குழந்தைகள் பாதுகாப்பு குறித்த கல்வி!

உலகம் முழுவதும் பல்வேறு வடிவங்களில் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் நடைபெற்று வருகின்றன
குழந்தைகள் பாதுகாப்பு குறித்த கல்வி!

உலகம் முழுவதும் பல்வேறு வடிவங்களில் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் நடைபெற்று வருகின்றன. பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள், குழந்தை களைக் கடுமையாக வேலை வாங்குவது, குழந்தைகளைப் புறகணித்தல், குழந்தைகளைக் கடத்துவது உட்பட பலவிதங்களில் குழந்தைகளுக்கு எதிரான பல்வேறு கொடுமைகள் நடந்து வருகின்றன. 
வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் புனர்வாழ்வுக்காகவும், குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகளை தடுக்கவும், குழந்தைகளுக்கு எதிராக வன்கொடுமையில் ஈடுபடுபவர்களை சட்டத்தின் முன்பு நிறுத்தி தண்டனை பெற்றுத் தருவதற்காகவும் உலகம் முழுவதும் பல்வேறு அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. அத்தகைய அமைப்புகள் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகளில் இருந்து அவர்களைக் காப்பாற்றி அவர்களுக்கு தேவையான கல்வியை வழங்குவது போன்ற சேவையை மேற்கொண்டு வருகின்றனர்.
அத்தகைய அமைப்புகளில் பணிபுரிய விருப்பமுள்ளவர்கள் குழந்தைகளைப் பாதுகாத்தல் குறித்த கல்வி அறிவைப் பெற்றிருக்க வேண்டும். அதே போல குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பை தொடங்க விருப்பமுள்ளவர்களும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த கல்வியைப் பெற்றிருக்க வேண்டும்.
குழந்தைகள் பாதுகாப்பு (சைல்ட் புரோடெக்ஷன்) குறித்த கல்வியை வழங்கும் சில நிறுவனங்கள் :
Child in Need Institute - CINI - http://www.cini-india.org/news-and-press/a-tiss-certified-bachelors-of-vocational-education-in-child-protection-at-cini/
Amity Child Protection Centre (ACPC) - http://www.amity.edu/events/eventdetails.asp?id=355
 Child Protection Centre, Sardar Patel University of Police, security and Criminal Justice, Jodhpur - http://www.policeuniversity.ac.in/centers.php?id=7
- எம்.ஏ.குமார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com