ஸ்மார்ட் கான்டாக்ட் லென்ஸ்! 

ஸ்மார்ட் கான்டாக்ட் லென்ஸ்! 

மனிதர்களின் உடலில் சர்க்கரையின் அளவு குறைந்தாலும், கூடினாலும் பிரச்னைதான். முன்பெல்லாம் வயதானவர்களைப் பாதித்து வந்த சர்க்கரை நோய், தற்போது இளைஞர்களையும் விட்டு வைக்கவில்லை.

மனிதர்களின் உடலில் சர்க்கரையின் அளவு குறைந்தாலும், கூடினாலும் பிரச்னைதான். முன்பெல்லாம் வயதானவர்களைப் பாதித்து வந்த சர்க்கரை நோய், தற்போது இளைஞர்களையும் விட்டு வைக்கவில்லை.
 உடலில் உள்ள சர்க்கரையின் அளவைக் கண்டுபிடிக்க குறைந்தது ஒரு துளி ரத்தத்தையாவது சிந்த வேண்டியுள்ளது. அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியின் மூலம் இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண, உலகம் முழுவதும் ஆராய்ச்சியாளர்கள் இடைவிடாது உழைத்து வருகின்றனர். இதில், பல்வேறு வகையில் கண்டுபிடிப்புகள் வந்தாலும் அது துல்லியமாக இல்லாத காரணத்தால் மக்களிடையே வரவேற்பைப் பெறவில்லை.
 தென் கொரியாவைச் சேர்ந்த உல்சன் தேசிய அறிவியல் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், சர்க்கரையின் அளவைக் கண்டுபிடிக்கும் ஸ்மார்ட் கான்டாக்ட் லென்ûஸக் கண்டுபிடித்துள்ளனர்.
 இந்த ஸ்மார்ட் கான்டாக்ட் லென்ûஸ சாதாரணமாக அணிந்து கொண்டால்போதும், கண்ணீரை வைத்தே சர்க்கரையின் அளவை அது கண்டுபிடித்து விடுகிறது.
 கான்டாக்ட் லென்ஸில் உள்ள குளுக்கோஸ் சென்சார்கள் சர்க்கரையின் அளவைக் கண்டுபிடித்து, வயர்லஸ் ஆன்டெனா மூலம் தகவல்களை அனுப்பியும் வைக்கிறது. பேட்டரிகள் பயன்பாடு இல்லாமலே ஸ்மார்ட் கான்டாக்ட் லென்சுகள் இயங்குவதால் இது பார்க்கும் திறனுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை.
 மேலும், கண்ணீரில் உள்ள சர்க்கரையின் அளவைக் கணக்கிடும்போது கண்களுக்கு அதனால் பாதிப்புகள் ஏதும் ஏற்படவில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஸ்மார்ட் கான்டாக்ட் லென்ûஸ முயல்களின் கண்களில் பொருத்தி சோதனை செய்து பார்த்தார்கள். அதனால் முயலின் கண்களுக்கு எந்தவிதப் பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
 - அ.சர்ஃப்ராஸ்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com