வாங்க இங்கிலீஷ் பேசலாம் 130 

புரொபஸர், கணேஷ் மற்றும் ஜூலி டிபன் சாப்பிட ஓர் உணவகத்துக்குச் செல்கிறார்கள். அங்கு அவர்கள் உணவருந்திய பின் பில்லை செலுத்தி விட்டு கிளம்ப முனைகிறார்கள்
வாங்க இங்கிலீஷ் பேசலாம் 130 

புரொபஸர், கணேஷ் மற்றும் ஜூலி டிபன் சாப்பிட ஓர் உணவகத்துக்குச் செல்கிறார்கள். அங்கு அவர்கள் உணவருந்திய பின் பில்லை செலுத்தி விட்டு கிளம்ப முனைகிறார்கள். அப்போது அந்த உணவகத்தின் உரிமையாளர் அங்கு தோன்றுகிறார். நீண்ட தாடி வைத்த உயரமான சிவப்பான மனிதர். அவர் நடந்து வருகையில் முன்னால் ஒரு பணியாள் தரையைப் பெருக்கியபடி வருகிறார். அதைக் கண்டு ஆச்சரியம் கொள்ளும் புரொபஸர் சர்வரை அழைத்து விசாரிக்கிறார். 
புரொபஸர்: ஏம்பா உங்க ஹோட்டல்ல மொத்தமா பெருக்க மாட்டீங்களா? ஆள் நடக்க நடக்கத் தான் பெருக்குவீங்களா?
சர்வர்: அப்படி இல்ல சார். எங்க முதலாளி எந்த உயிரையும் துன்புறுத்துவதை ஏற்க மாட்டார். தான் நடந்து வரும் போது ஒரு எறும்பு கூட தன் காலடியில் நசுங்கி சாகக் கூடாதே எனும் அக்கறையில் தான் அப்படி பெருக்கி வழியைச் சுத்தமாக்குகிறார். He is a pacifist. யாரையும் துன்புறுத்தாதவர். அன்பின் சொரூபம்.
புரொபஸர்: Pacifist என்று சொல்லக் கூடாது. You can say  “He is one who practices Ahimsa or a practitioner of Ahimsa'.
சர்வர்: ஏன்?
புரொபஸர்: Pacifist என்பவர் யுத்தத்துக்கு எதிரானவர். அமைதியை வேண்டுபவர். தனிப்பட்டு வன்முறையை தவிர்ப்பவர். அஹிம்சாவாதி. Pacifistக்கு இன்னொரு சொல் eacenik. ராணுவத்தில் போரிட விரும்பாமல் மறுக்கிறவர்கள் இருக்கிறார்கள். ஒன்று தம் மதம் அதை ஏற்காததனாலோ அல்லது அற விழுமியங்களுக்கு போர் எதிரானது என்பதனாலோ இருக்கலாம். இவர்களை conchies என கேலியாய் அழைத்தார்கள்.
சர்வர்: ஓ! இப்படியானவர்கள் இப்போது உண்டா?
புரொபஸர்: பெரும்பாலும் இல்லை. உலகப் போரின் போது ஐரோப்பாவில்  pacifistகள் அதிகம் இருந்தார்கள். 
சர்வர்: அப்படியெனில் அடுத்தவரை நோகடிப்பதில் தனி இன்பம் காண்பவர்கள்?
புரொபஸர்: Sadists
சர்வர்: Sad(வருத்தம்) எனும் சொல்லில் இருந்து தோன்றியதோ?
புரொபஸர்: இல்லை. இதன் வரலாற்றை அறிந்தால் நீ ஆச்சரியப்படுவாய்?
சர்வர்: சொல்லுங்க. I am all ears.
புரொபஸர்:  Marques de Sade கேள்விப்பட்டிருக்கிறாயா?
சர்வர்: இல்லையே ஏதாவது கொடுங்கோலரா? கொலைகாரனா?
புரொபஸர்: சேச்சே... ஜூலி நீயே விளக்கு.
ஜூலி: Marques de Sade ஒரு பிரஞ்சு நாவலாசிரியர். உச்சரிப்பு மார்க்கி டெ சேட்.18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். பிரபு குடும்பத்தில் பிறந்தவர். அந்த ஊர் தேவதாஸ். ஆனால் காதலியை எண்ணி ஏங்காமல் உடல் இன்பத்தை நாடி அலைந்தார். உடல் சுகம் என்பது கடும் வலியில் இருந்து மட்டுமே தோன்றும் என நம்பினார். மனிதனின் உண்மையான இயல்பு என்பது துன்புறுத்தும் விருப்பத்திலே உறைந்துள்ளது என்றார். இந்த கோணத்தில் அவர் எழுதிய பாலியல் நாவல் தான் 100 Days of Sodom. இதைப் படித்தால் மெர்ஸலாகி விடுவாய். உன்னால் கொஞ்ச நாள் இயல்பாகவே இருக்க முடியாது. 1950 வரை பிரான்ஸில் இந்நாவல் தடை செய்யப்பட்டிருந்தது. இப்படி பிறரை துன்புறுத்தியே உச்சகட்ட இன்பத்தை காண முடியும் என நம்பின இவர் பெயரை கொண்டு தான் sadism என்ற சொல்லே தோன்றியது. ஆனால் இன்று நாம் மெல்ல மெல்ல இச்சொல்லின் வரலாற்றை, இதன் அசலான அர்த்தத்தை மறந்து விட்டோம். யாராவது இன்னொருவரை நச்சரித்தாலோ கடுப்பேற்றினாலோ "சரியான சாடிஸ்ட் அவன்" என்கிறோம்.
சர்வர்: ஆனால் நம்மை நேசிக்கிறவர்கள் ஏன் இப்படி நம்மை கொஞ்சம் கொஞ்சமாய் கொல்லுகிறார்கள்?
ஜூலி: ஜாக்கியைச் சொல்கிறாயா?
சர்வர்: ஆமாம். அவளிடம் கொஞ்ச நேரம் பேசினால் ஓடிப் போய் கிணற்றில் குதித்து விடலாம் என இருக்கும். ஆனால் நாங்கள் பரஸ்பரம் உயிருக்குயிராய் நேசிக்கிறோம்.
ஜூலி: இதைப் பற்றித் தான் சேட் பேசினார். மிதமிஞ்சிய அன்பை வேறெப்படி காட்ட என அவளுக்குத் தெரியவில்லை.
சர்வர்: வாவ், நன்றி ஜூலி. You are an eye-opener.
புரொபஸர்: ஒரு நபரை eye-opener என்று சொல்லக் கூடாது. ஒரு சம்பவமோ சந்தர்ப்பமோ மட்டுமே eye-opener.
சர்வர்: ஓகே சார். ஜூலி Speaking to you proved to be an eye-opener.
ஜூலி: வெரி குட்.
புரொபஸர்: சரி... நாங்க கிளம்பறோம்.
சர்வர்: இருங்க சார். எங்க முதலாளியை ஒருவாட்டி சந்திச்சிட்டு போங்க. He is an exceptional man, full of the milk of human kindness.
கணேஷ்: இதென்ன மில்க்?
புரொபஸர்: ஷேக்ஸ்பியரின் மெக்பத் எனும் நாடகத்தில் வரும் சொற்றொடர். இது. பின்னர் வெகுபிரசித்தமான ஒரு idiom ஆகி விட்டது.
(இனியும் பேசுவோம்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com