால் முடியும்' என திரும்பத் திரும்ப கூறிவந்தால், தைரியம் உருவாகும். அதன்பின் எதையும் எளிதாக செய்து விடமுடியும்.
 சிறப்பான சுகாதாரம்: 100 ஆண்டுகள் வாழ வேண்டும் என்ற நோக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு, வலிமையான உடற்கட்டை வடிவமைத்துக் கொண்டு சிறந்த சுகாதார அம்சங்களைப் பின்பற்ற வேண்டும். குறைவாகச் சாப்பிட்டு, அதிக உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும். வெற்றிகரமான தலைமை செயல் அலுவலர்கள் உள்ளிட்டோர் நாள்தோறும் அதிகாலை 5 மணிக்கு எழுந்து, தங்கள் பணிகளைத் தொடங்கும் முன்னர் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்கின்றனர். இதனால் அவர்களுக்கு தேவையான என்டார்பின் என்ற திரவம் உடலில் அதிகரித்து உற்பத்தி திறன் பெருகி, மகிழ்ச்சியாக விளங்க உதவும். மேலும் மாவு, சர்க்கரை, உப்பு, (அரிசி) போன்ற உணவு வகைகளை தவிர்த்து, அதிக அளவில் பழங்கள், காய்கறிகளை, புரதச்சத்தை உண்ண வேண்டும். அதோடு அதிக தண்ணீர் குடிக்க வேண்டும்.
 முறையாக சேமித்தல், முதலீடு செய்தல்: நாம் பொருளாதாரரீதியில் சுதந்திரம் பெறுவதையும், கடன் வாங்குவதை தவிர்ப்பதையும் குறிக்கோளாகக் கொள்ள வேண்டும். கடனுக்கு பொருள்களை வாங்குதல் எப்போதும் உங்கள் வாழ்க்கையை கடனுக்குள்ளேயே தள்ளி விடும். பணத்தைச் சேமிக்கும் பழக்கத்தை தொடங்கி, தேவையானவற்றில் நிதியை முதலீடு செய்ய வேண்டும். நாம் சம்பாதிப்பதில் 10, 15 அல்லது 20 சதவீதம் வரை வாழ்நாள் முழுவதும் சேமித்து வர வேண்டும். அப்படிச் செய்ய சுய ஒழுக்கத்தைக் கடைப்பிடித்தல் மிகவும் அவசியம்.
 - பி.சுஜித்குமார்
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com